நவம்பர் 16
1532: தென்
அமெரிக்காவில் இன்கா சாம்ராஜ்யத்தின் கடைசி மன்னரான அதாஹுவல்பா ஸ்பானிய
தளபதி பிரான்சிஸ்கா பிஸாரோவின் படைகளினால் கைது செய்யப்பட்டார்.
1943: ஜேர்மனியில் நோர்வேயினால் நிர்வகிக்கப்பட்ட மின்னுற்பத்தி நிலையமொன்றின் மீது அமெரக்க விமானங்கள் தாக்குதல் நடத்தின.
1944: ஜேர்மனியின் டுயெரென் நகரை நேச நாடுகளின் படைகள் நிர்மூலமாக்கின.
1945:
ரொக்கட் தயாரிப்பு தொழில்நுட்பத்திற்காக ஜேர்மனிய விஞ்ஞானிகள் மற்றும்
பொறியிலாளர்களை அமெரிக்க இராணுவம் இரகசியமாக இணைத்துககொண்டது.
1945: யுனெஸ்கோ அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.
1965:
சோவியன் யூனியனின் வெனேரா 3 விண்கலம் வெள்ளி கிரகத்தை நோக்கி ஏவப்பட்டது.
மற்றொரு கிரகத்தில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் அதுவாகும்.
1988:
பாகிஸ்தானில் பலவருடங்களின் பின்னர் நடைபெற்ற சுயாதீன தேர்தல் மூலம்
பாகிஸ்தான் பிரதமராக பெனாஸிர் பூட்டோ முதல் தடவையாக தெரிவானார்.
1997:
சீனாவில் ஜனநாயகத்திற்கான போராட்டங்களில் ஈடுபட்ட வெய் ஜிங்ஷேங்க் 18
வருடகாலம் தடுத்துவைக்கப்பட்டிருந்த பின்னர் மருத்துவ காரணங்களால்
விடுவிக்கப்பட்டார்.
2000: பில் கிளின்டன், வியட்னாம் யுத்தத்தின் பின்னர் வியட்னாமிற்குச் சென்ற முதல் அமெரிக்க ஜனாதிபதியானார்.
No comments:
Post a Comment