Digital Time and Date

Welcome Note

Saturday, May 5, 2012

குழந்தைகளின் பற்களை தாக்கும் நோய்கள்.


மருத்துவ செய்தி.

மனிதன் முக அழகில் மட்டு...ம் அல்ல உடல் நலத்திலும் முக்கிய பங்கு வகிப்பது பற்கள். சிலருக்கு பற்கள் முன்பக்கமாக நீண்டும் வரிசையாக இல்லாமலும் இருக்கும்.
இதன் காரணமாக அவர்களது முக அழகு சிதைந்து விடும். இதனால் ஏராளமானோர் தன்னம்பிக்கை இழந்து வாழ்வில் எதையும் சாதிக்க முடியாதவர்களாக மாறி விடுகிறார்கள்.

பற்களின் அழகு சிதைந்து போவதற்கு குழந்தை பருவத்தில் அதை முறையாக கவனித்து பராமரிக்காதது தான் காரணம்.

குழந்தை பருவத்தில் இருந்தே பல் குழந்தை நல மருத்துவ நிபுணரிடம் குழந்தைகளை காண்பித்தால், பற்களின் ஆரோக்கியம், அழகு கெடாமலும், பல் சிதையாமலும் பார்த்துக் கொள்ளலாம் என்கின்றனர் பல் மருத்துவ சிறப்பு நிபுணர்கள்.

ஒரு குழந்தையின் பல் வரிசை சரி இல்லாமல் போனால் முக அழகு சிதைந்து விடும். பற்கள் நன்றாக இருந்தால் தான் முகம் அழகுடன் பளிச்சிடும். பல் போனால் சொல் போச்சு என்பது பழமொழி. இதற்கேற்ப குழந்தைகளின் பல் சொத்தையாகி விழுந்து விட்டால் அவர்களால் தெளிவாக பேசமுடியாது.

இதனால் தன்னம்பிக்கை இழந்து விடுவார்கள். குழந்தைகளுக்கு ஒரு சில பற்கள் விழுந்து விட்டாலும் கூட அவர்களால் உணவை நன்றாக மென்று சாப்பிட முடியாது.

இதனால் அவர்களுக்கு அடிக்கடி அஜீரண கோளாறு ஏற்படும். குழந்தையின் சிரிப்பிலும் பல் முக்கிய பங்கு வகிக்கிறது. பல் இல்லாத குழந்தையின் சிரிப்பு அதன் அழகை சிதைத்து விடும்.

குழந்தைக்கு 6 முதல் 7-ம் மாதத்திற்குள் பல் முளைக்க தொடங்கும். 19-வது மாதத்தில் 20 பற்கள் முளைத்து விடும். பல் முளைக்கும் கால கட்டத்தில் தான் குழந்தை கண்ட கண்ட பொருட்களையும் எடுத்து வாயில் வைத்து கடிக்கும். இதனால் நோய் தொற்றி காய்ச்சல், வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படலாம்.

இதனால் பெற்றோர் அந்த சமயத்தில் குழந்தைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. இல்லா விட்டால் கிருமித்தொற்றால் பல்வேறு நோய்களின் பிடியில் குழந்தை சிக்க நேரிடும். குழந்தையின் பல் விஷயத்தில் பெற்றோர் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.

குழந்தைக்கு சாக்லெட், ஐஸ்கிரீம் போன்றவை சாப்பிடும் போது அதில் உள்ள இனிப்பு வாயில் ஒட்டிக் கொண்டால் பல் சொத்தையாகி விடும். எனவே எந்த உணவுப் பொருள் கொடுத்தாலும் சாப்பிட்ட பிறகு குழந்தையின் வாயை நன்றாக கழுவுவது நல்லது.

நொறுக்குத் தீனி சாப்பிடும் குழந்தைகள் தான் அதிக அளவில் பற்களை இழந்து தவிப்பதாக புள்ளி விவரம் ஒன்று தெரிவித்துள்ளது. எனவே குழந்தைகள் நொறுக்கு தீனி சாப்பிட்டு முடிந்ததும் குழந்தையின் வாய்க்குள் தண்ணீர் விட்டு கழுவி விடுவது நல்லது.

No comments:

Post a Comment