1. அல்லாஹ்வை நம்ப வேண்டும்.
2. வானவர்களை நம்ப வேண்டும்.
3. வேதங்களை நம்ப வேண்டும்.
4. தூதர்களை நம்ப வேண்டும்.
5. இறுதி நாளை நம்ப வேண்டும்.
6. விதியை நம்ப வேண்டும்.
"இவ்வுலகம் ஒரு நாள் அடியோடு அழிக்கப்படும். அவ்வாறு அழிக்கப்பட்ட பின் மனிதர்கள் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவார்கள். அப்போது அனைவரையும் இறைவன் விசாரித்து நல்லோர்க்கு சொர்க்கத்தையும், தீயோருக்கு நரகத்தையும் அளிப்பான்” என்பது அந்த ஆறு விஷயங்களில் ஒன்றாகும்.
மேற்கண்டவாறு நம்புவது தான் இறுதி நாளை நம்புதல் என்ற சொற்றொடரால் குறிப்பிடப்படுகிறது.
இந்த நம்பிக்கை தான் இஸ்லாத்தின் ஆணி வேராக திகழ்கிறது.
இப்படி ஒரு நியாயத் தீர்ப்பு நாள் தேவை தான் என்று ஒவ்வொரு மனிதனின் உள்ளுணர்வும் ஒப்புக் கொள்கிறது.
இவ்வுலகில் ஒருவன் மிகவும் நல்லவனாக வாழ்கிறான். ஆனாலும் அவன் மிகவும் சிரமப்படுகிறான். அவன் செய்த நன்மைகளுக்கான பரிசு இவ்வுலகில் அவனுக்குக் கிடைப்பதில்லை என்பதை நாம் பரவலாகக் காண்கிறோம்.
அது போல் ஒரு மனிதன் அனைத்து தீமைகளிலும் மூழ்கிக் கிடக்கிறான். எல்லா விதமான அக்கிரமங்களையும் செய்கிறான். ஆனாலும் இவன் சொகுசாக வாழ்ந்து மரணித்து விடுவதையும் நாம் காண்கிறோம். இவன் செய்த தீமைகளுக்கான தண்டனையை இவ்வுலகில் இவன் அனுபவிக்கவில்லை என்பதையும் கண்கூடாகப் பார்க்கிறோம்.
பத்து கொலை செய்த ஒருவன் மரண தண்டனை பெற்றால் கூட அது அவனது குற்றத்திற்கு தகுந்த தண்டனை அல்ல. ஒரு உயிரைக் கொன்றதற்கு பகரமாக அவனது உயிரை வாங்குகிறோம். ஆனால் மீதி ஒன்பது கொலைகள் செய்ததற்கு என்ன தண்டனை..?அதற்கான தண்டனையை இவ்வுலகில் அவனுக்கு யாராலும் வழங்க முடியாது.
எனவே இது போன்றவர்கள் தமது செயலுக்கேற்ற தண்டனையை அல்லது பரிசை அடைய வேண்டுமானால் அது இவ்வுலகில் அறவே சாத்தியமற்றதாகி விடுகிறது.
இதன் காரணமாக தீயவர்களைப் பார்த்து மற்றவர்களும் தம்மை தீய செயல்களில் ஈடுபடுத்திக் கொள்ள ஆரம்பிக்கின்றனர்.
"யாரும் தன்னைப் பார்க்காத வகையில் குற்றம் செய்து விட முடியும்” என்று குற்றம் செய்யும் மனிதன் நம்புகிறான். அப்படி யாராவது பார்த்து விட்டாலும் அவர்களைச் சரிக்கட்ட முடியும் எனவும் நினைக்கிறான். இதன் காரணமாக குற்றச்செயல்கள் அதிகரிக்கின்றன.
இந்த நிலையை மாற்ற வேண்டுமானால், மனிதன் நல்லவனாகவே வாழ வேண்டுமானால், "நியாயத் தீர்ப்பு நாள்" ஒன்று உள்ளது என்று நம்புவது தான் அதற்கான ஒரே வழி.
அதைத் தான் இறுதி நாளை நம்புதல் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. அந்த நாளில் நமது செயல்களின் விளைவை அனுபவித்தே ஆக வேண்டும் என்பது தான் இஸ்லாத்தின் "எச்சரிக்கை".
அந்த நாள் அருகிலேயே உள்ளது.
