Digital Time and Date

Welcome Note

Monday, September 17, 2012

இதுவரை 20- 20 போட்டிகளில் நடந்த சாதனைகளும், சோதனைகளும்.. ஒரு சுவாரஸ்ய பார்வை.


 

நான்காவது 20- 20 உலகக் கோப்பை நாளை நடைபெற இருக்கும் அதேவேளை இதுவரை 20- 20 போட்டிகளில் நடந்த சாதனைகளும், தோல்விகளும் ஒரு பார்வை..

* 2007 உலககோப்பையில் கென்யாவுக்கு எதிராக இலங்கை 6 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் குவித்ததே அதிகபட்ச ஸ்கோர்.


* 2010ல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் அயர்லாந்து 68 ரன்னில் சுருண்டது. இதுதான் குறைந்த ஸ்கோர்.

* இலங்கையின் ஜெயவர்த்தனே 18 ஆட்டங்களில் 615 ரன் குவித்துள்ளார்.

* 2009 தொடரில் தில்ஷான் 7 ஆட்டத்தில் 317 ரன் விளாசியுள்ளார்.

* கெய்ல் 57 பந்தில் 117 ரன் விளாசியுள்ளார். இதுவே ஒரு ஆட்டத்தில் தனிப்பட்ட வீரரின் அதிகபட்ச ஸ்கோர்.

* 11 ஆட்டங்களில் கெய்ல் 27 சிக்சர்கள் விளாசியுள்ளார்.

* 2007 தொடரில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 10 சிக்சர்கள் கெய்ல் விளாசினார்.

* இதே தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் யுவராஜ்சிங் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்தார்.

* நியூசிலாந்துக்கு எதிராக 2009ல் நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தானின் உமர்குல் 3 ஓவர் வீசி 5 ரன்கள் மட்டும் கொடுத்து 6 விக்கெட் சாய்த்தார். இதுவே 20-20ல் சிறப்பான பந்துவீச்சு.

* அப்ரிடி 20 ஆட்டங்களில் 27 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

* தென் ஆப்ரிக்க அணி 16 ஆட்டங்களில் ஆடி 11 வெற்றி, 5 தோல்விகளை பெற்றுள்ளது.

இந்த வரிசையில் இந்தியா 17 ஆட்டங்களில் 8 வெற்றி, 7 தோல்வி கண்டுள்ளது. ஒரு ஆட்டம் டையில் முடிந்தது. ஒரு ஆட்டம் முடிவில்லாமல் போனது.

No comments:

Post a Comment