Digital Time and Date

Welcome Note

Saturday, March 3, 2012

பிளாக்கரில் எந்த கோடிங்கும் சேர்க்காமல் Recent Post விட்ஜெட் வைக்க

பிளாக்கரில் சில குறிப்பிட்ட விட்ஜெட்களை வைத்திருக்க வேண்டியது அவசியமானது. (பிளாக்கரில் எந்தெந்த அவசியம் இருக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் சென்று பார்க்கவும்.) முக்கியமான விட்ஜெட்களில் Recent Post விட்ஜெட்டும் ஒன்று. இந்த விட்ஜெட்டை பல வழிகளில் உங்கள் பிளாக்கர் தளங்களில் இணைக்கலாம். அந்த வரிசையில் இன்று எந்த மூன்றாம் தள கொடிங்கையும் சேர்க்காமல் சுலபமாக நம் பிளாக்கரில் உள்ள டீபால்ட் வசதியின் மூலம் Recent Post விட்ஜெட் இணைப்பது எப்படி என பார்ப்போம்.

  • முதலில் Design ==> Add a Gadget ==> Feed என்பதை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
  • Feed கிளிக் செய்ததும் உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் உங்கள் பிளாக்கில் Feed URL கொடுக்கவும்.
  • கொடுத்த பிறகு அருகில் உள்ள Continue என்ற லிங்கை அழுத்தவும்.
  • Continue கொடுத்தவுடன் உங்களுடைய பிளாக்கின் சமீபத்திய 5 பதிவுகளுடன் பாப்-அப் விண்டோ ஓபன் ஆகும்.
  • அதில் தலைப்பை உங்கள் விருப்பம் போல மாற்றி கொண்டு தெரிய வேண்டிய பதிகளின் எண்ணிக்கையும் தேர்வு செய்து கொள்ளவும்.
  • உங்களுக்கு விட்ஜெதஈல் தெரிய வேண்டிய மற்ற வசதிகள் (Date, Author) தேவையென்றால் டிக் மார்க் கொடுத்து கொள்ளவும். 
  • முடிவில் கீழே உள்ள Save என்ற லிங்கை அழுத்தினால் Recent Posts விட்ஜெட் உங்கள் பிளாக்கரில் இணைந்து  விடும். 
நீங்கள் ஒவ்வொரு புது பதிவு போடும் பொழுதும் அந்த பதிவு தானாகவே இந்த விட்ஜெட்டில் அப்டேட் ஆகிவிடும். 
Tech Shortly
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

No comments:

Post a Comment