அந்த நாள் எப்போது வரும் என்பதை இறைவன் கூறாவிட்டாலும் சீக்கிரமே அந்த நாள் வந்து விடும் என்று திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் குறிப்பிடுகிறது.
சமீபத்தில் உள்ள வேதனை குறித்து உங்களை நாம் எச்சரிக்கிறோம். அந்நாளில் தான் செய்த வினையை மனிதன் காண்பான். நான் மண்ணாக ஆகியிருக்கக் கூடாதா..? என்று (ஏக இறைவனை) மறுப்பவன் கூறுவான்.
(திருக்குர்ஆன் 78:40)
அவர்கள் அதைத் தொலைவாகக் காண்கின்றனர். நாமோ அருகில் உள்ளதாகக் காண்கிறோம்.
(திருக்குர்ஆன் 70:6,7)
அந்த நேரம் நெருங்கி விட்டது. சந்திரனும் பிளந்து விட்டது.
(திருக்குர்ஆன் 54:1)
அந்த நேரம் அருகில் இருக்கக்கூடும் என்பது உமக்கு எப்படித் தெரியும்..?
(திருக்குர்ஆன் 42:17)
(முஹம்மதே!) அந்த நேரம் பற்றி மக்கள் உம்மிடம் கேட்கின்றனர். "அது பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது” எனக் கூறுவீராக..! அந்த நேரம் சமீபத்தில் இருக்கக்கூடும் என்பது உமக்கு எப்படித் தெரியும்..?
(திருக்குர்ஆன் 33:63)
உண்மையான வாக்குறுதி நெருங்கி விட்டது. அப்போது (ஏக இறைவனை) மறுத்தோரின் பார்வைகள் நிலை குத்தியதாக இருக்கும். "எங்களுக்குக் கேடு தான். நாங்கள் இது பற்றிக் கவனமற்று இருந்து விட்டோம். இல்லை நாங்கள் அநீதி இழைத்தோம்” (என்று கூறுவார்கள்).
(திருக்குர்ஆன் 21:97)
மனிதர்களுக்கு அவர்களின் விசாரணை நெருங்கி விட்டது. அவர்களோ புறக்கணித்து, கவனமின்றி உள்ளனர்.
(திருக்குர்ஆன் 21:1)
"எங்களை எவன் மீண்டும் படைப்பான்..?” என்று அவர்கள் கேட்கின்றனர். "முதல் தடவை யார் உங்களைப் படைத்தான்?” என்று கேட்பீராக..! உம்மிடம் தங்கள் தலைகளைச் சாய்த்து, "அது எப்போது வரும்?” என்று கேட்கின்றனர். "அது சமீபத்தில் வரக் கூடும்” என்று கூறுவீராக...!
(திருக்குர்ஆன் 17:51)
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியையும், அவன் படைத்துள்ள ஏனைய பொருட்களையும், அவர்களின் காலக்கெடு அருகில் இருக்கக்கூடும் என்பதையும் அவர்கள் கவனிக்கவில்லையா...? இதன் பிறகு எந்தச் செய்தியைத் தான் அவர்கள் நம்பப் போகிறார்கள்..?
(திருக்குர்ஆன் 7:185)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஆட்காட்டி விரலையும், நடு விரலையும் இணைத்துக் காட்டி "நானும் யுக முடிவு நாளும் இவ்விரல்கள் அருகருகே இருப்பது போல இருக்கிறோம்” எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி),
நூல்: புகாரி 4936, 5301, 6503.
அந்த நாள் மிகவும் சமீபத்தில் வந்து விடும் என்று 1400 ஆண்டுகளுக்கு முன்னர் அல்லாஹ் அறிவித்த பின், இன்னும் அந்த நாள் வரவில்லையே என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படலாம்.
இதைச் சரியான முறையில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வுலகம் படைக்கப்பட்டு இலட்சோப லட்சம் ஆண்டுகள் கடந்து விட்டன. கடந்து விட்ட இலட்சோப லட்சம் ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது 1400 ஆண்டுகள் என்பது மிகவும் அற்பம் தான். இன்னொரு ஆயிரம் ஆண்டுகள் கழித்து மறுமை நாள் வந்தாலும் "அது சமீபத்தில் தான் உள்ளது” என்ற அறிவிப்புக்கு அது முரணாக அமையாது.
நன்றி: Akbar Ali.
{இது எனது 3333 வது பதிப்பு.}

No comments:
Post a Comment