Digital Time and Date

Welcome Note

Saturday, March 10, 2012

இதுவரை பாராத அதிர்ச்சியூட்டும் கொடூரமான சில புகைப்படங்கள்

பிற இணையத்தளங்களில் இப் புகைப்படங்கள் வந்திருக்கிறதா? எனத் தெரியாத போதும், இலங்கை இராணுவத்தால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட உடலங்கள் அதிர்ச்சியூட்டுகின்றன. சித்திரவைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட இந்த உடலங்களின் புகைப்படங்கள் இன்று கிடைக்கப் பெற்றுள்ளன. 
இக் கொலைகள் எப்போது நடைபெற்றன? என்ற விபரத்தைப் பெறமுடியவில்லை. தற்போது சிங்கள இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ள விடுதலைப் புலிகளை இலங்கை இராணுவம் இவ்வாறு படுகொலை செய்ததா? அல்லது புலிகளால் இவர்கள் படுகொலை செய்யபட்டார்களா? அல்லது வேறு மாற்று இயக்கத்தினர்களால் இவர்கள் இவ்வாறு படுகொலை செய்யபட்டார்களா? என்ற சந்தேகம் வலுக்கிறது. ஆதலால் இந்தப் புகைப்படங்களை நீங்கள் ஏற்கனவே பார்த்திருந்தால் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள், வாசகர்களே..
பல இளம் பெண்களும் இவ்வாறு படுகொலை செய்யபட்டுள்ளார்கள் இவர்களை யார் கொலை களத்துக்கு அனுப்பியது? இவர்கள் எதற்காக கொலை செய்யப்பட்டார்கள் என்பது போன்ற பலவிடயங்கள் இன்னுமே மர்மமாகவே உள்ளது. இங்கே இறந்து கிடக்கும் இளம்பெண்களை பார்க்கும் போது இவர்கள் பாடசாலையில் இருந்து கடத்தப்பட்டு கொலை செய்யபட்டுள்ளதாக தகவல் அறியாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுமார் நான்கு ஆண்கள் இங்கு கொலை செய்யப்பட்டு இருப்பதை அவதானிக்க முடிகிறது கடுமையான சித்திரவதைக்குப் பின்னர் இவர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கான சான்றுகள் இவர்கள் உடல்களில் இருக்கின்றன. எனவே இது குறித்த தகவல் யாருக்காவது தெரியும் என்றால் எம்முடன் தொடர்பு கொள்ளவும்..??!!
முக்கிய குறிப்பு…. புதினம், தமிழ்நாதம் போன்ற இணையதளங்கள் திடீர் என்று உள்வீட்டு பிரச்சினையால் உடனடியாக நின்றுபோன காரணத்தால் அந்த இணையத்தளங்களின் இடத்தை நிரப்புவதற்காய் புதிய இணையத்தளங்கள் (மனிதன்) ஆரம்பிக்கப்பட்டு பழைய, எப்பவோ பல இணையதளங்களில் பிரசுரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்ட புகைப்படங்களை எடுத்து, ஏதோ அவர்களுக்கு இன்று கிடைக்கப் பெற்றது போன்று அதை பிரசுரிப்பதன் மூலம் தங்களின் இணையதளத்தை புலம்பெயர் தமிழர்களிடையே பிரபல்யப் படுத்துவதற்காக (காசு கொடுத்து “லங்காசிறி”யில்) நாம் மேற்குறிபிட்ட மாதிரி ஓர் அறிக்கை தயாரிக்கப்பட்டு பிரசுரித்துள்ளார்கள். (இந்த இணையத்தளத்தின் வடிவமைப்பு, செய்திகள் ஒரே மாதிரியானவையாக காணப்படுவதால் இது “லங்கா சிறி”யின் ஓர் பிரதியாகவும் இருக்கலாம்) அந்த அறிக்கையில் காட்டப்படுகின்ற படங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே பல இணையதளங்களில் பிரசுரிக்கப்படட படங்களாகும். இந்த புகைப்படங்களை பார்க்கின்றவர்கள் இது குறித்த தகவல்கள் யாருக்காவது தெரியுமென்றால் தங்களிடம் (மனிதனுடன்) தொடர்பு கொள்ளட்டாம்.. என்று வேற பிரச்சாரம் செய்துள்ளார்கள்.
