Digital Time and Date

Welcome Note

Thursday, March 28, 2013

யூத மதகுரு நபி(ஸல்) அவர்களை அல்லாஹ்வின் துாதர் என ஏற்றுக் கொண்ட சம்பவம்.



யூத மதகுரு நபி(ஸல்) அவர்களை அல்லாஹ்வின் துாதர் என ஏற்றுக் கொண்ட சம்பவம்.
********************************************

நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்திருக்கும்
செய்தி அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி) அவர்களுக்கு (அவர்கள் யூத
மதத்திலிருந்தபோது) எட்டியது. உடனே அவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து,
'தங்களிடம் நான் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகிறேன். அவற்றை ஓர்
இறைதூதர் மட்டுமே அறிவார்" என்று கூறினாக்hள். பிறகு,

'1 இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது?

2. சொர்க்கவாசி முதலில் உண்ணும் உணவு எது?

3. குழந்தை தன் தந்தையை (சாயலில்) ஒத்திருப்பது எதனால்?) அது (சாயலில்)
தன் தாயின் சகோதரர்களை ஒத்திருப்பது எதனால்?' என்று கேட்டார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'சற்று முன்பு தான் (வானவர்) ஜிப்ரீல் எனக்கு
இவற்றைக் குறித்து (விளக்கம்) தெரிவித்தார்" என்று கூறினார்கள். உடனே,
அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி), 'வானவர்களிலேயே ஜிப்ரீல் யூதர்களுக்குப்
பகைவராயிற்றே!" என்று கூறினார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள்,

# 'இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடைளாயம் ஒரு நெருப்பாகும். அது
மக்களைக் கிழக்கிலிருந்து (துரத்திக் கொண்டு வந்து) மேற்குத் திரைசயில்
ஒன்று திரட்டும்.

#சொர்க்கவாசிகள் முதலில் உண்ணும் உணவு பெரிய மீனின் ஈரல் பகுதியில் உள்ள அதிகப்படியான சதையாகும்.

#குழந்தையிடம் காணப்படும் (தாயின் அல்லது தந்தையின்) சாயலுக்கு காரணம்,
ஆண் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அவனுடைய நீர் (விந்து உயிரணு)
முந்தினால் குழந்தை அவனுடைய சாயலில் பிறக்கிறது. பெண்ணின் நீர் (கருமுட்டை
உயிரணு) முந்தினால் குழந்தை அவளுடைய சாயலில் பிறக்கிறது" என்று
பதிலளித்தார்கள்.

(உடனே) அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி), 'தாங்கள் இறைத்தூதர் தாம் என நான் சாட்சி கூறுகிறேன்" என்று கூறினார்கள்.

பிறகு, 'இறைத்தூதர் அவர்களே! யூதர்கள் பொய்யில் ஊறித் திளைத்த
சமுதாயத்தினர் ஆவர். தாங்கள் என்னைப் பற்றி அவர்களிடம் கேட்கும் முன்பாக,
அவர்கள் நான் இஸ்லாத்தை ஏற்றதை அறிந்தால் என்னைப் பற்றி (அவதூறு
கற்பித்துத்) தங்களிடம் பொய்யுரைப்பார்கள்" என்று கூறினார்கள்.


அப்போது யூதர்கள் நபி(ஸல்) அவர்களிடம்) வந்தார்கள். உடனே, அப்துல்லாஹ்
இப்னு ஸலாம்(ரலி) வீட்டினுள் புகுந்(து மறைந்)தார்கள். இறைத்தூதர்(ஸல்)
(யூதர்களிடம்), 'உங்களில் அப்துல்லாஹ் இப்னு ஸலாம் எத்தைகைய மனிதர்?' என்று
கேட்டார்கள்.

அதற்கு அவர்கள், 'அவர் எங்களில் (மார்க்க) அறிவு
மிக்கவரின் மகனும் ஆவார்; எங்களில் அனுபவமும் விவரமும் மிக்கவரும்,
அனுபவமும் விவரமும் மிக்கவரின் மகனும் ஆவார்" என்று பதிலளித்தார்கள்.

உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அப்துல்லாஹ் இப்னு ஸலாம்) இஸ்லாத்தை
ஏற்றார் என்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?' என்று கேட்டார்கள்.

அதற்கு அவர்கள், 'அல்லாஹ் அவரை அதிலிருந்து காப்பாற்றுவானாக!" என்று கூறினார்கள்.

உடனே (வீட்டினுள் மறைந்து கேட்டுக் கொண்டிருந்த) அப்துல்லாஹ் இப்னு
ஸலாம்(ரலி) வெளியே வந்து, 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர
வேறெவருமில்லை என்று நான் சாட்சியம் கூறுகிறேன். மேலும், முஹம்மத்(ஸல்)
அவர்கள் அல்லாஹ்வின் தூதரவார்கள் என்றும் நான் சாட்சியம் கூறுகிறேன்" என்று
கூறினார்கள்.

உடனே யூதர்கள், 'இவர் எங்களில் கெட்ட வரும்
எங்களில் கெட்டவரின் மகனும் ஆவார்" என்று சொல்லிவிட்டு அவரைக் குறித்து
(இல்லாத குற்றங்களைப் புனைந்து) அவதூறு பேசலானார்கள்.

அனஸ்(ரலி) அறிவித்தார்

ஸஹீஹ் புகாரி 3329.

No comments:

Post a Comment