Digital Time and Date

Welcome Note

Wednesday, May 9, 2012

அறியாமைக் காலத்தவரின் செயல் :



அறியாமை காலத்...து மக்கள் தங்களின் ஒவ்வொரு தேவைக்கும் தனி தனி தெய்வங்களை ஏற்படுத்தி குறைகளை தீர்த்து வைக்க வேண்டினர். மாற்று மதங்களிலும் இதே போன்ற செயல் இருப்பதை நாம் காணலாம்.


அதே போன்று நம் மக்களும் தங்களின் குறைகளை தீர்த்து வைக்க கோரி தனி,தனி அவ்லியாக்களை உருவாக்கி வைத்துள்ளனர்.

நீங்கள் பார்க்கும் புகை படம் நாகூர் தர்காவில் எடுக்கபட்டது. அங்குள்ள மக்கள் தங்கள் தேவைகளை வேண்டி அங்கு அடக்கம் செய்யப்பட்டவரிடம் பிரார்த்தித்து எழுப்பிய மரம் இது.

அல்லாஹ்வின் தூதரின் எச்சரிக்கை மெய் படுத்த பட்டதல்லவா! நீங்கள் உங்கள் முன்னோர்களின் செயல்களை அப்படியே பின்பற்றுவீர்கள் என்று
கூறியதை...


நாங்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களாக இருக்க, நபி (ஸல்) அவர்களுடன் ஹுனைன் யுத்தத்திற்குச் சென்றோம். அங்கு இணை வைப்பவர்களுக்கென்று ஒரு இலந்தை மரம் இருந்தது. அங்கு அவர்கள் (பரகத்தை) நாடி தங்களின் போர்க் கருவிகளைத் தொங்கவிட்டு அங்கு தங்கி (இஃதிகாஃப்) இருப்பார்கள். "தாத்து அன்வாத்' என்று அதற்குச் சொல்லப்படும்.


நாங்கள் அந்த மரத்தின் பக்கம் சென்ற போது நபி (ஸல்) அவர்களிடத்தில் "அல்லாஹ்வின் தூதரே! அவர்களுக்கு "தாத்து அன்வாத்து' என்று இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஏற்படுத்துங்கள்'' என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "சுப்ஹானல்லாஹ்! அல்லாஹு அக்பர்! இவையெல்லாம் (அறியாமைக் காலத்தவரின்) முன்னோர்களின் செயல் ஆகும்'' என்று சொல்லி, "என் உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில் பனூ இஸ்ரவேலர்கள் கேட்டதைப் போல் கேட்கிறீர்கள். (அதாவது) பனூ இஸ்ராயீல்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில், "மூஸாவே! அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பதைப் போல் எங்களுக்கும் கடவுளை ஏற்படுத்துங்கள்' என்று கேட்க, அதற்கு மூஸா (அலை) அவர்கள், "நீங்கள் ஒன்றுமறியாத விபரமற்றவர்கள்' என்று பதிலளித்தார்கள்.



இதைப் போலவே, நீங்களும் கூறியுள்ளீர்கள். நிச்சயமாக, நீங்கள் உங்களுக்கு முன்னவர்களின் வழிமுறையைப் படிப்படியாகப் பின்பற்றுவீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ வாக்கிதுல் லைசி (ரலி)

நூல் : திர்மிதீ 2106

No comments:

Post a Comment