பெப்ரவரி 9
நிகழ்வுகள்
1822 - ஹெயிட்டி புதிதாக அமைக்கப்பட்ட டொமினிக்கன் குடியரசை முற்றுகையிட்டது.
1825:
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் தேர்தல் கல்லூரி
வாக்குகளில் பெரும்பான்மையைப் பெறாததால் செனட் சபை உறுப்பினர்கள் ஜோன்
குயின்ஸி அடம்ஸை ஜனாதிபதியாக தெரிவு செய்தனர்.
1849: புதிய ரோம குடியரசு ஸ்தாபிக்கப்பட்டது.
1885 - முதலாவது ஜப்பானியர் ஹவாய் தீவை வந்தடைந்தனர்.
1895 - வில்லியம் மோர்கன் volleyball ஐக் கண்டுபிடித்தார்.
1897 - பெனின் மீது பிரித்தானியர் தாக்குதலை ஆரம்பித்தனர்.
1900 - இலங்கையிலும், இந்தியாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
1900 - டேவிஸ் கோப்பை டென்னிஸ் பந்தயம் ஆரம்பிக்கப்பட்டது.
1904 - போர்ட் ஆர்தர் சமர் ஆரம்பித்தது.
1942 - ஐக்கிய அமெரிக்காவில் பகலொளி சேமிப்பு நேரம் அறிமுகப்படுத்தப்பட்டது.
1950:
அமெரிக்க இராஜாங்கத்திணைக்கள ஊழியர்களில் சுமார் 200 பேர்
கம்யூனிஸ்ட்டுகளாக இருப்பதாக செனட் சபை உறுப்பினர் ஜோசப் மெக்கர்;தி
கூறினார்.
1959: உலகின் முதலாவது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையான ஆர்-7 சேம்யோர்க்கா, ரஷ்யாவினால் செயற்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
1962 - பொதுநலவாய அமைப்பினுள் ஜமெய்க்கா விடுதலை பெற்றது.
1965 - வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்க தாக்குதல் படைப்பிரிவு முதற்தடவையாக தென் வியட்நாமிற்கு அனுப்பப்பட்டது.
1969 - போயிங் 747 விமானத்தின் முதற் சோதனைப் பறப்பு மேற்கொள்ளப்பட்டது.
1971 - கலிபோர்னியாவில் 6.4 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
1971 - அப்பல்லோ 14 விண்கலம் மூன்று அமெரிக்கர்களுடன் பூமி திரும்பியது.
1975 - சோயூஸ் 17 விண்கலம் பூமி திரும்பியது.
1986 - ஹேலியின் வால்மீன் சூரியனுக்கு அண்மையில் எட்டரைக் கோடி கிமீ தூரத்தில் வந்தது.
1991 - லித்துவேனியாவில் விடுதலைக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்தார்கள்.
1996
- ஐரிஷ் குடியரசு இராணுவம் தனது 18 மாத யுத்த நிறுத்த உடன்பாட்டினை
முறித்துக்கொண்ட சில மணி நேரத்தில் லண்டனில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில்
இருவர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
1773 - வில்லியம் ஹென்றி ஹாரிசன், ஐக்கிய அமெரிக்காவின் 9வது குடியரசுத் தலைவர் (இ. 1841)
1910 - ஜாக் மொனோட், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1976)
1940 - ஜே. எம். கோட்ஸி, நோபல் பரிசு பெற்ற தென்னாபிரிக்க எழுத்தாளர்
1943 - ஜோசப் ஸ்டிக்லிட்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்
1970 - கிளென் மெக்ரா, அவுஸ்திரேலியத் துடுப்பாட்டக்காரர்
1979 - சாங் சீயீ, சீனத் திரைப்பட நடிகை
இறப்புகள்
1881 - பியோதர் தஸ்தயெவ்ஸ்கி, இரசிய நாவலாசிரியர் (பி. 1821)
1977 - ஜி. ஜி. பொன்னம்பலம், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் (பி. 1901)
1979 - டெனிஸ் காபோர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1900)
1984 - யூரி அந்திரோபொவ், சோவியத் அதிபர் (பி. 1914)
1994 - ஹ்வார்ட் டெமின், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1934)
2001 - ஹேர்பேர்ட் சைமன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (பி. 1916)
No comments:
Post a Comment