Digital Time and Date

Welcome Note

Saturday, March 31, 2012

ராடாரின் பயன்களைப் பற்றி சற்று ஆராய்வோமா!


'தாவூதுக்கு நம் அருளை வழங்கினோம்.'மலைகளே! பறவைகளே! அவருடன் சேர்ந்து துதியுங்கள்' எனக் கூறினோம். போர்க் கவசங்களைச் செய்வீராக! அவற்றின் வளையங்களை ஒழுங்குபடுத்துவீராக!' எனக் கூறி அவருக்கு இரும்பை மென்மையாக்கினோம்.'
-குர்ஆன் 34:10,11

'அதை சுலைமானுக்கு விளங்க வைத்தோம். இருவருக்குமே அதிகாரத்தையும் கல்வியையும் வழங்கினோம். பறவைகளையும் மலைகளையும் தாவூதுக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். அவை இறைவனைத் துதித்தன. நாம் எதையும் செய்யக் கூடியவராவோம்'

-குர்ஆன் 21:79

'சுலைமானுக்கு காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம். அவரது கட்டளைப்படி அவர் நினைத்தவாறு பணிந்து அது சென்றது'

-குர்ஆன் 38:36

மேலே உள்ள வசனங்கள் இறைத் தூதர் சுலைமானுக்கும் இறைத் தூதர் தாவூதுக்கும் இறைவன் கொடுத்த சில சிறப்பியல்புகளை சொல்லிக் காட்டப்படுகிறது. இந்த வசனங்கள் நாம் தற்போது உபயோகத்தில் பயன்படுத்திக் கொண்டிருக்கும் மின் காந்த அலைகளின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாகப் படுகிறது. இது பற்றிய முழு உண்மையை இறைவனே அறிந்தவன். சூரா 34:10 ல் உபயோகப்படுத்தப்பட்டுள்ள 'அவ்விபி' என்ற அரபு வார்த்தையானது “திரும்பப் பெறப்படும் ஒலி” என்ற அர்த்தத்தைக் கொடுக்கும். இது தற்போது நமது பயன்பாட்டில் உள்ள ரேடாரின் தொழில் நுட்பத்தை ஒத்திருக்கிறது.

ரேடாரின் இயக்கம் என்பது ஒலி பிரதிபலிப்புக்கு நெருங்கிய தொடர்புடையது. உதாரணத்துக்கு ஒருவர் ஒரு பள்ளத்தாக்கிலோ அல்லது ஒரு குகையிலோ நின்று கொண்டு வேகமாக சப்தமிட்டால் அவருடைய ஒலியே அவருக்கு பிரதிபலிப்பாக திரும்ப வருவதை உணருவார். (படம் 1) (மனிதர்கள் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல..அல்ல.. அதையும் தாண்டி புனிதமானது...புனிதமானது....:-)) இதிலிருந்து காற்றில் நமது ஒலியானது எவ்வாறு பயணிக்கிறது. எவ்வளவு தூரம் பயணிக்கிறது என்பதை துல்லியமாகக் கணக்கிட முடியும்.





ரேடாரின் தொழில் நுட்பத்தில் மின் காந்த அலைகளின் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுவதாக நாம் முன்பு பார்த்தோம். ஒலியானது மைக்ரோவேவ் அதிர்வெண் சிக்னல்களால் உமிழப்பட்டு அவை திருப்பி அனுப்பப்படுகிறது. இத்தகைய சமிக்ஞைகளை நாம் எகோ(echo) என்கிறோம். ரேடார் சாதனமானது ஒளியின் அளவையும் அவற்றின் தூரத்தையும் கணக்கிட்டு எதிரொலிக்கும் வேலையை செய்து தருகிறது. (படம் 2)



ரேடாரின் அதிர்வெண்கள் உபயோகத்துக்குத் தக்கவாறு மாறுபடும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது. மின் காந்த ஆற்றல் வானொலி தொலைக்காட்சி என்று நமது தேவைக்குத் தக்கவாறு ரேடாரின் அதிர்வெண்களும் மாறுபடும். (படம் 2).

