Digital Time and Date

Welcome Note

Monday, January 21, 2013

பாபா ராம்தேவ் vs ஜப்பான் போலி சாமியார் ஷோகோ அசஹாரா.. ஓர் ஆன்மிக பயங்கரவாதம் !!!

பாபா ராம்தேவ் vs ஜப்பான் போலி சாமியார் ஷோகோ அசஹாரா.. ஓர் ஆன்மிக பயங்கரவாதம் !!!

இதை நீங்கள் கண்டிப்பாக கடைசி வரை படித்து சிந்திந்து செயல் படுங்கள் ..

சரி யார் இந்த shoko Asahara ?

ஷோகோ அசஹாரா ஒரு சாதாரண ஜப்பானியப் பிரஜை. ஜப்பான் இல் வாழந்த ஓர் மிக பெரிய சாமியார்.... இவர் நமது ஊர்களில் நித்தியானந்தா, சாய் பாபா, பிரமானந்தா போன்ற பல போலி சாமியார்களை தூக்கி சாப்பிட்டவர்..... இவர்களுக்கு எல்லாம் ஒரு வகையுள் தலைவர் போன்றவர்....ஏழைமையில் வாடிய குடும்பம். தவிரவும் ஒரு கண்பார்வை கிடையாது. அதனாலென்ன? தனது புத்திக்கூர்மையைப் பயன்படுத்தி, புதிதாக ஒரு மதத்தையே ஸ்தாபித்து, மக்களை மயக்கி வசப்படுத்தி, சம்பாதித்து, சம்பாதித்த அனைத்தையும் ஆயுதங்களாக மாற்றி, ஜப்பானில் ஒரு மாபெரும் புரட்சிக்கு வித்திட்டவர். கொள்கைத் தீவிரர்கள் பலர் சேர்ந்து ஆரம்பித்த இயக்கம் இல்லை இது. ஒரே நபர். ஒரே இலக்கு.ஒரே கனவு. ஜப்பானை ஆளவேண்டும்! இந்தக் கனவுக்காக எத்தனை உயிர்களை பலிகொடுத்திருக்கிறார்கள் தெரியுமா?

மேற்கு நாடுகளெல்லாம் அணு ஆயுதம் குறித்து யோசித்துக்கொண்டிருந்த வேளையில் ஷோகோவின் 'ஓம் ஷின்ரிக்கியோ', ரசாயன உயிரியல் ஆயுதங்களைத் தயாரித்து மிகப்பெரிய அழிவுகளை உண்டாக்கியிருக்கிறது.ஜப்பானில் மட்டுமல்லாமல் ரஷ்யா முதல் ஆஸ்திரேலியா வரை, அமெரிக்கா முதல் பிலிப்பைன்ஸ் வரை தனது கிளைகளை விஸ்தரித்து, ஆன்மிகப் போர்வையில் இவர்கள் நிகழ்த்திஇருக்கும் அட்டகாசங்கள் கொஞ்சநஞ்சமல்ல!

ஷோகோ அசஹாரா என்கிற ஒரு தனி மனிதனின் கனவுக்காக, ஜப்பான் நூற்றுக்கணக்கான உயிர்களை பலிகொடுக்க வேண்டிஇருந்தது! மதத் தீவிரவாதம் என்பது எத்தனை அபாயகரமானது என்பதை முதல் முதலில் உலகுக்கு அழுத்தம் திருத்தமாக எடுத்துச் சொன்ன இயக்கம் ஓம் ஷின்ரிக்கியோ.
எடுத்தால், வைக்கமுடியாத அளவுக்கு விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்டிருக்கும் நூல் இது.

ஜப்பானில் அந்த நாட்களில் மத உணர்வு மிகவும் கம்மி, எல்லாரும் நிறோசக்கிமா, நாகசாகி, ஆணு குண்டுக்கு பின்பு அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் வேலை வேலை வலை மட்டும் தான்.... எதாவது முக்கியமான பண்டிகைகள் பொது மட்டும் தனது மத உணர்வை வெளி காட்டி கொண்டு.. பின்பு தனது வேலை க்கு திரும்பி விடுவர்....

இந்த நேரத்தில் நமது. ( shoko Asahara ) ஒரு மதத்தை உருவாகினால் என்ன என்று யோசித்து நேராக இந்தியா வருகிறார்.... அவர்க்கு நன்றாகவே தெரிந்து இருக்கிறது, இங்கு தான் மதத்தின் பெயரால் என்ன சொன்னாலும் நம்பி விடும் முட நம்பிகையளர்கள் அதிகம் என்று, ஹிமியாலய சென்று அங்கு உள்ள ஒரு ஆசிரமத்தில் சேர்ந்து யோகா, மற்றும் சில தந்திரங்களை கற்று கொள்ளுகிறார்.... அப்படியே கொஞ்சம் புத்தம், சீக்கியம், என்ன சில மடத்தின் கோட்பாடுகளை எடுத்து கொண்டு.... திரும்பவும் ஜப்பான் போகிறார்.

