Digital Time and Date

Welcome Note

Wednesday, March 28, 2012

விக்கிபீடியா பற்றி சில சுவாராசியமான தகவல்கள்


அண்மையில் 1766 முதல் 2010 வரை 244 வருடங்களாக தனது அச்சுப்பதிப்பை வெளியிட்டு வந்த என்சைக்ளோபீடியா
நிறுவனம் தற்போது அதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது இதற்கு டிஜிட்டல் உலகின் விக்கிபீடியா போன்ற தளங்களும் காரணமாக இருப்பதாக கருதப்படுகின்றது. தற்போது விக்கிபீடியா தொடர்பான சில சுவாராசியமான தகவல்களை பார்க்கலாம்.
விக்கிபீடியா எனும் பெயரின் காரணம் இதுதான் wiki என்றால் இணையங்களை பகிர்வதாம் pedia என்பது 
என்சைக்ளோபீடியா(encyclopedia) என்பதின் சுருக்கம்.
விக்கிபீடியா Jimmy Wales மற்றும் Larry Sanger எனும் இருவரால் 2001ல் நிறுவப்பட்டது.
விக்கிபீடியாவில் தற்போது உள்ள மொழிகளின் எண்ணிக்கை 260
வீக்கிபீடியா ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 680 மில்லியன் பக்கங்கங்களை உருவாக்கின்றது.
மோசமான வானிலை விக்கிபீடியாவின் மேம்படுத்தல்களுக்கு பாதிப்பை ஏற்படுதிகிறதாம். அதனால்தான் டச் மொழி 
விக்கிபீடியா ஸ்பையின் மொழி விக்கிபீடியாவை விட அதிக பக்கங்களை கொண்டுள்ளதாம்.
ஆங்கில மொழி விக்கிபீடியா, 3மில்லியனுக்கும் அதிகமான கட்டுரை தகவல்களை கொண்டுள்ளதாம். அதே போல்
ஜெர்மன் மொழியில் - 1.08மில்லியன்
பிரான்ஸ் மொழியில் - 958,000
இத்தாலி மொழியில் - 697,000
ஸ்பையின் மொழியில் - 608,000
விக்கிபீடியா எந்தவொரு விளம்பரங்களையும் கொண்டிருப்பதில்லை.
விக்கிபீடியர்கள் என வீக்கிபிடியா சமூக உறுப்பினர்களை குறிப்பிடபடுகிறார்களாம். ஆனால் எவரும் அங்குள்ள 
கட்டுரைகளை திருத்த முடியும்.
விக்கிபீடியாவின் நோக்கமே உலகில் உள்ள அனைத்து விபரங்களும் ஒவ்வொரு மொழிகளிலும் கிடைக்ககூடிய 
வகையில் இருக்கவேண்டுமென்பதாம்.
இதில் தணிக்கை முறை என்று எதுவும் இல்லை ஆனால் கட்டுரைகள் கட்டாயமாக இம்மூன்று வழிகாட்டுதல்களை 
சேர வேண்டுமாம். அது கலைக்களஞ்சியம், இயற்கை தன்மை, மெய்ப்பிக்கத் தக்கதாகவும் இருக்க வேண்டுமாம்.
யாரேல்லாம் விக்கிபீடியாவின் பக்கங்களை திருத்துகிறார்கள்:
69% வீதமானோர் பிழை சரிகளை திருத்திகிறார்கள்
73% வீதமானோர் தங்களின் அறிவை பகிர்ந்து கொள்ள விரும்புவோர்
19% வீதமானோர் முதுகலை பட்டம் பெற்றவர்கள்
4.4% வீதமானோர் PhD பட்டம் பெற்றவர்கள் 
13% வீதமானோர் பெண்கள் (31% வீதமே வாசிப்பவர்கள் பெண்கள்)
ஆக 2008ல் ஆய்வுகளின் படி விக்கிபீடியாவின் கட்டுரைகளின் துல்லியத்தன்மைக்கும் அதைப் போன்று என்சைக்ளோபிடியா பிரித்தானியா, அமெரிக்க வரலாறு அகராதி மற்றும் அமெரிக்க தேசிய வாழ்க்கை வரலாறு 
இணையம் என்பனவற்றின் கட்டுரை தகவல்களுடன் ஒப்பிடும் போது
விக்கிபீடியா - 80%வீதம் B-
மற்றவை 95 - 96% வீதம் A என்று குறிப்பிடுகின்றனர்.

No comments:

Post a Comment