டிசம்பர் 17
பாலியல் பெண் தொழிலாளர்களுக்கெதிரான வன்முறையை நிறுத்தும் அனைத்துலக நாள்
1398 - சுல்தான் மெஹ்மூடின் படைகளை டில்லியில் வைத்து டீமூர் படைகள் தோற்கடித்தன.
1577
- பிரித்தானிய அரசி முதலாம் எலிசபெத்துக்காக அமெரிக்காக்களின் பசிபிக்
பெருங்கடல் பகுதியை ஆராய்வதற்காக பிரான்சிஸ் டிரேக் இங்கிலாந்து, பிளைமவுத்
துறைமுகத்தில் இருந்து புறப்பட்டான்.
1718 - பெரிய பிரித்தானியா ஸ்பெயினுடன் போரை அறிவித்தது.
1819 - சிமோன் பொலிவார் பெரிய கொலம்பியாவின் விடுதலையை அறிவித்தான்.
1834 - அயர்லாந்தின் முதலாவது தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.
1862
- அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் டென்னசி, மிசிசிப்பி,
கென்டக்கி ஆகிய மாநிலங்களில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட உத்தரவு
பிறப்பிக்கப்பட்டது.
1903 - ரைட் சகோதரர்கள் வடக்கு கரொலைனாவில் முதன்முதலில் பன்னிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்தனர்.
1926
- லித்துவேனியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து மக்களாட்சி அரசு
கலைக்கப்பட்டு அண்டானஸ் சிமெத்தோனா ஆட்சியைப் பிடித்தார்.
1941 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியப் படைகள் வடக்கு போர்ணியோவில் இறங்கினர்.
1946
- தமிழ் நாட்டில் அவிநாசிலிங்கம் செட்டியார் கல்வியமைச்சராக இருந்த போது
அவரது பெரும் முயற்சியால் தமிழ் வளர்ச்சிக் கழகம் தொடங்கப்பட்டது
1947 - இலங்கைத் தமிழரசுக் கட்சி அமைக்கப்பட்டது.
1957 - அமெரிக்கா முதல் முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாகச் பரிசோதித்துப் பார்த்தது.
1961 - கோவாவை இந்தியா, போர்த்துக்கலிடம் இருந்து கைப்பற்றியது.
1989 - 25 ஆண்டுகளின் பின்னர் பிரேசிலில் முதலாவது பொதுத்தேர்தல் இடம்பெற்றது.
No comments:
Post a Comment