السلام عليكم ورحمة الله وبركاته
குர்ஆன் இறை வேதம்தான் என்பதற்கு இதுவும் ஒரு
சான்று !
இந்த பிர்அவ்ன் உடல் 1898ல்தான் கண்டுபிடிக்கப்பட்டது. அல்குர்ஆனோ 1400
ஆண்டுகளுக்கு முன்னரே அருளப்பட்டது . பிர்அவ்ன் மூசா நபியை துரத்தி
செல்லும்போது அல்லாஹ்வின் நாட்டப்படி கடலால் மூழ்கடிக்கப்பட்டது 3000
ஆண்டுகளுக்கு முன் .இப்போது பிர்- அவுன் உடல் கெய்ரோ அருங்காட்சியகத்தில்
பாதுகாக்கபடுகிறது
73:16.ஃபிர்அவ்ன் அத்தூதருக்கு மாறு செய்தான் எனவே, அவனைக் கடினமான பிடியாக, நாம் பிடித்துக் கொண்டோம்.
10:92எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம்
நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம்
அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்” (என்று அவனிடம்
கூறப்பட்டது)..
14:52. இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப் படுவதற்காகவும்
(வணக்கத்திற்குரிய) அவன் ஒரே நாயன் தான் என்று அவர்கள் அறிந்து
கொள்வதற்காகவும் அறிவுடையோர் நல்லணர்வு பெறுவதற்காகவும் மனிதர்களுக்கு இது
ஓர் அறிவிப்பாகும்
No comments:
Post a Comment