Digital Time and Date

Welcome Note

Tuesday, February 14, 2012

பீட்பர்னரில் Feed URL எவ்வாறு மாற்றுவது? ஈமெயில் வாசகர்களை அதிகரிக்க

பீட்பர்னரில் Feed URL எவ்வாறு மாற்றுவது? ஈமெயில் வாசகர்களை அதிகரிக்க


10/28/2011

பீட்பர்னரில் Feed URL எவ்வாறு மாற்றுவது? ஈமெயில் வாசகர்களை அதிகரிக்க

 வாசகர்களை அதிகரிக்க நாம் பல வகையான தொழில்நுட்பங்களை கையாள்கிறோம். அந்த வகையில் முக்கியமானது Email Subscribe வசதி. இந்த வசதியை Feedburner தளம் இலவசமாக வழங்குகிறது. இந்த தளத்தில் நம்முடைய பிளாக்கை இணைப்பதன் மூலம் நம் வாசகர்களுக்கு புதிய பதிவு போட்டவுடன் அந்த பதிவு ஈமெயிலில் சென்று விடும். இந்த feedburnerல் பிளாக்கை இணைக்கும் பொழுது நம் பிளாக்கிற்கு என்று ஒரு Feed முகவரியை பீட்பர்னர் தளம் உருவாக்கி தரும். அந்த Feed URL ல் தான் நம்முடைய பதிவுகள் அனைத்தும் அப்டேட் ஆகும். இதில் பீட்பர்னர் தளத்தால் தானாக உருவாக்கப்படும் முகவரி நாம் நினைத்தது போல இருக்காது.
உதாரணமாக

பழைய Feed URL - http://feeds.feedburner.com/QOVstM

மாற்றிய பிறகு -http://feeds.feedburner.com/vandhemadharam

இப்படி உங்களின் பிளாக் பெயரை கொடுத்து மாற்றி கொள்ளலாம். இப்படி மாற்றி கொண்டால் நீங்கள் ஞாபகம் வைத்து கொள்ளவும் சுலபமாக இருக்கும்.

Note: இந்த முறையில் URL மாற்றினால் ஏற்க்கனவே உங்கள் கணக்கில் உள்ள வாசகர்களை இழக்க நேரிடும். ஆகவே இந்த ஆரம்பத்திலேயே இதை செய்து விடுவது நல்லது. 
  • இதற்க்கு முதலில் இந்த லிங்கில் கிளிக் செய்து Feedburner தளத்திற்கு செல்லுங்கள். 
  • உங்களுக்கு கீழே இருப்பது போல விண்டோ வரும் அதில் நீங்கள் உருவாக்கி வைத்துள்ள பிளாக்கின் Feed இருக்கும் அதில் கிளிக் செய்யுங்கள்.
  • அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் உள்ள Edit Feed Details என்ற லிங்கை கிளிக் செய்யவும். 
  • அடுத்து இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் உங்களின் Feed முகவரிகள் காணப்படும். 
  • அதில் Feed Address பகுதியில் உள்ள எழுத்துக்களை அழித்து விட்டு உங்களுக்கு பிடித்த முகவரியை கொடுத்து கீழே உள்ள Save Feed Details பட்டனை அழுத்தவும். 
  • அவ்வளவு தான் உங்கள் விருப்பமான Feed முகவரியை வாசகர்களுக்கு பகிர்ந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment