நிலநடுக்கம் ஓர் ஏச்சரிக்கையா?
விஞ்ஞானம் அசுர வளர்ச்சி அடைந்துவரும் நேரத்தில் விஞ்ஞானிகளால் தடுக்கமுடியாத பெரும் சேதங்களும் உலகத்தில் நடக்கத்தான் செய்கின்றன.
விஞ்ஞான வளர்ச்சியில் உச்சத்தில் இருக்கும் ஜப்பான், அமெரிக்கா போன்ற
நாடுகளிலும் கூட மிகப்பெரிய சேதங்கள் ஏற்படுகின்றன. சுனாமி போன்ற
பேராபத்துகள் வளர்ச்சியடைந்த பெருநாடுகளைக்கூட விட்டுவைக்கவில்லை.
2004 ஆம் ஆண்டு இந்தியா, இலங்கை போன்ற நாடுகளைத் தாக்கிய சுனாமியை யாரும்
மறந்திருக்க மாட்டார்கள். பல அதிசயமான நிகழ்வுகளையும் ஆச்சரியக் கண் கொண்டு
பார்த்தவர்கள் ஏராளம். இவ்வளவு பெரிய பயங்கரம் நடக்குமா? என்று கற்பனை
செய்து பார்க்க முடியாத அளவு பனைமரம் உயரத்திற்கு கடல் அலைகள் ஏற்பட்டு பல
லட்சம் மக்களை அள்ளிக் கொண்டு சென்றது.
பூமி பல அடுக்குகளாக
அமைந்திருப்பதும் பூமிக்குள் நெருப்பு குழம்புகள் இருப்பதும் இது போன்ற நில
நடுக்கங்கள் ஏற்பட காரணமாக அமைகிறது.
பூமியின் மேற்பரப்பு
பெரும் பாளங்களாக அமைந்துள்ளது. இவை நகரும் பிளேட்டுகளாக இருக்கிறது.
நிலப்பரப்பிலும், நீரின் அடியிலுமாக உள்ள இவற்றில் ஏழு பிளேட்டுகள் மிகப்
பெரியதாகவும், குறைந்தது ஒரு டஜன் சிறிய பிளேட்டுகளும் உள்ளன.
இந்தப் பிளேட்டுகள் சுமார் 80 கி.மீ. வரை தடிமன் கொண்டதாக இருக்கிறது.
இதனடியில் பாறைகள் கொதிக்கும் குழம்பாக இருப்பதாலும், பூமியின் சுழற்சி
வேகத்தில் இந்தப் பாறைக் குழம்பு நகர்வதாலும், மேலே இருக்கும் பிளேட்டுகள்
ஒன்றுடன் ஒன்று உராய்வதுடன் நகர்ந்தும் செல்கிறது.
இந்தப்
பிளேட்டுகள் ஒரு வருடத்திற்கு ஒரு செ.மீ. முதல் சுமார் 13 செ.மீ. வரை
நகர்கிறது. இது நமது உலக வேகத்திற்கு மிக சிறியதாக இருந்தாலும் இந்த
பிளேட்களின் லேசான உராய்வும் கூட பெரும் பூகம்பம் ஏற்படுத்தக் கூடியவை.
சிறிய உராய்வு கூட ஒரு நாட்டையே தலைகீழாக மாற்றிப் போடும் வாய்ப்பு
உள்ளது. குறிப்பாக இந்தியாவில் இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நிகழ
ஆரம்பித்துள்ளது.
இந்தோனேஷியாவின் சும்தரா தீவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு அதைச் சுற்றியுள்ள நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
மனிதர்களைச் சோதிப்பதற்காக அல்லாஹ் இது போன்ற இடர்களை ஏற்படுத்துவான்.
மனிதர்கள் தங்கள் செயல்களை மதிப்பீடு செய்வதற்காகவும் இதன் பின்னர்
திருந்தி வாழ்வதற்காகவும் இதுபோன்ற சோதனைகளை ஏற்படுத்துவதாக அல்லாஹ்
கூறுகிறான்.
ஒவ்வொரு வருடமும் ஒரு தடவையோ, இரண்டு தடவைகளோ
தாங்கள் சோதிக்கப்படுவதை அவர்கள் உணர மாட்டார்களா? பின்னரும் அவர்கள்
திருந்திக் கொள்ளவில்லை. படிப்பினை பெறுவதுமில்லை.
[அல்குர்ஆன் 9:126]
இதை உணர்ந்து நடக்கும் நல்லவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள்வானாக......
No comments:
Post a Comment