ஜனவரி15
பிறப்புகள்
[b]காசாபா தாதாசாகேப் சாதவ் (Khashaba Dadasaheb Jadhav, ஜனவரி 15, 1926 –ஆகஸ்ட் 14, 1984) தனிநபர் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கான முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற இந்தியர் ஆவர். இவர் 1952 ஆண்டுஹெல்சிங்கியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.[/b]
- 1559 - முதலாம் எலிசபெத் இங்கிலாந்தின் அரசியாக முடி சூடினாள்.
- 1582 - லிவோனியா மற்றும் எஸ்தோனியாவை ரஷ்யா போலந்திடம் கையளித்தது.
- 1609 - உலகின் ஆரம்பகால செய்திப்பத்திரிகைகளில் ஒன்றான Avisa Relation oder Zeitung, ஜெர்மனியில் வெளியிடப்பட்டது.
- 1759 - பிரிட்டிஷ் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.
- 1777 - அமெரிக்கப் புரட்சிப் போர்: வெர்மொண்ட் விடுதலையை அறிவித்தது.
- 1799 - இலங்கையில் அடிமைகள் கொண்டுவரப்படுவது முற்றாகத் தடை செய்யப்பட்டது.
- 1889: அமெரிக்காவில் கொகாகோலா கம்பனி கூட்டிணைக்கப்பட்டது.
- 1936 - முற்றிலும் கண்ணாடியால் அமைக்கப்பட்ட கட்டடம் ஒகைய்யோவில் கட்டப்பட்டது.
- 1943: உலகின் மிகப்பெரிய அலுவலகக் கட்டிடமான பென்டகன் அமெரிக்காவின் வேர்ஜீனியா மாநிலத்தில் திறக்கப்பட்டது.
- 1944 - ஆர்ஜெண்டீனாவில் சான் ஜுவான் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 10,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
- 1966 - நைஜீரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அபூபக்கர் டஃபாவா பாலேவா என்பவாரின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
- 1969 - சோயூஸ் 5 விண்கலத்தை சோவியத் ஒன்றியம் விண்ணுக்கு ஏவியது.
- 1970 - நைஜீரியாவிடம் இருந்து 32-மாத விடுதலைப் போரின் பின்னர் பயாஃப்ரா சரணடைந்தது.
- 1970 - முவாம்மர் அல்-கடாபி லிபியாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1975 - போர்த்துக்கல் அங்கோலாவுக்கு விடுதலை வழங்கியது.
- 1973 - வியட்நாம் போர்: வடக்கு வியட்நாம் மீதான தாக்குதல்களை இடை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சன் அறிவித்தார்.
- 1977 - சுவீடனில் இடம்பெற்ற விமான விபத்தில் 22 பேர் கொல்லப்பட்டனர்.
- 1982: கூடைப்பந்தாட்டத்திற்கான விதிகளை ஜேம்ஸ் நைஸ்மித் என்பவர் வெளியிட்டார்.
1991: குவைத்திலிருந்து ஈராக் படைகள் வெளியேறுவதற்கு ஐ.நா. விதித்திருந்த காலக்கெடு முடிவுற்றது.
1992: யூகோஸ்லாவியாவிலிருந்து பிரிந்த ஸ்லோவேனியா, குரோஷியாவின் சுதந்திரத்தை சர்வதேச சமூகம் அங்கீகரித்தது. - 2001 - விக்கிப்பீடியா தொடங்கப்பட்டது.
- 2005 - ஈசாவின் ஸ்மார்ட்-1 என்ற லூனார் விண்கலம் சந்திரனில் கல்சியம், அலுமீனியம், சிலிக்கன் மற்றும் இரும்புஆகியவற்றைக் கண்டுபிடித்தது.
- 2005 - செல்பேசிகளில் தமிழ் குறுஞ் செய்திகளை அனுப்பும் செல்லினம் என்ற மென்பொருள் மலேசியாவில்அறிமுகப்படுத்தப்பட்டது.
- 2007 - சதாம் உசேனின் சகோதரர் பர்சான் இப்ராகிம், மற்றும் ஈராக்கின் முன்னாள் பிரதம நீதியரசர் அவாத் ஹமீட் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.
- 2009: யூ.எஸ். ஏயார்வேஸ் விமானமொன்று கோளாறுக்குள்ளானதால் அதை ஹட்சன் நதியில் விமானி தரையிறக்கினார். பயணிகள், ஊழியர்கள் அனைவரும் காப்பாற்றப்பட்டனர்.
பிறப்புகள்
- 1926 - காசாபா தாதாசாகேப் சாதவ், இந்திய ஒலிம்பிக் வீரர் (இ. 1984)
[b]காசாபா தாதாசாகேப் சாதவ் (Khashaba Dadasaheb Jadhav, ஜனவரி 15, 1926 –ஆகஸ்ட் 14, 1984) தனிநபர் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கான முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற இந்தியர் ஆவர். இவர் 1952 ஆண்டுஹெல்சிங்கியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.[/b]
- 1929 - மார்ட்டின் லூதர் கிங், அமெரிக்க கறுப்பினத் தலைவர் (இ. 1968)
- 1956 - மாயாவதி குமாரி, இந்திய அரசியல்வாதி
- இறப்புகள்
- 1981 - தேவநேயப் பாவாணர், தமிழறிஞர் (பி. 1902)
- 1988 - ஷோன் மாக்பிரைட், நோபல் பரிசு பெற்ற ஐரிஷ் குடியரசு இராணுவத் தலைவர் (பி. 1904)
- 1998 - குல்சாரிலால் நந்தா, 2வது இந்தியப் பிரதமர், (பி. 1898)
- 2008 - கே. எம். ஆதிமூலம், தமிழக ஓவியர் (பி. 1938)
No comments:
Post a Comment