செய்தி: ஐஸ்லாந்தின் எரிமலை மீண்டும் வெடிக்க ஆரம்பித்து ஐரோப்பாவில் புகை மண்டலத்தை பரப்பியுள்ளதால் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
செய்தி:
ஐஸ்லாந்தின் எரிமலை மீண்டும் வெடிக்க ஆரம்பித்து ஐரோப்பாவில் புகை
மண்டலத்தை பரப்பியுள்ளதால் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து
செய்யப்பட்டுள்ளன.
ஐஸ்லாந்தின் அய் யா பியா லா யெர் குல்
(ay-yah-FYAH-lah-yer-kuhl) எரிமலை கடந்த இரு மாதங்களாக அவ்வப்போது
வெடித்து வானில் சாம்பல் புகை மண்டலத்தை பரப்பி வருகிறது. இந்த புகை
மண்டலத்தால் என்ஜின்கள் இயக்கமே நின்று விமானங்கள் விபத்துக்குள்ளாகலாம்
என்பதால் புகை மண்டலம் கரையும் வரை விமானங்கள் ரத்து செய்யப்பட்டு
வருகின்றன.
இப்போது இந்த எரிமலை வெடித்து ஐஸ்லாந்திலிருந்து
ஐரோப்பா வரை பல்லாயிரம் கி.மீட்டருக்கு வான்வெளியில் சாம்பல்
நிறைந்திருப்பதால் விமானங்கள் மீண்டும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
இன்று மட்டும் 1,000 விமானங்கள் ரத்தாகியுள்ளன.
இந்த புகை மண்டலத்தால் நெதர்லாந்து, இங்கிலாந்தி்ன் தென் கிழக்கில் உள்ள விமான நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டன.
எரிமலை, பூகம்பத்தை எழுப்பிடும் பூமியின் உட்கருப் பூத அணு உலை!
(Geo-Reactor)
''பூமியின் மையத்து வரை ஒரு துளையைத் தோண்டிச் சென்றால் நாம் எதைக்
காண்போம்? உட்கருவின் நடுவில் இயற்கை அணு உலையாய் இயங்கி வரும் 5 மைல்
விட்டமுள்ள யுரேனியக் கோளம் ஒன்றிருப்பதை ஊகித்து உடன்பட வைக்க ஆதாரம்
உள்ளது. அதை நான் ''புவி அணு உலை'' (Geo-Reactor) என்று
குறிப்பிடுகிறேன்.''
''பிரபஞ்சம், பூகோளம் ஆகியவற்றின் மெய்யான
இயற்கை அமைப்பைக் கண்டுபிடிப்பதும், அந்த அறிவை எல்லோரிடமும் பகிர்ந்து
கொள்வதும் விஞ்ஞானத்தின் முக்கிய குறிக்கோளாகும். அந்தப் பணியைத்தான் நான்
இப்போது செய்து வருகிறேன்'' மர்வின் ஹெர்ன்டன் Ph.D., (Marvin Herndon,
President Transdyne Corpn, San Diego, California)
''ஐஸ்லாந்தின்
எரிசாம்பல் முகில் (Plume) விஞ்ஞானத்துக்குக் கிடைத்த ஓர் இயற்கைக் கொடை
(Boon to Science).'' பிரையன் ஹான்ட்வெர்க் (Brian Handwerk, National
Geographic News)
பூகோளத்தின் மையத்தில் இயங்கும் வேகப் பெருக்கி அணு உலை
உலக நாகரீகக் குடிமக்களுக்குப் பெருந்தீங்கு விளைவிப்பது பூமியின் உட்கரு
வெப்ப மீறலே தவிர மெதுவாக மாறிவரும் சூழ்வெளிப் பருவ நிலை மாற்றங்கள் அல்ல!
கலிலியோ பூமி நகர்கிறது என்று கண்டுபிடித்தார்.
காப்பர்னிக்கஸ்
பூமி பரிதியைச் சுற்றி வருகிறது என்று கண்டுபிடித்தார். டெஸ்மார்க்கின்
வெளியீட்டில் கவரப்பட்ட ''டாம் சாக்கோ'' (Tom Chalko, inspired by
Desmarquet's Report) நமது பூமிக் கோளின் திண்ணிய உட்கரு (Earth's Solid
Inner Core) உண்மையில் ஓர் அணு உலை என்று 2000 ஆண்டில் கண்டுபிடித்தார்.
