மருத்துவ செய்தி.
உடல் எடையை குறைக்கும் வெந்தயம்.
கோடைகாலம் ஆரம்பித்த நிலையில் ...உடல்
வெப்பமும் அதிகரித்து விட்டது. அப்போது வெந்தயத்தை அதிகம் சாப்பிடுவோம்.
ஏனென்றால் வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் என்பதால்.
இதற்கு இன்னொரு குணமும் இருக்கிறது. அது எப்படியென்றால் வெந்தயம் உடல் எடையையும் குறைக்கும் என்பதாகும்.
இதனை சாப்பிடுவதால் ஜிம் செல்லாமல், உடலை வருத்தி உடற்பயிற்சியை செய்யாமல் எளிதாக எடையை குறைக்கலாம்.
வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகமாகவும், கலொரி குறைவாகவும் உள்ளது. இதில்
நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இரத்த கொதிப்பு மற்றும் உடலில்
சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
மேலும் வெந்தயத்தில்
கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளதால், எடை அதிகரிக்க வழி இல்லை மற்றும் உடலில்
கலொரி குறைவாக இருந்தாலும் எடை அதிகரிக்காது.
இரவில் ஒரு ஸ்பூன்
வெந்தய விதையை நீரில் ஊற வைத்து, காலையில் சுடு தண்ணீரில் வெறும் வயிற்றில்
சாப்பிட்டால், உடலில் உள்ள நச்சுப்பொருளை வெளியேற்றுவதோடு, உடல் எடையையும்
குறைக்கும்.
வெந்தய விதையை சாதாரண தண்ணீரில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைப்பதோடு, ஜீரண சக்தியும் கூடும்.
வெந்தய விதையை பொன்னிறமாக வறுத்து அதை பொடியாக்கி, காற்று புகாத ஒரு டப்பாவில் வைத்து, உண்ணும் உணவில் கலந்து சாப்பிடலாம்.
வெறும் வயிற்றில் டீ யுடன் வெந்தயப் பொடியைக் கலந்து சாப்பிடலாம். இதனால் அடிக்கடி பசி ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும்.
No comments:
Post a Comment