சதாம் போல இருந்தவருக்கு மர்ம நபர்கள் மிரட்டல்
கெய்ரோ, செப். 16&
ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் போலவே இருந்தவரை ஆபாச படத்தில்
நடிக்குமாறு கூறி மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டியது அம்பலமானது.
எகிப்தின் அலெக்சாண்ட்ரியா பகுதியை சேர்ந்தவர் முகமது பிஷர். அசப்பில் ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் போலவே இருப்பார். சமீபத்தில், ஓட்டலுக்கு சென்று கொண்டிருந்த இவரை மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் கடத்தினர். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அவரை கொண்டு சென்று, நிர்வாண காட்சியில் நடிக்குமாறு கூறினர். மறுத்த அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். எவ்வளவு அடித்தும் மசியாததால் மீண்டும் வேனில் ஏற்றி சென்று கீழே உருட்டி தள்ளினர். படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பெற்றார்.
“சதாம் போல இருந்த என்னை வைத்து ஆபாச காட்சிகளை எடுத்து, சதாமே உல்லாசமாக இருந்தது போல ஆபாச வீடியோ வெளியிட அவர்கள் திட்டமிட்டிருந்தனர்” என்று முகமது கூறினார்.
அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி உறவினர்கள் மனு செய்துள்ளனர்.

No comments:
Post a Comment