அணு உலையின் வெப்ப ஆற்றலே வெளிக்கருவில் உள்ள உலோகங்களைக் கொதிக்கும்
குழம்பாக மாற்றி வைத்துள்ளது. அந்த அணுக்கரு உலை மையத் திரிவாக (Eccentric)
அமைந்திருக்கிறது. தானாக இயங்கியும் இடையிடையே தானாக நிறுத்தம் அடைந்தும்
வரும் மைய அணு உலையே பூமியின் மேற்தளத்தில் அடுத்தடுத்து நில நடுக்கங்களை
உண்டாக்கியும், எரிமலைகளை எழுப்பியும் வருகிறது! பூமியின் துருவப்
பனிப்பாறை முகப்புகள் உருகிப் போவதற்கு முக்கியக் காரணம் பூஜிய டிகிரி
செல்ஸியஸ் உஷ்ணத்துக்கு மேல் சூடேறும் காற்றென நாம் கருதக் கூடாது!
துருவங்களின் பனிப் பாறைகளைச் சூடாக்கி உருக்குவது பூமியின்
உட்கருவிலிருந்து வெளியாகும் வெப்பமே (Overheating of the Earth’s Core)
தவிர பூகோளச் சூடேற்ற மில்லை என்பது இப்போது விஞ்ஞானிகள் கருதும் புதிய
கருத்து! எரிமலைகள் மீண்டும் பீறிட்டெழுவதும், நில நடுக்கம் திடீரெனத்
தாக்கித் தகர்ப்பதும் சூடேறிய பூமியின் மைய அணுப்பிளவு உலை குளிர்ந்து
போகத் தேவைப் படுவதால் தவிர உட்கரு ‘படிமச் சுருக்கம்’ அடைவதால்
(Crystallization) அல்ல ! இயங்கும் எந்த அணுப்பிளவு உலையும் வெப்ப மீறல்
ஆபத்தில் (Danger of Over-heating) சிக்கிக் கொண்டு சிதைவு அடையக் கூடாது!
ஆர்டிக், அண்டார்க்டிக் துருவப் பனிக்குன்றுகளில் பெருமளவுப் பகுதிகள்
ஏற்கனவே உருகி நீராகிக் கடல் உயரத்தை மிகையாக்கி விட்டன ! 2000 – 2003
ஆண்டுகளுக் கிடையில் மட்டும் அண்டார்க்டிக் பனிக்குன்றுகளின் உருகுதல் 8
மடங்கு அதிகரித் துள்ளது! சரிந்த பனிக்குன்றுகள் நழுவிக் கடலில்
மூழ்கும்போது சுனாமியைத் தூண்டுவதோடு கடற்கரைப் பகுதிகளைக் கடல் வெள்ளம்
மூழ்க்கி விடுகிறது!
எரிமலைகள் கண்விழித்து ஆர்டிக் கடலடியிலும்
அண்டார்க்டிக் ஆழப் பகுதிலும் எழும்புகின்றன! அண்டார்க்டிக்கைச்
சுற்றியிருக்கும் கடலில் 5 கி.மீ. (3 மைல்) ஆழத்தில் உள்ள நீர், திணிவு
குன்றி உப்பளவும் குறைந்து (Less Dense & Less Salty)
அண்டார்க்டிக்கின் அடித்தளம் உருகிப் போகிறது என்பதை உறுதிப் படுத்துகிறது!
தூயப் புதுநீர் உப்புக் கடல்நீரை விட திணிவு குறைந்து மேலே மிதக்க
வேண்டுமல்லவா ? அவ்விதம் நிகழ்வதில்லை. அதாவது அண்டார்க்டிக்கின் மேற்தளம்
உருகாமல் பேரளவில் அடித்தளக் குன்றுகள் மட்டும் இளகிக் கீழே தூய நீராகத்
தங்கி விடுகின்றன!
பூகம்ப எண்ணிக்கையும், தகர்ப்பாற்றலும் மிகையாகி வருகின்றன
கடந்த நாற்பது ஆண்டுகளாக நில நடுக்கத்தின் எண்ணிக்கை, தீவிரம், வலுவாற்றல்
யாவும் ஏறிக் கொண்டே போகின்றன. 1973 இல் அமெரிக்கப் பூதளவியல் ஆய்வு
நோக்ககம் (USGS -US Geological Survey) 7.0 ரிக்டர் அளவுக்கு மீறிய
பூகம்பங்களின் தகர்ப்பாற்றல் 6 மடங்கு அதிகரித்து உள்ளதாக
வெளியிட்டிருக்கிறது. மெல்ல மெல்ல காலநிலை உஷ்ணம் ஏறும் போது ஒரு
டிகிரிக்குக் குன்றிய தசமத்தில் கூடினாலும் நிலநடுக்கங்கள் 5 மடங்கு
பெருகிய ஆற்றலில் தகர்க்கின்றன!