எகோவாக பிரதிபலிக்கும் ஒலிகள் எண்களாக மாற்றப்பட்டு ரேடார் ரிசீவர் மூலமாக டேட்டாவாக சேமிக்கப்படுகிறது. (படம் 3)




முடிவாக இந்த டேட்டாக்கள் படங்களாக மாற்றப்படுகிறது. (படம் 4)




குர்ஆன் 34:10ல் அரபி மொழியின் வினைச் சொல் 'அலென்னா' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் அர்த்தமானது 'இணக்கமானதாக நாம் மாற்றுவோம்' என்ற பொருளில் வரும். குர்ஆனில் இங்கு தேர்ந்தெடுத்து இந்த வார்த்தையை இறைவன் பயன்படுத்தியிருக்கிறான். அதாவது கடினத் தன்மை உடைய இரும்பை இலகுவானதாக மாற்றித் தருகிறான். ரேடார் தொழில் நுட்பத்தில் மென்மைப்படுத்தப்பட்ட இரும்பையே நாம் உபயோகப்படுத்துகிறோம். (படம் 5)




“அவர் நினைத்தவாறு பணிந்து அது சென்றது'” என்று இறைத் தூதர் சாலமன் காற்றுக்கு கட்டளையிட்டது மின் காந்த சமிஞ்கைகளின் உதவியால் இருக்கலாம். இறைவனே இதன் முழு உண்மையையும் அறிந்தவன்.

ரேடாரின் உபயோகத்தை இன்று நாம் நிதர்சனமாக பார்த்து வருகிறோம். கோள்களின் அமைப்பு, பூமியின் அமைப்பு, ஒரு நாட்டின் அமைப்பு, ஒரு ஊரின் ஏன் ஒரு வீட்டின் அமைப்பையையே இன்று ரேடாரின் உதவி கொண்டு துல்லியமாக கணக்கிட்டு விடுகிறோம்.



'பின்னர் வானம் புகையாக இருந்தபோது அதை ஒழுங்குப் படுத்த நாடினான். விரும்பியோ விரும்பாமலோ நீங்கள் கட்டப்பட்டு நடக்க வேண்டும் என்று அதற்கும் பூமிக்கும் கட்டளையிட்டான். விரும்பியே கட்டுப்பட்டோம் என்று அவை கூறின.'
-குர்ஆன் 41:11,12

இது போன்ற வசனங்களை எல்லாம் நாம் பார்க்கும் போது எப்படி காற்றும், பூமியும் மலைகளும், பேச முடியும் என்ற கேள்வி எழலாம். இறைவனுடைய ஆற்றல் எப்படிப்பட்டது என்றோ அல்லது அவனது ஆற்றல் எதை எல்லாம் உள்ளடக்கியது என்றோ நம்மால் ஒருக்காலும் விளங்க முடியாததாகும். அவன் அனைத்து சார்பியல் நிலைகளையும் ஒப்பீடுகளையும் கடந்து தமக்குத் தாமே சம்பூரணமானவன். எனவே அவனது அறிவாற்றலுக்கு முன்னால் உயிருள்ளவை உயிரற்றவை என்ற பாகுபாடு கிடையாது.

மனிதர்களாகிய நாம் கூட உயிரற்ற பொருட்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்வதைப் பார்க்கலாம். உதாரணத்திற்கு விண்வெளிக்கு செலுத்தப்படும் ராக்கெட்டை எடுத்துக் கொள்வோம். அதை விண்ணில் செலுத்தவதற்கும் அது விண்வெளியில் செய்யப்படக் கூடிய வேலைகளையும் நாம் பூமியில் இருந்து கொண்டே கட்டளைகளை அதற்கு பிறப்பிக்கிறோம். அவைகள் நமது கட்டளைகளை உடன் நிறைவேற்றுகின்றன. (சம்பள உயர்வு கேட்பதில்லை: வேலை நிறுத்தமும் செய்வதில்லை.:-)) இயக்கத்தில் சில குறைபாடுகள் இருந்தால் அதையும் சரி செய்ய சொல்லி அவை சமிக்ஞை தருகிறது. பொறியாளர்கள் சரி செய்தவுடன். அவை தங்களின் வேலைகளை சரி வர செய்கின்றன. இந்த பொருட்களுடன் நாம் உரையாட மனித மொழிகளை உபயோகிக்காமல் மின் அணு மொழியில் இயந்திரங்களோடு உரையாடுவதால் அவற்றின் வேலைகளை நம்மால் வாங்க முடிகிறது. எனவே உயிரற்ற பொருட்கள் விளங்கும் மொழியில் நமது பரிமாற்றம் இருந்தால் அத்தகைய அறிவு நமக்கு கொடுக்கப்பட்டிருந்தால் எவற்றுடனும் நம்மால் சம்பாஷனை நடத்த முடியும் என்று அறிகிறோம். அற்பனான மனிதன் ராக்கெட்டுகளோடு உரையாடும் போது நம்மை படைத்த இறைவன் மலைகளோடும், காற்றோடும் நதிகளோடும் உரையாட கருத்துப் பரிமாற்றம் செய்ய வல்லமை உடையவனே என்றும் நாம் நம்புகிறோம்.

No comments:

Post a Comment