Digital Time and Date

Welcome Note

Wednesday, January 16, 2013

கொலை, பாலியல் வன்முறைகளில் 33,000 மைனர் குற்றவாளிகள்: அதிர்ச்சி ரிப்போர்ட்

இந்தியாவில் 2011ம் ஆண்டு மட்டும் 18 வயதை பூர்த்தியடையாத 33000 மைனர் குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது ஒரு புள்ளிவிபரம். ஒருவன் 18 வயதை பூர்த்தியடையாதவன் என்ற காரணத்தினாலேயே தான் செய்த குற்றத்தில் இருந்து தப்பிவிடுகிறான்.

கொலையோ, கொள்ளையோ, பாலியல் வன்முறையோ இப்போது பதினாறு வயது முதல் 18 வயதிற்குட்பட்டோர்தான் அதிகம் ஈடுபடுகின்றனர். ஆடம்பர செலவுகளுக்காகவும், போதைக்காகவும் பணத்தை கொள்ளையடிக்கின்றனர். அதேபோல் காம இச்சையை தீர்த்துக்கொள்ள பள்ளிப் பருவத்தில் இருந்தே பாலியல் வன்முறைகளில் ஈடுபடுகின்றனர்.

மைனர் குற்றவாளிகள் இன்றைக்கு பெருகிவருகின்றனர். இதனால் குற்றச்செயல்களுக்கு தண்டனை தருவதற்காக மேஜர் வயதை 18ல் இருந்து 16ஆக குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு அனைத்து மாநிலங்களும் ஒப்புதல் அளித்துள்ளன.


மைனர் குற்றவாளிகள் அதிகம்


மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு புள்ளி விவரத்தில்,"'மைனர்கள் எனப் படும் சிறார்கள் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுவது சமீப காலமாகவே மிகவும் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும், 2011ல் மட்டும் 16லிருந்து 18 வயதுக்குட்பட்ட 33 ஆயிரம் சிறுவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


பாலியல் வழக்குகள் அதிகம்


இவற்றில் பெரும்பாலானவை கொலை மற்றும் பாலியல் பலாத்கார வழக்குகள்தான் அதிகம். நாடுமுழுவதும் 1,419, பாலியல் பலாத்கார வழக்குகள் மைனர் குற்றவாளிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.


மகாராஷ்ராவில் அதிகம்

மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தான் இது போன்ற சிறார்கள் மீது அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.என்று மத்திய அரசின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


12 ஆண்டுகளில் அதிகம்

கடந்த 2000 ம் ஆண்டு 198 பாலியல் வழக்குகள் மைனர் குற்றவாளிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 12 ஆண்டுகளில் பல மடங்காக அதிகரித்துள்ளது. மைனர் என்பதால் மட்டுமே ஒருவன் செய்த தவறுகளில் இருந்து தப்பிவிடக்கூடாது என்பதற்காகவே இப்போது தண்டனைகளையும், அதற்கேற்ப சட்டங்களையும் கடுமையாக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.


தூக்கில் போடுங்கள்

டெல்லி மாணவி பலாத்கார வழக்கில் தொடர்புடைய இளம் குற்றவாளிதான் கொடூரமாக மாணவியை தாக்கியுள்ளான். எனவே இளம் வயதிலேயே கொடூரச் செயல் புரிந்த அவனை தூக்கில் போட வேண்டும். அவன் மீது கருணை காட்டக்கூடாது" என்று ஆவேசப்பட்டுள்ளார் பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார்.

ஒன் இந்தியா.காம்

No comments:

Post a Comment