நாசா விஞ்ஞானிகள் கூறுவது :
பூமியானது தான் வெப்ப சக்தியை எதிரனுப்ப முடிவதைப் போல் பரிதியி லிருந்து
பெறும் சக்தியைப் பேரளவில் (0.85 MegaWatt per Sq km) உறிஞ்சிக் கொள்கிறது.
சூழ்வெளி மாசுக்கள் இப்போது பெருகி வருகின்றன. பூமியைத் தாக்கும் சூரியக்
கதிர்வீச்சு இயக்கங்கள் பரிதித் தேமல்களால் (Sun Spots) 2012 ஆண்டு வரை
மிகையாகி வரும். 2000 -2003 இந்த மூன்று ஆண்டுகளில் ஏன் அண்டார்க்டிக்
அடித்தளப் பனிக் குன்றுகளின் உருகல் 8 மடங்கு அதிகரித்திருக்கிறது ? அந்தக்
கால இடை வெளியில் பரிதியின் வெப்ப வீச்சு அண்டார்க்டிக் பகுதியில் எட்டு
மடங்கு மிகையாகப் பொழிய வில்லை!
பூகோளச் சூடேற்றமும் அந்த
அளவுக்கு திடீரென ஏறவும் இல்லை. ஆதலால் அண்டார்க்டிக் பனிக் பாறைகள் உருகக்
காரணம் பூமியின் உட்கருவில் உள்ள அணுப்பிளவு இயக்கம் பெருகி வெப்ப சக்தி
உள்ளிருந்து மேலெழுந்துள்ளதையே காட்டியுள்ளது.பூகோளச் சூடேற்றம்
அண்டார்க்டிக் கடற் பகுதி ஆழத்தில் பனி உருகி உப்பு சிறுத்த, தணிவும்
குறைந்த நீர் சேமிப்புக்குக் காரணமாக இருக்க முடியாது!
புவி
மையத்தில் இயங்கி வரும் அணுக்கரு உலை வெப்பம் மீறி எழுந்து அப்படிச்
செய்திருக்க முடியும் என்று ஒப்புக் கொள்ளலாம். அதாவது புவி மையத்தில் உள்ள
அணு உலையின் கனல் எழுச்சியைத் தணிக்க, ''வெப்பத் தணிப்பியாக'' (Heat-Sink)
அண்டார்க்டிக் பனிக் கண்டம் ஒன்று மட்டும்தான் உதவ முடிகிறது! அதாவது
பூமியின் உட்கரு அணு உலைக்கு நேர் மேலே இருப்பது அண்டார்க்டிக் பனிப்
பாறைகள் என்று நாம் ஊகிக்கலாம்!
பூமி மையத்தில் உள்ள பூத அணுக்கருப் பிளவு உலை
ஆதிகாலப் பிள்ளைப் பூமியானது (Baby Earth) பரிதியிலிருந்து பிரிந்து
உட்கரு உலோகக் கோளமான ஓர் நீர் அண்டம் என்பதை அறிவோம். சூடான திரவக்
குழம்பில் திரண்டு பரிதியை மூலத் தட்டு வடைபோல் (Primordial Disc) சுற்றிக்
குளிர்ந்த ஓர் உருண்டையே நமது பூர்வ பூமி ! திணிவு மிக்க திரவ உலோகங்கள்
(Densest Metals) ஈர்ப்பாற்றலால் கீழாகப் படிந்தும், நிறை மெலிந்த
கனிமங்கள் மேலே மிதந்தும் பூமியின் மேற்தளம் மட்டும் குளிர்ந்தது.
யுரேனியம், தோரியம் போன்ற உலோகங்கள் மிகத் திணிவு பெற்றவை.உதாரணமாக
யுரேனியத்தின் திணிவு (Density): 19 கிராம் /கியூபிக் செ.மீ. (19 gram per
cubic cm). யுரேனியம் ஈயத்தை விட 1.6 மடங்கு திணிவு உள்ளது. தோரியத்தின்
திணிவு : 11.7 கிராம் /கியூபிக் செ.மீ. புளுடோனியத்தின் திணிவு : 19.7
கிராம் /கியூபிக் செ.மீ. இம்மூன்று கன உலோகங்களும் மற்ற கன உலோகங்களோடு
சேர்ந்து பூமியின் மையக் கருவில் படிந்திருக்கலாம் என்று அழுத்தமாக ஊகிக்க
இடமிடுக்கிறது.
