விபச்சாரமும் மதுப்பழக்கமும் பெருகும்...!
'கல்வ...ி
மக்களிடமிருந்து மறைந்து விடுவதும் அறியாமை நிலைத்து விடுவதும் மது
அருந்தப் படுவதும் வெளிப்படையாய் விபசாரம் நடப்பதும் மறுமை நாளின்
அடையாளங்களில் சிலவாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என
அனஸ்(ரலி) அறிவித்தார்.(நூல் புகாரி : 80)
ஒளிவு மறைவாக அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து வந்த விபச்சாரம்.
இன்று வெளிப்படையாக பகிரங்கமாக நடக்கின்றது.
அரசாங்கமே சிவப்பு விளக்குப் பகுதியை ஏற்படுத்துவதும் அன்னியப் பெண்களுடன்
உறவு கொள்ளும் போது ஆணுறை பயன்படுத்துங்கள் என்று பண்பாடு.
மிக்க இந்தியா போன்ற நாடுகளே செய்யும் விளம்பரமும் விபச்சாரம் எந்த அளவுக்கு பெருகிப்போயுள்ளது என்பதை உணர்த்துகிறது.
மக்களை நல்வழிப்படுத்தக் கடமைப்பட்ட அரசுகளே மதுபான விற்பனை செய்யத் துவங்கி விட்டன.
நாகரீகமான பெயர்களில் அறிமுகப்படுத்தப்படும் உயர்
ரக அன்னிய மதுவுக்கு மக்கள் அடிமைப்பட்டு வருவதும் மறுக்க முடியாத உண்மை.
No comments:
Post a Comment