இந்த உலகில் பார்ப்பதற்கு அழகான விஷயங்கள் பல உள்ளன. அத்தகைய விஷயங்களில் ஒன்று தான் மீன் காட்சியகங்கள். ஏனெனில் இந்த மீன் காட்சியகத்தில் பல வகையான அழகான மீன்களை காணமுடியும். அதிலும் மீன்களை பார்ப்பதால், மனம் ஒரு வித அமைதியை அடையும். அந்த அளவு மீன்களுக்கு மனதை அமைதிப்படுத்தும் சக்தி உள்ளது. பொதுவாக மீன்களில் சுறாக்களை கடலில் தான் பார்ப்போம். ஆனால் இத்தகைய சுறா மீன்களில், சில சிறிய சுறாக்களை மீன் காட்சியகங்களில் காணமுடியும்.
அனைவரும் சுறாக்களை எப்போதும் தனியாகத் தான் வளர்க்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் சுறாக்களில் சில சுறாக்களை மற்ற மீன்களுடன் வளர்க்க முடியும். மேலும் வித்தியாசமான மீன்கள் அனைத்தையும் மீன் காட்சியகத்தில் தான் காணமுடியும். அவற்றை காண்பதோடு அதனை வாங்கி வளர்க்கவும் முடியும்.
இப்போது அந்த சுறா மீன்களில் வகைகளில் சில சுறாக்களைப் பற்றி பார்த்து, வேண்டுமென்றால், அதனை வீட்டிலும் வளர்க்கலாம்.
சிவப்பு வால் சுறா
இந்த சுறா தான் மிகவும் பிரபலமான சுறா வகைகளில் ஒன்று. இந்த சுறாவின் உடல் அடர்ந்த கருப்பு நிறத்திலும் அதன் வால் பகுதி சிவப்பு மற்றும் ஆரஞ்சு கலந்த நிறத்திலும் இருக்கும். இந்த சுறாக்கள் நன்றாக எளிதில் பழகக்கூடியவை. அதிலும் இது இதன் அளவில் உள்ள மற்ற மீன்களுடன், அதாவது தங்க மீன் போன்றவற்றுடன் நன்கு பழகுபவை.
பாலா சுறா
இந்த வகையான சுறா மூன்று நிறங்களான சில்வர், வெள்ளை மற்றும் கருப்பு நிறங்கள் கலந்து காணப்படும். இந்த மீன் தான் பார்ப்பதற்கு உண்மையான சுறா போன்று இருக்கும். ஆனால் இதன் இனம் வேறு. இது மிகவும் பெரியதாக வளரும். எனவே ஒரு தொட்டியில் ஒன்றை மட்டும் வளர்ப்பது நல்லது.
கரிக்கன் சுறா
இந்த பேம்பு சுறா எனப்படும் கரிக்கன் சுறா பெரியதாக வளராது. ஆனால் இதன் உடலில் கோடுகளுடன், பார்ப்பதற்கு நீளமாக, எப்போதும் மந்தமான நிலையில் இருக்கும். இதன் அசைவை வைத்து இது கரிக்கன் சுறா என்பதை அறிந்து கொள்ளலாம்.

ரெயின்போ சுறா
இந்த சுறா சிவப்பு வால் சுறாவைப் போன்றே காணப்படும். ஆனால் இது சற்று நீளமாக, பார்ப்பதற்கு மிகுந்த அழகுடன் காணப்படும். இந்த சுறாவிற்கு அதிக இடம் வேண்டும். அவ்வாறு கிடைக்காவிட்டால், அது மற்ற மீன்களை அழித்துவிடும். எனவே இதனை தனியாக வளர்ப்பது நல்லது.

பவள சுறா
இந்த சுறா பெரும்பாலும் தரையில் தான் இருக்கும். ஆகவே இதனை வளர்க்கும் போது தொட்டியில் பவளங்கள் அல்லது சிறுசிறு செடிகளை வைக்க வேண்டும். அவை சிறியவை மற்றும் அமைதியானவை.
சைனீஸ் சுறா
இந்த சுறா நீளமாக துடுப்புகளுடன் காணப்படும். சொல்லப்போனால், இது பார்ப்பதற்கு சுறா போன்றே இருக்காது. இவை குளிர்ந்த நீரில் மட்டும் வளரக்கூடியவை.
இந்த சுறா நீளமாக துடுப்புகளுடன் காணப்படும். சொல்லப்போனால், இது பார்ப்பதற்கு சுறா போன்றே இருக்காது. இவை குளிர்ந்த நீரில் மட்டும் வளரக்கூடியவை.
செயின் சுறா
மீன் தொட்டியானது மிகவும் அழகாக, வித்தியாசமாக காணப்பட வேண்டுமெனில், இந்த செயின் சுறாவை வளர்க்கலாம். ஏனெனில் இதன் சருமம் சற்று ஒளிர்வுடன் காணப்படும் மற்றும் இது அமைதியான ஒரு மீனும் கூட.
நன்றி அஹமது
No comments:
Post a Comment