Digital Time and Date

Welcome Note

Monday, April 23, 2012

மூக்கின் மேல் அடையாளம் இடுவோம்

மூக்கின் மேல் அடையாளம் இடுவோம்
______________________________________

ஒரு மனிதன...ைத் துல்லியமாக வேறுபடுத்தி அறிந்திட கைரேகையைத் தான் நிபுணர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஒருவரது கைரேகையைப் போல் இன்னொருவரின் கைரேகை இருப்பதில்லை என்பது தான் இதற்குக் காரணம். முக்கியமான ஆவணங்களில் கைரேகை வாங்குவதும் இதற்காகவே.

ஆனால் மனிதனை தனித்து அடையாளம் காண்பது பற்றி திருக்குர்ஆன் பேசும் போது மனிதனின் மூக்கில் அடையாளம் இடுவோம் என்று கூறுகிறது.

அவனிடம் நமது வசனங்கள் கூறப்பட்டால் முன்னோர்களின் கட்டுக் கதைகள் எனக் கூறுகிறான்… அவனது மூக்கின் மேல் அடையாளம் இடுவோம்.

திருக்குர்ஆன் 68:15,16

கைரேகைகள் நம் கண்களுக்குத் தெரிகிறது. இதை வெளிப்படையாக நாம் பார்த்து அறிந்து கொள்கிறோம்

ஆனால் மனிதனின் மூக்கில் ஏதாவது அடையாளம் இடப்பட்டிருப்பது நமக்குத் தெரிகிறதா என்றால் நிச்சயமாக இல்லை எனலாம்.

மூக்கில் எந்த அடையாளமும் போடப்பட்டது நமக்குத் தெரியாவிட்டாலும் இப்போது மூக்கில் அடையாளம் போடப்ப்ட்டுள்ளதை நிபுணர்கள் கண்டு பிடித்துள்ளனர்

இது குறித்து தினகரன் கோவை பதிப்பில்( 7-3-2010) வெளிவந்த செய்தி இதை உறுதிப்படுத்துகிறது.

லண்டன் மார்ச் 7

தீவிரவாதிகள் கிமினல்களைக் கண்டுபிடிக்க அவர்களது மூக்கு உதவும் என்று பாத் பல்கலைக் கழக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கான புதிய தொழில் நுட்பத்தை அவர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

மனிதர்களின் பலவிதமான மூக்கு அளவுகளைக் கொண்டு அவர்களைப் பற்றி துல்லியமான விவரங்களைக் கண்டறியலாம் என்கின்றனர். அவர்கள் அதன் படி போட்டேபேஸ் என்ற உயர் தொழில் நுட்ப ஸ்கேனர் மூலம் மூக்கைப் பல கோணங்களில் படம் எடுக்க வேண்டும்

பிறகு ரோமன், கிரீக், நுபியான், ஹாக், ஸ்னப் மற்றும் டர்ன் அப் என்ற ஆறு வடிவங்களில் மூக்கை ஆய்வு செய்ய வேண்டும். பிறகு மூக்கின் விவரங்கள் முனை மற்றும் துளைகள் ஆகியவற்றை கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் மூலம் துல்லியமாக சோதனை செய்யப்படும். இது பற்றி டாக்டர் அட்ரியன் ஈவன்ஸ் கூறுகையில் கைரேகை ஸ்கேனை விட மூக்கு ஸ்கேன் மூலம் ஒருவரை எளிதாக அடையாலம் கண்டு பிடிக்கலாம். அதன் மூலம் குற்றவாளியின் தாயகம், இனம் ஆகியவற்றுடன் கைரேகையைப் போல் ஒவொருவரது மூக்கு அமைப்பும் வேறுபடுவதால் அடையாளம் காண்பது எளிது.

இது குறித்து 1400 வருடங்களுக்கு முன்பு அருள் மறையாம் திரு குர் ஆன் கூறியுள்ளது

அவனிடம் நமது வசனங்கள் கூறப்பட்டால் முன்னோர்களின் கட்டுக் கதைகள் எனக் கூறுகிறான்… அவனது மூக்கின் மேல் அடையாளம் இடுவோம்.

திருக்குர்ஆன் 68:15,16

மூக்கின் மேல் அடையாளம்

இவ்வசனத்தில் (68:16) மனிதனைத் தனியாகப் பிரித்துக் காட்டுவதற்கு மூக்கின் மேல் அடையாளமிடுவோம் என்று கூறப்பட்டுள்ளது

மனிதனைத் தனியாக வேறுபடுத்திக் காட்ட முக்கிய அடையாளங்கள் இரண்டு. ஒன்று ரேகைகள். இதை அனைவராலும் கண்டுபிடிக்க முடியாது. ஆயினும் ஆய்வு செய்து எந்த மனிதனின் ரேகை என்பதைக் கண்டு கொள்ளலாம். ஒருவரின் ரேகை போல் இன்னொருவரின் ரேகை இருக்காது

அனைவராலும் தெரிந்து கொள்ளக் கூடிய மற்றொரு அடையாளம் மூக்கு. எவ்வளவு நெருக்கமான மனிதராக இருந்தாலும் மூக்கை மறைத்துக் கொண்டால் துல்லியமாக அடையாளம் காண முடியாது.

எனவே தான் மூக்கின் மேல் அடையாளமிடுவோம் என்ற சொல் இவ்வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ZAJAKALLAH ,தமிழ் வெப் இஸ்லாம்.

No comments:

Post a Comment