மனிதன் என்றால் யாரவர்? உலகத்தில் எத்தனையோ கோடி மனிதர்கள் வாழ்கிறார்கள் நாங்கள் யாருடன் தொடர்பு கொள்வது? இவர்கள் யாரை ஏமாற்றப் பார்க்கிறார்கள்? இது ஒரு பொய்யான பிரச்சார அறிக்கை என்பதை இந்த அறிக்கையை வாசித்தவுடனேயே நாம் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. அது யாதெனில் இந்த இணையதளத்துடன் தொடர்பு கொள்வதற்கான எந்தவொரு (ஈ-மெயில், ரெலிபோன்) தொடர்புகளுக்கான இணைப்புக்கள் இந்த இணையத்தளத்தின் எந்தவொரு பகுதியிலும் காணப்படவில்லை. இதிலிருந்தே தெரிகிறது இந்த இணையதளமானது பொய்களை பிரசுரிப்பதற்காக தொடங்கப்பட்ட ஓர் இணையதளமென்பது..
நாங்கள் இந்த, இணையத்தளத்தில் காட்சிப்படுத்தப்பட்ட புகைப்படங்களில் காணப்படுபவர்கள் யார் என்று அறிந்து கொண்டு விட்டோம். ஆனால் இந்த இணையதளத்துடன் எப்படி தொடர்பு கொள்வது? என்பதை சம்பந்தபட்ட புகைப்படங்களை பிரசுரித்த இணையத்தளத்தினர் தயவுசெய்து அறியத்தந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.இவர்களை அடையாளம் கண்டால் தங்களிடம் தகவல் தரசொல்லி இந்த செய்தியை பிரசுரித்த இணையதளத்தினர் இந்த தகவலை பெற்றுக் கொண்டால் இந்த படுகொலைகள் சம்பந்தமாக மேற்கொண்டு என்ன நடவடிக்கையை மேற்கொள்ளுவார்களாம்?..
இந்த மாதிரியான புலிப்பினாமி பூச்சாண்டி காட்டி பிழைக்கும் இணையதளங்கள் தமிழனின் தலையில் திரும்பவும் திரும்பவும் மிளகாய் அரைக்கலாம் என நினைக்கிறார்கள். ஆனால் நீங்கள் தமிழனுடைய தலையில் இனிமேல் மிளகாய் அரைக்க முடியாது. ஏற்கனவே நீங்கள் மிளகாய் அரைத்து பூசி வைத்திருக்கும் புலியாதரவாளர்களின் தலையில் வேண்டுமானால் மீண்டும் மீண்டும் வடிவாக அரையுங்கோ.
இதில் இன்னமொரு வேடிக்கையான விடயம் என்னவெனில் இந்த இணையதளத்தில் புலிசார்ந்த, புலிசாராத இணையதளங்கள் யாவற்றையும் தங்களுடன் (இணைப்பில்) இணைத்துள்ளார்கள். புலி இயக்கத்தின் எல்லா வகையான செயல்களும் படிப்படியாக மறைந்து போவதால் ஏதோதோ வடிவங்களில் புதிது புதிதாய் உயிர்த்துக் கொண்டு வருகிறார்கள். எந்த வடிவில் வந்தாலும் மக்கள் இவர்களை அடையாளம் கண்டுகொள்வார்கள் என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்..!!!
நன்றி.. ஆக்கம் கி.பாஸ்கரன்.
(நாம் பிரசுரித்த படங்களில் உள்ளவர்கள் புலிகளின் தலைவர் பிரபாகரன், கடற்புலிகளின் தலைவர் சூசை, புலிகளின் முக்கிய தளபதிகளான பானு , nஐயம் மற்றும் பிரபாகரனின் புதல்வர்களான சார்ள்ஸ் அந்தனி, பாலச்சந்திரன் உட்பட புலியுறுப்பினர்களின் உடல்களே…..)

No comments:

Post a Comment