தானாக நியூட்ரான்கள் தாக்கும் போது அணுப்பிளவில்
அணுசக்தி உண்டாக்கும் மூன்று கன உலோகங்கள் : யுரேனியம் -235, யுரேனியம்
-233, புளுடோனியம் -239. யுரேனியம் 238 உலோகத்தை வேக நியூட்ரான் தாக்கும்
போது, யுரேனியம் -238 புளுடோனியம் -239 ஆக மாறுகிறது. அதுபோல் தோரியம் -232
உலோகத்தை நியூட்ரான் தாக்கும் போது, தோரியம் -232 யுரேனியம் -233 ஆக
மாறுகிறது.
யுரேனியம் -235, யுரேனியம் -233, புளுடோனியம் -239
ஆகிய மூன்றும் சுயமாக நியூட்ரான்களை வெளியேற்றி அவை அந்தக் கன உலோகங்களைத்
தாக்கிப் பிளக்கும் போது அணுசக்தியை உண்டாக்குகின்றன. பெரும்பான்மையாகப்
பூமியில் கிடக்கும் யுரேனியம் -238 இல் சிறிதளவு யுரேனியம் -235 உள்ளது.
ஆகவே முதலில் நிகழும் யுரேனியம் -235 நியூட்ரான் சேர்க்கையில் சக்தி
உண்டாவதுடன், பிளவுக் கழிவுகளோடு மூன்று நியூட்ரான்கள் பிறக்கின்றன. அந்த
நியூட்ரான்கள் மீண்டும் யுரேனியம் -235 உலோகத்தைத் தாக்கி சக்தியும்,
கழிவும், 3 நியூட்ரான் களும் உண்டாகும். அணுப்பிளவுக் கழிவுகளில் இரண்டு
பாதி சிறு நிறை தனிமங்கள் காணப்படும். திரவ நிலையில் சிறு நிறைத் தனிமங்கள்
பிரிந்து மேலே மிதக்கும்.
வேக நியூட்ரான்கள் யுரேனியம் -238
உலோகத்தைத் தாக்கிச் சக்தியை உண்டாக்கும் புளுடோனியம் -239 உலோகத்தையும்
முடிவில் தோற்றுவிக்கும். மேலும் வேக நியூட்ரான்கள் தோரியம் -232
உலோகத்தைத் தாக்கிச் சக்தியை உண்டாக்கும். யுரேனியம் -233 உலோகத்தையும்
தோற்றுவிக்கும். இம்மாதிரி தொடர்ந்து வேகப் பெருக்கி அணு உலைகள் போல் (Fast
Breeder Reactor) தொடர்ந்து அணுசக்தியும், எரிசக்தி எருவும் பூமியின்
மையத்தில் உண்டாகி வருகின்றன.
அப்படி இயங்கும் அணுப்பிளவு அணு
உலைகளில் கழிவுக் தனிமங்கள் உண்டாகித் தானாக அணு உலை நிறுத்தம் அடையும்.
காரணம் கழிவுப் பொருட்கள் நியூட்ரான் விழுங்கிகள். நிறை சிறுத்த கழிவுப்
பொருட்கள் கனற் குழம்பில் மேலே ஏறி மிதக்க மறுபடியும் அணு உலை இயங்க
ஆரம்பிக்கிறது. இத்தகைய வேகப் பெருக்கி அணு உலைதான் பூமியின் மையத்தில்
தொடர்ந்து இயங்கியும் இடையிடையே நிறுத்தம் அடைந்தும் பிரம்மாண்ட மான வெப்ப
சக்தியை உற்பத்தி செய்து வருகிறது என்று 1993 ஆம் ஆண்டில் டாக்டர் மர்வின்
ஹெர்ன்டன் புதியதோர் பூமி உட்கரு நியதியை அறிவித்தார் !
விஞ்ஞானி மர்வின் ஹெர்ன்டான் அறிவித்த புவி அணு உலை
பூமியில் அணுசக்தி ஆற்றல் பெறும் யுரேனியம், தோரியம் ஆகியவற்றின் இருப்பு
பல இடங்களில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. வானியல் விஞ்ஞானி டாக்டர் மர்வின்
ஹெர்ன்டான் முதன்முதல் அணுப்பிளவுத் தொடரியக்கம் செய்து காட்டிய இத்தாலிய
விஞ்ஞானி என்ரிகோ •பெர்மியைப் பின்பற்றி பூமிக்குள்ளே மாபெரும் ஓர் இயற்கை
அணுப்பிளவு உலை (Natural Nuclear Fission Geo-Reactor) இயங்கியும் அடுத்து
நிறுத்தம் அடைந்தும் வருகிறது என்னும் புதியதோர் கோட்பாட்டை வெளியிட்டார்.
