Digital Time and Date

Welcome Note

Friday, February 17, 2012

தாயத்து இந்த சிர்கை பற்றிய தெளிவான விளக்கம் இறை மறை மற்றும் நபி மொழியின் அடிப்படையில்:


தாயத்து இந்த சிர்கை பற்றிய தெளிவான விளக்கம் இறை மறை மற்றும் நபி மொழியின் அடிப்படையில்:

(நபியே!) நீர் சொல்வீராக! அதிகாலையின் ரப்பிடம் நான் காவல் தேடுகிறேன். அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும், இருள் பரவும் போது ஏற்படும் (இரவின்) தீங்கை விட்டும், இன்னும் முடிச்சகளில் மந்திரித்து ஊதக் கூடிய பெண்களின் தீங்கை விட்டும், பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போது உண்டாகும் நீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்) (அத்தியாயம் :113)

சஹாபி அப்துல்லாஹ்பின் மஸ்ஊது(ரழி) அவர்கள் ஒரு நாள் மனைவி ஸைனப்(ரழி) அவர்களின் கழுத்தில் ஒரு கயிறு தொங்குவதைக் கண்டு, “இது என்ன கயிறு”? என்று கேட்டார்கள். அதற்கு “இது ஒரு முடிச்சக் போடப்பட்ட கயிறு” என்ற கூறினார்கள். உடனே அந்த கயிற்யை அப்துல்லாஹ்பின் மஸ்வூத் (ரழி) அவர்கள் அறுத்து எறிந்துவிட்டு என்னுடைய குடும்பத்தினர் இது போன்ற ஷிர்க்கை விட்டும் எச்சரிக்கையாக இருக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். “மந்திர வேலைகள் செய்வது, தாயத்துப் போடுவது, முடிச்சப் போடுவது இவை யாவும் ஷிாக்கான செயல்” என்ற நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டேன் என்று அப்துல்லாஹ்பின் மஸ்வூத்(ரழி) கூறினார்கள்.

(ஆதாரம் : அபூதாவுது, ஹதீஸ் எண் 3883, மிஷ்காத்: பக்கம் 389)

“மந்திரிப்பதைப் பற்றி நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது அது ஷைத்தானுடைய வேலை என்று கூறினார்கள்.

(அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ், ஆதாரம் : அபுதாவூது, எண் 3878)

கேளுங்கள் தரப்படும்

நிச்சயமாக உங்களுடைய இறைவன், நாணமுள்ளவனும். அருள்புரிபவனுமாவான், தன்னுடைய அடியான் தன்னிடம் அவருடைய இரு கைகயையும் ஏந்தி இறைஞ்ச அவன் அவரை வெறுமனே திருப்பி விட நானுகிறான்.

(நபிமொழி) அறிவிப்பவர் : ஸல்மான் (ரழி)

நூல்கள் : அபுதாவுது, திர்மிதீ

உக்பா பின் ஆமிர் (ரரி) அவர்கள் கூறுகையில் நபி (ஸல்) அவர்களி டத்தில் பத்து பேர் கொண்ட ஒரு கூட்டம் வந்தது. அதில் ஒன்பது நபர்களி டத்தில் பைஅத் செய்தார்கள். ஒருவரிடத்தில் மட்டும் பைஅத் செய்யவில்லை. அப்போது அந்தக் கூட்டத்தினர், ஒன்பது நபர்களிடத்தில் பைஅத் செய்தீர்கள். ஆனால் இவரிடத்தில் மட்டும் பைஅத் செய்யவில்லையே ஏன்? என்று கேட் டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவரிடத்தில் தாயத்து இருக்கிறது என்று சொல்ரி தன்னுடைய கையினால் நுழைத்து அதைத் துண்டித்தார்கள். பிறகு பைஅத் செய்தார்கள். பின்னர் யார் தாயத்தை தொங்க விட்டுக் கொண்டாரோ அவர் இணை வைத்து விட்டார் என்று கூறினார்கள்.
நூல்: அஹ்மத் (16781)

மேலும் நோய் ஏற்பட்டால் மருத்துவம் செய்ய நபிகளார் கட்டளையிட் டார்கள். இறைவனிடம் பிரார்த்தனை செய்யச் சொன்னார்கள். ஆனால் தாயத்தை அணியச் சொல்லவில்லை.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர), நூல் : புகாரி (5678)

அல்லாஹ்வின் அடியார்களே! மருத்துவம் செய்யுங்கள்! அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய மருந்தில்லாமல் இறக்கவில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உஸாமா பின் ஷரீக் (ரரி), நூல் : திர்மிதீ (1961), அபூதாவூத் (3357)

தாயத்தில் திருக்குர்ஆன் வசனங்கள் இருந்தால் கூடும் என்று சில அறிஞர் கள் கூறியுள்ளார்களே என்று கேட்கிறார்கள்.
இஸ்லாத்தில் ஒரு விஷயத்தைக் கூடும் என்று சொல்வதற்கும் கூடாது என்று சொல்வதற்கும் தகுதியானவர்கள் அல்லாஹ்வும் அவன் தூதருமாவார் கள். மற்ற எவரும் ஒன்றைக் கூடும் என்று கூற அல்லது கூடாது என்று கூறஅனுமதியில்லை இதுதான் இஸ்லாத்தின் அடிப்படை.

No comments:

Post a Comment