Digital Time and Date

Welcome Note

Wednesday, February 13, 2013

ஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்?

ஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள் என்பதற்கு பல சுவாரஸ்யமான காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றில் எட்டு:

1. ரிமோட் கண்ட்ரோல் என்பது ஆண்களுக்கு ஒரு விதமான சக்தி தருகிறது. 'நான்தான் குடும்பத் தலைவன். எனக்குக் கீழ்ப்படிந்துதான் டி.வி. உள்பட எல்லாரும் இயங்க வேண்டும்' என்கிற ஆணாதிக்கச் செயல் என்கிறார்கள்.

2. ஒரு மனைவியின் கூற்றின்படி... 'என் கணவரால் என்னை கண்ட்ரோல் பண்ண முடியவில்லை. ரிமோட் கண்ட்ரோலை இம்சை செய்கிறார்.'

3. ஆண்களின் ஆதிகால வேட்டையாடும் குணத்தின் நவீன வடிவம் இது. கையில் ரிமோட் வைத்திருக்கும் ஆண் சுவாரஸ்யமான இரைகளைத் தேடும் வேட்டை மிருகம்.

4. ஆண்களுக்கு உடனடியாக காரியம் நடக்க வேண்டும். மேலும் கொஞ்சம் சந்து கிடைத்தால் 'அங்கே என்ன ஓடிக்கொண்டிருக்கிறது... அதைத் தவறவிடக்கூடாது' என்கிற எட்டிப் பார்க்கும் ஆசையும் உண்டு.

5. எப்போதுமே ஆண்களுக்குக் கொஞ்சம் அலையும் ஆசையும், இருக்கிறதை விட்டுப் பறக்கிறதைப் பிடிக்கும் ஆசையும் உண்டு. 'இதைப் பார்த்தாகிவிட்டதே... வேறு எதாவது கிடைக்கிறதா பார்ப்போம்' என்கிற நப்பாசை.

6. ஒரு எலி, பூனை, நாய் போல பாவ்லாவியன் ரிஃப்ளக்ஸாக (Pavlovian Reflex) பட்டனை அழுத்தும்போதெல்லாம் சந்தோஷம் கிடைத்தால் அதிகம் சேனல் மாற்றமாட்டார்கள். ஆனால், அப்படிக் கிடைப்பதில்லை. அதனால் சந்தோஷத்தைத் தேடி இன்னும் இன்னும் தாவல்.

7. ரிமோட் கண்ட்ரோல் என்பது, ஒரு கணவன் தன் மனைவியைச் சுலபமாக வெறுப்பேற்றுவதற்கான சாதனம்.

8. ஒரு மனைவி எழுதியிருந்தார் - 'என் கணவனுக்கு பக்கவாதம் வந்து மெள்ள மெள்ள செயலிழந்து கொண்டிருந்தார். கடைசிவரை அவரால் தன்னிச்சையாகச் செய்ய முடிந்த காரியம் - ஒரு பென்சிலை வாயில் வைத்துக் கொண்டு மிகுந்த சிரமத்துடன் ரிமோட்டின் பட்டனை அமுக்குவதே. அந்தக் காரியம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அதையும் இழந்த பின் அவர் இறந்துபோனார்.'

- சுஜாதா
கற்றதும் பெற்றதும் நூலில் இருந்து..

No comments:

Post a Comment