Digital Time and Date

Welcome Note

Sunday, March 25, 2012

விடை தெரியாத கேள்விகள்


கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் பயன்பாடு பெருகிவரும் இந்நாளில், சில கேள்விகளுக்கு இன்னும் எனக்கு விடை தெரியவில்லை. அன்றாடம் செய்தித் தாள்களில் செய்திகளைப் படிக்கும் போது, இன்னும் ஏன் இவை இவ்வாறு நடக்கின்றன என்று நொந்து கொள்கிறேன். அவற்றை உங்களில் பலரும் எண்ணி இருப்பீர்கள். இதோ, அவற்றைப் பார்ப்போம்.
1. இது உண்மையா என்று சந்தேகம் இருந்த போதும், இது போன்ற இணைய வழி மோசடிகள் நடைபெற்று வருகின்றன என்று செய்திகள் வந்த போதும், ஏன் இன்னும் சிலர், தங்களுக்கு வந்த இமெயில் வழியாகச் சிக்கி, பல ஆயிரம் ரூபாய்களை இதுவரை சந்திக்காத, பேசி அறியாதவர்கள் கூறும் அக்கவுண்ட்டில் செலுத்துகிறார்கள்?
2. வைரஸ் குறித்த பொய்யான எச்சரிக்கை செய்திகளைப் பெற்ற பின்னரும், அவை பொய்யென்று அறிந்து, ஆனால் உண்மை யான வைரஸ் தொகுப்பும் பரவலாம் என்று அறிந்த பின்னரும், ஏன் வைரஸுக்கு எதிரான முக்கிய நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்கின்றனர்?
3. இனி ஐ.பி.வி.6 வழியில் தான் இணைய முகவரிகள் அமைக்கப்படும், வேறு வழியில்லை என்று பலமுறை தகவல்கள் தரப்பட்டும், ஏன், இதுவரை இந்த புதிய இணைய முகவரி கட்டமைப்பு குறித்து யாரும் சரியான நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்கின்றனர்.
4. என் கம்ப்யூட்டரில் உள்ள ஸ்பேம் மெயில்களுக்கான எதிரான ஆண்ட்டி ஸ்பேம் தொகுப்பு, சில ஸ்பேம் செய்திகளை மட்டும் தடுத்துவிட்டு, அதே போல தோற்ற மளிக்கின்ற மற்ற ஸ்பேம் மெயில்களை ஏன் விட்டுவிடுகிறது?
5. ஆங்கிலம் மற்றும் தமிழ் தவிர, அல்லது நான் விரும்பித் தேர்ந்தெடுத்த மொழிகள் தவிர, மற்ற மொழிகளில் வரும் மெயில்கள் ஏன் தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுவதில்லை?
6. பொய்யான ஏமாற்றும் தகவல்களுக்கு ஏமாறும் பலரின் பிரவுசர்களில், இவற்றைப் பற்றிக் கூறித் தடுக்கும் snopes.com என்ற தளத்தின் பெயர் பேவரிட் தளமாக ஏன் இல்லை என்று எனக்குத் தெரியவில்லை?
7. பிரைவசி செட்டிங்குகள் குறித்து ஏன் இளைஞர்கள் கூட கவலைப் படுவதில்லை?
8. பல நிறுவனங்கள், ஏன், தகவல் தொழில் நுட்பத் துறையில் இயங்கும் பல நிறுவனங்களும், அவ்வப்போது இணையத்தில் இருந்து மோசமான வைரஸ் மற்றும் பிற கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் குறித்தோ, அவை வரும் வழிகள் குறித்தோ ஏன் எச்சரிப்பதில்லை?
9. மேலே குறித்த வைரஸ்கள் அல்லது மற்ற புரோகிராம்கள் பரவுகையில், இதே நிறுவனங்கள், சில அடிப்படை பாதுகாப்பு வழிகளையோ, அல்லது பேட்ச் பைல் களையோ தங்கள் நிறுவன ஊழியர் களுக்கு அளிப்பதில்லை; அறிவுரை கூடத் தருவதில்லை, ஏன்?
10. மூன்று வயதுக் குழந்தைக்குக் கூட கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் பயன் பாட்டினை எளிதாகக் கற்றுக் கொடுக்க முடிகிறது. ஆனால், அவசியம் தேவைப் படும் 70 வயதுக்கும் மேலானவர்களுக்குக் கற்றுக் கொடுக்க முடிவதில்லை@ய, ஏன்?
11. இலவசமாக அப்டேட் செய்திடும் வசதியினைத் தந்த பின்னரும், பலர் ஏன் இன்னும் 20 ஆண்டுகளுக்கு முன்னால் வந்த அதே ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் போதும் என எண்ணிப் பயன்படுத்தி வருகின்றனர்?
12. பலவீனமான வழிகளைக் கண்டறிந்து அவை மூலம் வைரஸ்கள் மற்றும் பிற புரோகிராம்களை அனுப்புவது தெரிந்த பின்னரும், புதிதாகத் தரப்படும் புரோகிராம்கள் மற்றும் வழிமுறைகள் ஏன், அதே தவறுகளைத் தாங்கி வருகின்றன?
13. பாஸ்வேர்ட்களை மாற்றி அமைக்கையில், அதன் பாதுகாப்பு குறித்து கேட்கப்படும் கேள்விகள், பயனாளர் சார்ந்தவர்கள் அறியும் வகையில் எளிதாகவே உள்ளன?
14. பரவி கெடுதல் விளைவிக்கும் வைரஸ் குறித்த தகவல்கள் வந்த பின்னரும், இன்னும் பல நிறுவனங்களின் தலைவர் கள், எச்சரிக்கைகளை நம்பாமல், ஏன் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று உள்ளனர்?
15. ஏன் அனைத்து கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் புரோகிராம்களும், பயனாளர் அறியாமல், தாங்களே தங்களைப் புதுப்பித்துக் கொள்ளும் வகையில் அமைக்கப்படுவதில்லை?

No comments:

Post a Comment