Digital Time and Date

Welcome Note

Thursday, May 10, 2012

திருந்த வேண்டியது மடங்களா ? மனங்களா ?



தொலைக்காட்சியில் வெளியான நித்தியானந்தா சுவாமிகளின் நித்திய ஆனந்த லீலா வினோதங்களால் தமிழக கர்நாடகா பக்தகோடிகளெல்லாம் அல்லோல பட்டனர்

32 வயதேயான நித்தியானந்தா தமிழகத்தின் திருவண்ணாமலையில் பிறந்தவர். 33 நாடுகளில் 1200 மையங்கள், அமெரிக்க இந்துப் பல்கலைக்கழகத்தின் தலைவர், பெங்களூருக்கு வெளியேமைசூர் சாலையில் 200 ஏக்கர் பரப்பளவில் தலைமைப் பீடம். பெரும் செல்வாக்கு, கொட்டும் பணம். எப்படி சம்பாதித்தார் இவற்றையெல்லாம்..


லிங்கம் எடுத்தல் விபூதி எடுத்தல் என்ற சில்லறை சமாச்சாரத்திற்கு விடைக் கொடுத்துவிட்டு சாமியாரின் பேச்சிலும், எழுத்திலும் வெளிப்பட்ட வசீகரத்திற்கு வசியப்பட்டுப்போன பக்தகோடிகள் கோடிகளை கொட்ட சாமியாருக்கு ஜோடியும் தேவைப்பட்டது.

குமுதத்தில் கதவைத் திற காற்று வரட்டும் கட்டுரையை எழுதியவரின் அந்தரங்க கதவை திறந்து பார்த்த யாரோ ஒருவர் அதனை படம் பிடித்து தொலைக்காட்சிக்கும் அனுப்பிவிட நித்திய அனுபவங்கள் வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

பிரம்மச்சரியத்தை கட்டுப்படுத்துவது எவ்வாறு என்று எழுதியவர் உணர்ச்சிகளின் உந்து சக்தியால் சிற்றின்பத்தை தகாத முறையில் உய்த்து உணர்ந்தார். பாவம் பக்தகோடிகள் இவரின் கட்டுரையை படித்து பண்பட முயன்றவர்கள் திண்டாடிப் போயிருப்பார்க்ள்.காஞ்சிக் காமக்கோடியின் காமக்களியாட்டங்களும், கொலைக் குற்றமும் வெளிப்பட்ட பிறகும் வாழாவிருந்த சங்க்பரிவார்களுக்கு நித்யானந்தாவின் நிழலுக அனுபவங்களை கண்டவுடன் பொத்துக் கொண்டு வந்துவிட்டது.

நித்யானந்தாவிற்கு ரஞ்சிதா காஞ்சிக்கு ‘எம்’ ’எஸ்’ நடிகைகளின் சேவைகள். கூடவே ‘அனு’வில் துவங்கும் எழுத்தாளரின் கசப்பான அனுபவங்கள். காரணம் புரிகிறது அவர் 'அவாள்’ ஆனதாலோ!

அடப்பாவிகளா? ஒழுக்கச் சீரழிவிலும் ஜாதி வெறியா?காஞ்சிக் காமக்கோடி முதல் கடைக்கோடி அர்ச்சகன் வரை ஒழுக்கச் சீரழிவின் உச்சத்திற்கே சென்ற செய்திகள் அடிக்கடி வெளியான பின்னரும் அறியாமையிலிருந்து விடுபடாத பக்தகோடிகள் புரோகித கசமாலங்களின் காலடியில் வீழ்ந்தே கிடக்கின்றனர்.

மனிதனை மனிதன் என்ற நிலையில் பார்க்காமல் அவன் காட்டும் சில வித்தைகளால் உச்சத்தில் தூக்கிவைத்து கூத்தாடிவிட்டு அவனது ரகசிய செய்கைகள் வெளிப்படுத்தப்படும் பொழுது நிலைகுலைந்துப் போகின்றனர் இந்த அறிவிலிகள்.

இறைவன் யார்? மனிதனை இறைவன் எதற்காகப் படைத்தான்?அவனுக்கும் மனிதனுக்குமிடையே இடைத்தரகர்கள் தேவையா? தான் படைக்கப்பட்டது ஏன்? என்பதை பற்றி உணராததன் காரணமாக அறியாமை என்னும் அந்தகாரத்தில் மனிதர்களில் சிலர் மண்டியிட்டுக் கிடப்பதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சில அல்ல பல புல்லுருவிகளும் புரோகித வேடம் பூண்டு பணம் சம்பாதிக்கவும், பாலியல் சுகத்தை அனுபவிக்கவும் தலைப்பட்டு விடுகின்றனர். இத்தகைய சூழலை பயன்படுத்திக் கொண்டு கடவுளை மறுக்கிறோம் எனக்கூறும் கூட்டம் ஒன்று ஒழிக்கப்பட வேண்டியவை எவை மடங்களா? மதங்களா? என பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கின்றது.

கடவுளின் பெயரால் நடைபெறும் அநாகரீகங்களும், அநியாயங்களும் சமூகத்தில் அங்கீகரிக்கப்படுவது எதனால்? என்பதை நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். இத்தகைய ஒழுக்கச் சீரழிவுகளுக்கு முடிவுகட்ட வேண்டுமென்றால் தனது அறிவுக்கு சிறிது வேலையைக் கொடுக்க மனித சமூகம் தயாராகவேண்டும்.

இயற்கை புறம்பான நிலையில் பிரம்மாச்சரியத்தை கட்டுப்படுத்துகிறோம் என்ற மோசடித் தனத்திலிருந்து விடுபட்டு இல்லற வாழ்க்கையின் மூலமே மனிதன் முழுமனிதனாக முடியும் என்று கூறும் மனிதத் தன்மைக்கு ஏற்ற கொள்கையை ஏற்க மனிதர்கள் தயாராக வேண்டும். மனித உள்ளங்கள் இத்தகைய இருள்களிலிருந்து எப்பொழுது விடுதலையடைந்து தன்னைப் படைத்த உண்மையான இறைவனை உணரத் தலைப்படுகிறதோ அன்று இத்தகைய மடங்களெல்லாம் காணாமல் போய்விடும். ஆகவே திருந்த வேண்டியது மடங்களல்ல மக்களின் மனங்களேயாகும்..இப்படி நாம் இன்னும் விளிக்காமல் இருந்தால் இவர்களை போன்றவர்கள் மதுரை ஆதினதுக்கு மட்டும் வர மாட்டார்கள் . நாளை அரசியலுக்கு கூட வர வாய்ப்பு உள்ளது

சிந்தி ! செயல் படு !!


No comments:

Post a Comment