அந்த அணுப்பிளவு உலை வேக நியூட்ரான்கள் யுரேனியத்தைத் தாக்கி சக்தியும்,
எரிசக்தி எருவும் ஈனுகின்ற ஒரு வேகப் பெருக்கி அணு உலை (Fast Breeder
Reactor). அதற்கு ஹைடிரஜன் போன்ற மிதவாக்கி (Moderator) தேவையில்லை. மற்ற
மின்சக்தி நிலையங்கள் போலின்றி, புவி அணு உலை (Georeactor) தானாக இயங்கும்.
தானாக நிறுத்தம் அடையும். அதன் வெப்ப சக்தி ஆற்றலைக் கூட்டிக் குறைக்கும்
சுயக் கட்டுப்பாடும் கெண்டது. இயக்கத்தில் விளைந்து சேமிப்பாகும்
அணுப்பிளவுக் கழிவுகள் நிரம்பி நியூட்ரான்களை விழுங்கி அணு உலை அடுத்து
நிறுத்தம் அடையும். நிறை குன்றிய அணுவியல் கழிவுகள் கனற் குழம்பில் மேலேறி
மிதக்கும். பிறகு தனிப்பட்டுக் கீழே யுரேனியம் -235 சேரும் போது அணு உலை
தானாக இயங்கத் துவங்கும்!
இந்தக் கோட்பாடை மர்வின் ஹெர்ன்டான்
1993 இல் முதன்முதல் வெளியிட்ட போது அக்கருத்தைப் பலர் கூர்ந்து நோக்க
வில்லை. பூமியின் உட்கரு வெப்பம் மிகுந்த கோளம்! அதைச் சுற்றி
வெளிக்கருவில் உலோகத்தால் ஆன கனற் குழம்பு ! உட்கருவின் அணு உலை வெப்ப
சக்தியே திரவக் குழம்பை மணிக்கு 1000 மைல் வேகத்தில் சுற்ற வைத்திருக்கும்.
அந்த அணுப்பிளவு சக்தியே பூகோளக் காந்த சக்திக்கும் (Geomagnetism) மூலமாக
இருக்கக் கூடும் என்பதும் அறியப் படுகிறது. செவ்வாய்க் கோள் மின் காந்த
மின்றி ஈர்ப்பியல் குன்றி செத்துக் கிடக்கிறது.
செவ்வாய்க் கோளின்
உட்கரு அணு உலை இயக்கம் நிரந்தராக நிறுத்தம் அடைந்து அதன் காந்த சக்தி
இழந்து போனது! செவ்வாய்க் கோளின் அணு உலை சக்தியற்றுச் செத்து விட்டதால்
செவ்வாயின் காந்த சக்தி மறைந்து, ஈர்ப்பாற்றல் குறைந்து போய் அதன் சூழ்வெளி
வாயு மண்டலம் நிரந்தரமாய் இழக்கப் பட்டு நீர்வளம் எல்லாம் முற்றிலும்
வரண்டு விட்டது. ஆனால் செவ்வாயின் உட்கரு ஒருகாலத்தில் சூடாக இருந்து அதில்
இயங்கிய எரிமலை பரிதி மண்டலத்தின் மிகப் பெரிய எரிமலையாக எழுந்திருக்கிறது
!
4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய நமது பூமி தன்
உட்கருவில் அணுவியல் எருக்களான யுரேனியம் -235, யுரேனியம் -238, அணுப்பிளவு
இயக்கத்தால் உண்டான புளுடோனியம் -239 ஆகியவற்றைப் பயன்படுத்தி வரும் 5
மைல் (10 கி.மீ.) விட்டமுள்ள வேகப் பெருக்கி அணு உலைக் கோளம் ஒன்றைக்
கொண்டுள்ளது என்று கூறுகிறார் மர்வின் ஹெர்ன்டான். அது வெளியாக்கும் வெப்ப
சக்தி 4 டெரா வாட்ஸ் (4000 பில்லியன் வாட்ஸ்), (4 மில்லியன் மெகாவாட்ஸ்) [4
terawatts (4X10^12 watts)] என்று கணினி மாடல் மூலம் கணக்கிடப்படுகிறது.
இப்பேரளவு வெப்ப சக்தி தொடர்ந்து வெளியேறாது விட்டு விட்டு எழுவதால்,
அங்குமிங்கும் எரிமலையும், பூகம்பமும் உலக நாடுகளில் தலைதூக்கி
குடிமக்களுக்கு அடிக்கடி இன்னல் கொடுத்து வருகின்றன!
எ.சி.எம்.கடாபி
இஸ்லாமிய ஆயிவு மையம்
வாழைச்சேனை
இலங்கை.
No comments:
Post a Comment