அங்கு ஒரு single bedroom flat ஒன்றை வாடகைக்கு எடுத்து கொண்டு...( அவர் முதல் மற்றும் கடைசியாக செய்த முதலிடும் இது தான் ) யோகா யோகா யோகா என்று எப்பொழுதும் இருந்து விடுகிறார்... இதை பக்கத்துக்கு விட்டில் இருபவர்கள், முதலில் எதோ கிருகனை பார்ப்பது போல் பார்த்தாலும், இவரின் தோற்றமும், செய்கையும் ஒரு மார்க்கமாக இருப்பதால் இவரை ஒரு சாமியாராக ஏற்று கொள்ளுகிறார்கள்.... அதன் பின் ஒரு சிறு சில சித்து வேலைகள், நமது ஊரில் சொல்ல போனால் திருநிறு வர வளைப்பது, வாயுள் இருந்து லிங்கம் எடுப்பது போல... இதனால் ஜப்பான் மக்கள் இவரை ஒரு கடவுளாகவே பார்க்க தொடங்கி விட்டனர்... அப்பொழுது இவர் தனது இயக்கத்தை ஒரு மதமாக பதிவு செய்து விடுகிறார்.... மதத்தின் பெயர்Aum Shinrikyo அப்படி என்றால் உண்மையான மதம் என்று அர்த்தம். இவரது சித்து விளையாட்டுகளில் மயங்கி ஜப்பானில் பாதிக்கு பாதி இவரது மதத்தில் இணைகிறார்கள்....

இந்த கால கட்டத்தில் அவருக்கு உலகின் பல முலைகளில் அவருக்கு ஆசிரமங்கள், சீடர்கள் என்று வாழ்கையை ரசித்து கொண்டு இருந்தவர்க்கு திடீர் என்று உலகத்தை ஆட்சி செய்ய வேண்டும் என்று எண்ணம், அரசியலில் இறங்கு கிறார்... பிரதமர் பதிவுக்கு போட்டி இடுகிறார்.. அவரது மதத்தில் இருபவர்கள் மட்டும் அவருக்கு வாக்கு அளித்தால் போதும்.. எதிர் கட்சிகள் அனைத்தும் தேபோசிட் கூட கிடைக்காது.... இருந்தாலும் நமது ஊர் தேர்தல் போல பணத்தை வாரி இறைதார்,

ஆனால் ஜப்பான் மக்கள் அரசியல் வேறு ஆன்மிகம் வேறு என்று நன்றாக தெரிந்து வைத்து இருந்தார்கள், எனவே இவருக்கு தேபோசிட் குட கிடைக்க வில்லை.

இந்தியாவில் இருந்து ஒரு பிரமாண்ட லிங்கம் ஒன்றை வாங்கி தனது ஆசிரமத்தில் நிறுவி கொண்டு... தனது பகதர்களுக்கு ஒரு எச்சரிக்கை விட்டார்.. அது தான் இந்த உலகத்தில் அவதரித்து இருக்கும் நவீன காலத்து நோவா ( அதாவது பழைய பைபிள் இல் சொல்லி இருக்கும் ஒரு கதை, உலகம் அழிய போகிறது என்று தெரிந்த ஒருவர் ஒரு மிக பெரிய கப்பல் கட்டி அதில் உலகத்தில் உள்ள ஷிவ ராசிகளை கைப்பற்றி அதை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லுவார் அல்லவா) யார் எல்லாம் தப்பிக்க வேண்டுமோ அவர்கள் அனைவரும் என்னிடம் வாருங்கள், என்னது பார்வை அல்லது என்னது பாதுகாப்பில் இருபவர்கள் மட்டுமே தன்னை காப்பற்றி கொள்ள முடியும்,

நமது ஊர் தாயத்து போல் அவர் சில விசயங்களை விற்றார்.... அது என்ன வென்றால் தனது தாடி மயிர்... ஒரு முடிய எடுத்து அத நான்கில் இருந்து ஐந்து துண்டாக வெட்டி அதை 500 $ என்று விற்றார்... ஓர வாரத்துல அப்படியே ஷர்ருகன் மாதிரி ஆகிவிட்டார் என்றால் பார்த்து கொள்ளுங்கள், அது அனைத்தும் விற்றது போக தான் குளித்த தண்ணிரை ஒரு சின்ன சிப்பாயுள் அடைத்து அதனை $ 800 க்கு விற்றான்..... அது மட்டும் அல்ல தான் தான் கடவுள் என்னது உடம்பில் ஓடுவது ரத்தம் மே அல்ல அமிர்தம்.. அன்று வாய் குசாமல் வாய்க்கு வந்தது எல்லாம் உளற ஆரம்பித்தான் இந்த பித்தன், இதன் பிறக்கு நம்மளை போல் உள்ளவர்கள் சும்மா விடுவார்களா???? வா வந்து ஒரு ரத்த பரிசோதனை எடுத்து கொள்ளலாம், அதன் பிறக்கு நீ சாமிய இல்ல ஆசாமியா என்று தெரிந்து விடும் என்று சவால் விட... அவரும் ஒத்து கொண்டார்... எதாவது தகிடு தட்டம் பண்ணி விடலாம் என்று எண்ணினார், அய்யோ பாவம் அவரால் ஒன்னும் பண்ண முடிய வில்லை, கடைசியுள் மருத்துவர் அவருது உடம்பில் உள்ளது, அமிரதாமோ அல்ல சாக்கடையோ இல்லை.. அக்மார்க் முத்திரை குட்ட பட்ட o+ ve blood group தான் என்று கூறி விட்டார்...

