Digital Time and Date

Welcome Note

Tuesday, May 8, 2012

தமிழை சப்போர்ட் செய்யும் வசதியுடன் உபிஸ்லேட் டேப்லெட்!



ஆகாஷ் டேப்லெட்டைத் தயாரி...த்த டேட்டாவிண்ட் தன்னுடைய புதிய உபிஸ்லேட் வரிசை டேப்லெட்டுகளைக் களத்தில் இறக்குகிறது. இதில் உள்ள விசேஷம் என்னவென்றால் இந்த உபிஸ்லேட் டேப்லெட்டுகள் தமிழ், ஹிந்தி, மராத்தி, பஞ்சாப் மற்றும் மற்ற இந்திய மொழிகளை சப்போர்ட் செய்யும் வகையில் களமிறக்க இருக்கிறது. அதற்காக டேட்டாவிண்ட் பெங்களூரைச் சேர்ந்த ரிவேரியே லாங்குவேஜ் டெக்குனாலஜிஸ் பிரைவேட் லிமிட்டட் என்ற நிறவனத்துடன் வர்த்தக ஒப்பந்தம் செய்திருக்கிறது.

இந்த ஒப்பந்த்தைப் பற்றி டேட்டாவிண்டின் தலைமை மேலாளர் திரு. சுனித் சிங் துளி கூறும் போது இந்த ஒப்பந்தம் பற்றி மகிழ்வதாகக் கூறுகிறார். மேலும் பல மொழிகளில் இந்த டேப்லெட் வரும் போது ஆங்கிலம் தெரியாத பல மக்கள் தங்கள் சொந்த தாய் மொழியில் டேப்லெட்டை இயக்கலாம் என்று கூறுகிறார்.

இந்த உபிஸ்லேட் டேப்லெட்டை வாடிக்கையாளர்கள் தங்களது சொந்த மொழிகளில் பயன்படுத்தலாம். அதற்கான தொழில் நுட்பங்களை இந்த டேப்லெட் கொண்டு வருகிறது. அதனால் உபிஸ்லேட் வாடிக்கையாளர்கள் பரமானந்தம் அடைவார்கள் என்பதில் ஐயமில்லை.

சமீபத்தில் டேட்டாவிண்ட் உபிஸ்லேட் 7சி என்ற புதிய டேப்லெட்டை களமிறக்கி இருந்தது. இந்த டேப்லெட் ஆகாஸ் 2 டேப்லெட்டின் வர்த்தக டேப்லெட்டாகவும் கருதப்பட்டது. ஆன்ட்ராய்டு 2.3 ஜிஞ்சர் ப்ரீடு இயங்கு தளம் மற்றும் கோர்ட்டெக்ஸ் எ8 – 800 மெகா ஹெர்ட்ஸ் ப்ராசஸருடன் இருக்கும் இந்த டேப்லெட் ரூ.3999க்கு விற்கப்படுகிறது.

குறைந்த விலையில் இந்த டேப்லெட் இருந்தாலும் வைபை மற்றும் ஜிபிஆர்எஸ் இணைப்புகளைக் கொண்டிருக்கிறது. 3 மோடம்களையும் சப்போர்ட் செய்கிறது. மேலும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், யுஎஸ்பி போர்ட் போன்ற வசதிகளும் இந்த டேப்லெட்டில் உண்டு. மேலும் இதன் 7 இன்ச் திரை 800 x 400 பிக்சல் ரிசலூசனுடன் கப்பாசிட்டிவ் தொடு வசதியை அளிக்கிறது.

இப்போது இந்த டேப்லெட் பல மொழிகளில் வரும் போது இன்னும் சூப்பராக இருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை.

No comments:

Post a Comment