வீட்டு வாசலில் அமர்ந்திருந்தேன்...
என்னை நோக்கி....
என் தோழியின் பத்து வயது மகள் ஓடி வந்தாள்..
"ஆண்டி" என்று என்னை நெஞ்சோடு இருக்க கட்டிக் கொண்டாள்...!
நான் "ஆண்டி"யாம் ...?
என்னைவிட வயதில் குறைந்த என் தோழிக்கு
பத்து வயதில் ஒரு குழந்தை....!
நானோ...
திருமணச் சந்தையில் இன்னும்
"விலை" போகாத,காட்சிப் பொருளாய்....!
நாட்கள் செல்கிறது...
வயதோ கூடிக் கொண்டே போகிறது...
என்னை பெண் பார்க்க ஒவ்வொரு நாளும்,
ஒவ்வொருவராய் வருகிறார்கள்..!
நானோ காட்சிப் பொருளாய் ..
ஒவ்வொருநாளும் ஒவ்வொருவருக்காகவும் அலங்கரிக்கப்படுகிறேன்...!
அழகில் குறையில்லை என்றார்கள்..
நிறத்தில் குறையில்லை என்றார்கள்...
குணத்தில் குறையில்லை என்றார்கள்...
பணத்தில் மட்டும் குறையைக் கண்டார்கள்!
ஆம்! நானோ ஏழைக்குப் பிறந்த பேழை..!
என்னை ஏழை என்பதற்காக ஒதுக்கும் இளைஞர்களே!
நான் உங்கள் வீட்டில் பிறந்த சகோதரியாக இருந்தால்..
முதிர்க் கன்னியாக இருந்தால்...
என் "வேதனையின் வலி" உங்களுக்குப் புரியும்தானே!
கை கூலி வாங்குவது கையாலாகாத தனம்
என்பது புரிந்தும் புரியாமல் நடிக்கும் இளைஞர்களே!!
எந்தப் பெண்ணும் கேட்காத,
எந்தப்பெண்ணிடமும் நீங்கள் கேட்டிறாத..
ஒன்றை உங்களை நோக்கி ..நான் கேட்கவா..?
என்னைத் திருமணம் செய்ய விலை பேசும்
கையாலாகாத இளைஞனே!
திருமணத்திற்குப் பின்பு...உன் குழந்தையை
என் வயிற்றில் சுமக்கப்போறேனே....
அதற்கு என்ன விலை நீ தருவாய்...?
என் கஷ்டத்தைத் தாங்கி ...
உன்னை சந்தோஷப் படுத்துவேனே..
அதற்கு என்ன விலை நீ தருவாய்....?
உன் குழந்தைகளைப் பராமரிக்கப் போறேனே...
அதற்கு என்ன விலை நீ தருவாய்...?
உனக்காக என் சொந்தப் பந்தத்தை
தியாகம் செய்யப் போறேனே...
அதற்கு என்ன விலை நீ தருவாய்..?
நீ என்னை என்ன கொடுமைப் படுத்தினாலும்,
பெண்ணா பிறந்ததினால்....
அதையும் அனுபவிக்கப் போறேனே...
அதற்கு என்ன விலை நீ தருவாய்....?
கோபம் வருகிறதா..?
ரோஷம் வருகிறதா..?
வெட்கம் வருகிறதா..?
உனக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்யும்
என்னை விலை பேச மட்டும் .....
உனக்கு எப்படி மனசு வருகிறது....?
இருப்பினும்...
அல்லாஹ்வுக்காக என் உணர்வுகளை...
கட்டுப் படுத்திக் கொள்கிறேன்...!
நான் மறுமைக்காக வாழ்பவளாக இருப்பதால்...
தவறு செய்வதை என் கற்பனையில் கூட
நான் நினைக்கவில்லை...!
என் இறைவன் எண்ணைக் கைவிட மாட்டான்..
என்ற உறுதியான நம்பிக்கை எனக்கு..
இன்னும் இருக்கிறது...! இன்ஷா அல்லாஹ் இந்த நம்பிக்கைத் தொடரும்!
வழி மீது விழி வைத்துக் காத்திருக்கிறேன்!
ஒரு உண்மையான (கை கூலி வாங்காத)
ஆண் மகனை எதிர்பார்த்து......!!
(அன்புச் சகோதர்களே! நான் பழகிய என் சில சகோதரிகளின் கண்ணீர்க் கதைக்காக இந்தப் பதிவு!எழுத்துக்கள் என்னுடையதாக இருந்தாலும்..உணர்வுகள் ..என் சகோதரிகளின் உணர்வுகள்!
அல்லாஹ்வைப் பயப்படுவோம்!
வரதட்சனையின்றி திருமணம் செய்வோம்!!)
இந்தப் பதிவின் மூலம் வரதட்சணை வாங்க நினைக்கும்..
ஒரு இளைஞன் திருந்தினாலும்...அது இந்தப் பதிவிற்கு கிடைத்த மகத்தான வெற்றியாக நான் கருதுவேன்!!
முகநூலில் ஒரு சகோதரியிடமிருந்து...
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ وَلَاتَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّـهَ ۖ إِنَّ اللَّـهَ شَدِيدُ الْعِقَابِ (05-02)
..and help one another in goodness and piety, and do not help one another in sin and aggression; and be careful of (your duty to) Allah; surely Allah is severe in requiting(05;02)
”..நீங்கள் நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள், பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் அவன் கடுமையாக தண்டிப்பவன்" (05,02)
No comments:
Post a Comment