Digital Time and Date

Welcome Note

Friday, September 21, 2012

###இதை முழுவதுமாக படிக்கவும் .###




------.நபி (ஸல்) அவர்களை நாம் உயிருக்கும் மேலாக நேசிக்கிறோம்....என்றும் சொல்வது....நேசமா......? அல்லது வேஷமா...?------

உலகம் போற்றும் உத்தமத்தூதர் (ஸல்) அவர்களை , இழிவு படுத்திய அயோக்கியர்களைக் கண்டித்து உலகம் முழுவதும் முஸ்லிம்கள் பல வழிகளில் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர், நமது தமிழகத்திலும், பல இயக்கங்கள், ஜமாத்துகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன
ர்...
இதற்கு அடிப்படைக் காரணம் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களை நம் உயிருக்கும் மேலாக நேசித்ததின் காரணமாக அவர்களுக்கு ஒரு இழிவு என்று வரும்போது.... அனைவருக்கும் கோவம் வந்து விடுகிறது.
இதைத்தான் மார்க்கமும் நமக்கு சொல்லித் தருகிறது....
ஆனால்... அதேசமயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்களின் மீது...
இந்த ரோஷமும், பாசமும் நம்மில் அநேகர்களுக்கு உண்மையானதா..என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்...

நபி (ஸல்) அவர்களை நாம் நேசிப்பது உண்மையானதாக இருந்தால்...நபி (ஸல்) அவர்களை இழிவு படுத்தியது யார், எந்த மதத்தைச் சார்ந்தவன் என்று பார்க்கக் கூடாது...
முஸ்லிம் அல்லாதவர்கள்தான் நபி (ஸல்) அவர்களை இழிவு படுத்தக் கூடாது...முஸ்லிம்கள் இழிவு படுத்தலாம் என்று நினைத்தால்..அவன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை உண்மையாக நேசிக்க வில்லை, நேசம் வைத்ததாக வேஷம் போடுகிறான்..
அப்படி பார்க்கும் போது... இந்த யூதன், கிறிஸ்துவன் நபி (ஸல்) அவர்களை இழிவு படுத்தியதை விட , இன்னும் அசிங்கமாக நம்மில் பலர் நபி (ஸல்) அவர்களை இழிவு படுத்துகிறார்கள்...
எவ்வாறு...??????


*** நபி (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் ஸ்தானத்தில் கொண்டு செல்வது.

*** நபி (ஸல்) அவர்களை (பரிந்துரை என்ற பெயரில்) வணங்குவது.

*** நபி (ஸல்) அவர்களின் வழி முறைகளைப் புறக்கணித்து,தனக்குப் பிடித்த மனிதர்கள்,பெரியார்கள், இமாம்களின் வழி முறைகளைப் பின்பற்றுவது .

*** நபி (ஸல்) அவர்கள் சொல்லாத, செய்யாத விஷயங்களை அவர்களின் மீது இட்டுக் கட்டி கூறுவது.

*** நபி (ஸல்) அவர்கள் மனிதப் படைப்பு அல்ல என்று, அபாண்டம் கூறுவது .

இன்னும் ஏராளம், ஏராளம் .......

இப்போது சொல்லுங்கள் .நபி (ஸல்) அவர்களை நாம் உயிருக்கும் மேலாக நேசிக்கிறோம்....என்றும் சொல்வது....நேசமா......? அல்லது வேஷமா...?


قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ

3:31. (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.


قُلْ إِن كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُم مِّنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّىٰ يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ ۗ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ


9:24. (நபியே!) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை.

No comments:

Post a Comment