மரணதண்டனை பற்றி இருவேறு கருத்துக்கள் உலகெங்கும் இருந்து வருகிறது....
எந்த ஒரு விஷயம் என்றாலும் இருவேறு கருத்துக்கள் இருக்கத்தான்
செய்யும்....ஒன்று வேண்டும்,மற்றொன்று வேண்டாம் ஒன்று சரி மற்றொன்று தவறு
என வேறுபாடு இருக்கத்தான் செய்யும்....
அந்த வகையில் மரணதண்டனை அவசியமா இல்லையா என்பதுபற்றி ஒரு சிறு அலசல்....
மரணதண்டனை என்பது சும்மா ரோட்டில் நடந்து போறவனுக்கோ, கொள்ளை அடிப்பதற்கோ,
மற்றவரின் நிலத்தை அபகரித்தற்கோ, மோசடி செய்ததற்கோ கொடுக்கப்படும் தண்டனை
அல்ல....ஒரு உயிரை அநியாயமாக பறிக்கும் மிருக தனத்திற்கு கொடுக்கப்படும்
உச்ச கட்ட தண்டனை....
ஒரு கொலை செய்தால் அவனுக்கு வழங்கப்படும் உச்ச கட்ட தண்டனை ஆயுள்தண்டனையாக
இருந்தால் கொலை செய்தவன் சிறைக்கு செல்வான்....ஆனால் ஆயிளோடு
இருப்பான்...அவனால் கொலை செய்யப்பட்டவர் எக்காலத்திலும் திரும்பி
வரப்போவதில்லை .....இது பாராபட்சமாக இல்லையா?
சிறை சென்ற கொலையாளி திரும்ப வந்து மற்றொரு கொலை செய்கிறான்..இப்போதும்
அவனுக்கு சிறைதண்டைதான் என்றால் யாருக்குதான் பயமிருக்கும்.....கொலை
செய்தால் தண்டனை கடுமையாக இருக்கும் என ஒருவன் பயந்தால்தான் அது
தண்டனை.....
இதைதான் திருக்குர்ஆன் கூறுகிறது....
எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டு விட்டால், அவருடைய வாரிஸுக்கு
(பதிலுக்கு பதில் செய்யவோ அல்லது மன்னிக்கவோ) நாம் அதிகாரம்
கொடுத்திருக்கிறோம்; ஆனால் கொலையி(ன் மூலம் பதில் செய்வதி)ல் வரம்பு கடந்து
விடக் கூடாது; நிச்சயமாக கொலையுண்டவரின் வாரிசு (நீதியைக் கொண்டு) உதவி
செய்யப் பட்டவராவார்17:33.
.கொலை செய்தால் அவனுக்கு மரணதண்டனை...இதனால் கொலை செய்தவனும்
தண்டிக்கப்படுவான் ...கொலை செய்யப்பட்ட நபரின் குடும்பத்திற்கும்
கொலையாளியை தண்டித்த நிம்மதி கிடைக்கும்....மற்றொருவன் அடுத்த கொலை செய்ய
அஞ்சுவான்.....ஒரே கல்லில் மூன்று மாங்காய்....எக்காலத்திற்கும் இந்த
சட்டம் பொருந்தும்....
ஒருவன் ஒரு கொலை செய்தால் கொலை செய்யப்பட்ட குடும்பத்திற்குஎவ்வளவு
பாதிப்பு என்பதை அக்குடும்பத்தில் இருப்பவர்கள்தான் உணர முடியும்......
சாதாரணமாக ஒருவர் நோய்வாய்ப்பட்டு இறந்தாலே அந்த துக்கத்தை அவர்
உறவினர்களாலும் நண்பர்களாலும் தாங்க இயலாது....அப்படி இருக்கையில் ஒருவர்
கொலை செய்யப்பட்டால் ?
கொலை செய்தால் மரணதண்டனைதான் என்றால் நிச்சயம் கொலை செய்ய பயம் வரும்..தண்டனைகள் கடுமையாக இருந்தால்தான் தவறுகள் குறையும்....
கடுமையான இந்த சட்டத்தை சொல்லும் திருக்குர்ஆன் பாதிக்கப்பட்ட நபர்கள்
கொலையாளியை மன்னித்தால் அவனுக்கு தண்டனையை குறைக்கலாம் என மற்றொரு
வாய்ப்பையும் வழங்கி உள்ளது....அது சம்பந்தப்பட்ட நபர்களின் மனநிலையை
பொருத்தது.....
பாதிக்கபட்டவர்கள் வழியை குறைக்க (நீக்க இல்ல குறைக்க மட்டும்தான் )
மரணதண்டனை எனும் மருந்து தேவை .....அதுவே குற்றங்கள் குறைய
வழிவகுக்கும்.....
No comments:
Post a Comment