இதன் பிறக்கு தான் இவர் தனது சொந்த படை ஒன்று நிறுவினர், தனக்கு எதிராக செயல் பட்டவர்களை திருத்து கட்டினர்... ஆயுதம் வாங்கி குவிக்க அரம்பிட்டார்.... திருபவும் நாட்டிக்கு அரசன் அக்க என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்து, நாட்டிக்கு ஒதுக்கு புறமாக ஒரு ஆணு உலை ஒன்றை நிறுவினர், அதற்கு formulas ரஷ்ய நாட்டில் உள்ள ஒரு முக்கியமா மந்திரி (இவற்றும் நமது சாமியாரின் சீடன் தான்) என்னோ அவருது ஆணு உலை க்கு வந்த scienthist பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருபர்கலே என்பதே சந்தேகமே.... அந்த திட்டமும் வினாகியது....

உயிரியல் ஆயிதம் (biological weapon ) தயாரித்தல் என்ன என்று யோசித்து ஒரு உயிர் கொல்லி வைரஸ் தயாரிக்கிறார், அதனை நாட்டு மக்கள் மிது ஏவுகிறார், அந்தா பாவம் அந்த வைரஸ் அனைத்தும் எடுத்து செல்லும் வழிகளில் இறந்து விடுகின்றன.......
அதன் பிறக்கு சிரான் காஸ்( siran gas ) முலம் நாட்டு மக்கள் மிது ஏவுகிறார், அது ஒரு அளவுக்கு வெற்றியும் தருகிறது, ஆனால் ஜப்பான் நாட்டு மக்கள் அதை ஒரு தாக்குதலாக பார்க்க வில்லை, எதோ சுகாதார கேடு, அதனால் தான் இப்படி நடந்து விட்டது என்னே சுகாதார பணிகளை கவனிக்க துவங்கு கிறார்கள்...

பிறகு டோக்யோ சுரங்க பாதைகளில் இந்த சிரான் காஸ் முலம் தாகுதல் நடத்துகிறான்... இப்பொழுது தான் அரசாங்கம் முழித்து கொண்டு தீவிர விசாரணை நடத்தி நமது வெள்ளை தக்காளியை கைது செய்து தண்டனை குடுகிறார்கள்.

இது தான் Shoko Asahara வின் கதை, இவரை போல தான் இந்த பாபா ராம்தேவ், சிறு ஏழ்மை குடும்பதில் பிறந்து வாத நோயால் பாதிக்க பட்டு, பின்பு யோகா வால் குணம் அடைந்து ஒரு ஆசிரமம் துவங்கி, பல நாடுகளில் தனது ஆசிரமத்தை துவங்கி இருக்கிறார், கோடி கணக்கில் சொத்துகள் இருக்கிறது... இப்பொழுது அதிரதியாக அரசியல் பிரவசம், தனக்கு என்று ஒரு ஆயுதம் ஏந்திய படை அமைக்க போவதாக அறிக்கை என்று நாள் ஒரு வண்ணமாக பொழுது ஒரு அறிக்கையாக உலா வந்து கொண்டு இருக்கும் இவர் என்னக்கு Shoko அசஹாரா நியாபகம் படுத்துகிறார்.... மேலும் இவருக்கு BJP, RSS போன்ற மதசாயம் பூச பட்ட அரசியல் கட்சிகள் ஆதரவும் இவருக்கு பெருக்கி வருக்கிறது, என்பது குறிப்பிட தக்கது...

மக்களே நன்றாக சிந்தியுங்கள், யாருக்கு உங்களுடைய அதரவு, மக்களுக்கு நன்மை என்றால் அது யாராக இருந்தாலும் நமது ஆதரவு உண்டு, ஆனால் சில போலிகளும் இது போல் செயல்களை இறங்குவார்கள், இவர்களை நாம் தான் இனம் அறிந்து ஒதுக்க வேண்டும்...யோசித்து முடிவு எடுங்கள்.... நான் உங்களுக்குள் ஒருவன் அக இருந்துகொண்டு உண்மைகளை உலகிருக்கு உரைக்கும் ஒரு சாதாரண வழிபோக்கன்........


இந்த உலகம் எங்கே செல்கிறது ??


நன்றி
இன்று ஒரு தகவல்