Digital Time and Date

Welcome Note

Friday, January 11, 2013

எய்ட்ஸ் நோய்க்கான புதியதடுப்பூசி தயார்: 32 நோயாளிகளுக்கு சோதனை வெற்றி.

ஸ்பெயின் நாட்டில் உள்ள பாரசிலோனா பல்கலைக்கழக பேராசிரியர் பெலிப் கார்சியோ
தலைமையிலான விஞ்ஞானிகள், எயிட்ஸ் நோயைதற்காலிகமாக கட்டுப்படுத்த புதிய
தடுப்பூசி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

உலகம் முழுவதும் தற்போது, 3
கோடியே 40 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர் என்று கணக்கெடுப்பு
சொல்கிறது. இந்த எய்ட்ஸ் நோய்க்கு இன்னமும் மருந்து கண்டுபிடிக்கப்
படவில்லை என்றாலும், எய்ட்ஸ் நோயை ஓரளவுக்கு கட்டுப் படுத்தும் மருந்துகளை
தற்போது எய்ட்ஸ் நோயாளிகள் உபயோகித்து வருகின்றனர்.

இந்நிலையில்
எய்ட்ஸ் நோய்க்கான புதிய தடுப்பூசி ஒன்றை ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானிகள்
கண்டுபிடித்துள்ளனர். எய்ட்ஸ் நோயின் தாக்கம் உள்ளவர்கள் இந்த
தடுப்பூசியைப் போட்டுக் கொண்டால் எய்ட்ஸ் கிருமிகள் வளர்வது தற்காலிகமாக
கட்டுப்படுத்தப்படும் எனவும் இதனால் அவர்கள் நீண்ட நாட்கள் உயிர்வாழ
முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வெவ்வேறு நோய் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடியும் எனவும் கூறுகின்றனர்.

எய்ட்ஸ்
நோயாளிகள் தினமும் நோய் எதிர்ப்புத் திறன் மருந்துகளை சாப்பிட்டுக் கொண்டே
இருக்க வேண்டும். ஆனால் இந்த தடுப்பூசியைப் போட்டுக் கொண்டால்,
குறிப்பிட்ட காலம் வரை எய்ட்ஸ் நோய் கிருமிகள் வளர்வதை தடுத்து நிறுத்தி
வைக்க முடியும் எனவும், அதற்குப் பின்னர் மீண்டும் இந்த தடுப்பூசியைப்
போட்டுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுக்கிறது.

எய்ட்ஸ்
கிருமிகள் உடலின் எதிர்ப்பு சக்தியைத்தான் பாதிக்கும். ஆனால் இந்த
தடுப்பூசி எய்ட்ஸ் நோய் கிருமிகளுக்கு எதிர்ப்பு சக்தியாக விளங்கும். எனவே
நோயாளிகள் அவதிப்படுவது தடுக்கப் படும். 32 எய்ட்ஸ் நோயாளிகளுக்கு இந்த
சோதனை செய்யப்பட்டு வெற்றியடைந்து விட்ட நிலையில் , விரைவில் இந்த
தடுப்பூசி பயன்பாட்டுக்குவரும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது

நன்றி தினகரன்

No comments:

Post a Comment