 ‘சூப்பர்
 பஸ்’ என்ற பெயரில் பஸ்சைவிட பெரிய சொகுசு காரை இத்தாலியை சேர்ந்த பெண் 
விஞ்ஞானி வடிவமைத்துள்ளார். 23 சீட்கள் கொண்ட இந்த கார் விலை ரூ.55 கோடி.
‘சூப்பர்
 பஸ்’ என்ற பெயரில் பஸ்சைவிட பெரிய சொகுசு காரை இத்தாலியை சேர்ந்த பெண் 
விஞ்ஞானி வடிவமைத்துள்ளார். 23 சீட்கள் கொண்ட இந்த கார் விலை ரூ.55 கோடி.
இத்தாலியை சேர்ந்த விமானவியல் விஞ்ஞானி அன்டோனியா டெர்சி (40). ஹாலந்தின் 
டெல்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு நிறுவனங்களில் விமான 
வடிவமைப்பு துறை ஆராய்ச்சியாளராக பணியாற்றி உள்ளார். ரேஸ் கார்கள் 
வடிவமைப்பதிலும் கில்லாடி.
பிரமாண்ட சொகுசு கார் உருவாக்குவது தொடர்பான ஆராய்ச்சி இவரது தலைமையில் 
டெல்ட் பல்கலைக்கழகத்தில் நடந்தது. ஹாலந்து அரசு உதவியுடன் அமெரிக்காவை 
சேர்ந்த ‘டாவ்’ ரசாயன நிறுவனம் மற்றும் ஆட்டோமொபைல் துறை 
ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் ஒத்துழைப்புடன் இந்த ஆய்வு நடந்தது. 
சூப்பர் வாகனத்துக்கான தொழில்நுட்பம் இறுதி செய்யப்பட்ட பிறகு, வாகன 
வடிவமைப்பு தொடங்கப்பட்டது. தற்போது ‘சூப்பர் பஸ்’ என்ற பெயரில் பிரமாண்ட 
சொகுசு கார் தயாரிக்கப்பட்டுள்ளது. 49 அடி நீளம், 8 அடி அகலம், 5 அடி உயரம்
 என நீ...ளமான கார் போல இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 23 பேர் உட்காரலாம். 
இந்த பக்கம் 8, அந்த பக்கம் 8 என மொத்தம் 16 கதவுகள். சூப்பர் பஸ்சின் 
முன், பின் பக்கங்கள் உலகப்புகழ் பெற்ற லம்போர்கினி கார் போல 
வடிவமைக்கப்பட்டுள்ளது. பயணம் மிக மிக சொகுசாக இருப்பதற்கேற்ப அதிநவீன 
ஹைட்ராலிக் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அலுமினியம், கார்பன் பைபர், பைபர் கிளாஸ், பாலிகார்பனேட் ஆகியவை 
பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட கார் என்பதால் எடை குறைவு. அதிகபட்சம் 250 
கி.மீ. வேகத்தில் போக முடியும். சூப்பர் பஸ் விலை ரூ.55 கோடி. சூரிய 
ஒளியில் பேட்டரியில் சார்ஜ் ஏற்றப்பட்டு இந்த கார் இயங்குகிறது. இதனால், 
சுற்றுச்சூழல் மாசுபடுவதும் தவிர்க்கப்படுகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்சை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் சூப்பர் பஸ்சை 
முதன்முதலில் வாங்கியிருக்கிறார். ஹாலந்தில் இருந்து ஜம்போ ஜெட் வாகனத்தில்
 வைத்து அபுதாபிக்கு கொண்டு செல்லப்பட்ட சூப்பர் பஸ், அங்கு வெள்ளோட்டம் 
விடப்பட்டது. காரை டிசைன் செய்த பெண் விஞ்ஞானி அன்டோனியா டெர்சி ஓட்டிக் 
காட்டினார்.
 
 
No comments:
Post a Comment