
புதுடில்லி
: தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பது தொடர்பான தனது ஆய்வறிக்கையை, நீதிபதி
ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான கமிஷன், நேற்று உள்துறை அமைச்சரிடம் தாக்கல்
செய்தது. "இதுகுறித்து ஆந்திர அரசியல் கட்சிகளுடன் ஆலோசித்த பின், வரும்
6ம் தேதி அறிக்கையின் விவரங்கள் வெளியிடப்படும்' என, மத்திய உள்துறை
அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்."ஆந்திராவை இரண்டாக பிரித்து, தெலுங்கானா
தனி மாநிலம் அமைக்க வேண்டும்' என, தெலுங்கானா பகுதியை சேர்ந்த மக்கள் பல
ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்நிலையில், நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா
தலைமையிலான கமிட்டி, தனது ஆய்வறிக்கையை, உள்துறை அமைச்சர் சிதம்பரத்திடம்
நேற்று அளித்தது.
ஆந்திராவில் தொடர்ந்து பதட்டம்: இதற்கிடையே,
ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கை தாக்கல் செய்ததன் காரணமாக, ஆந்திரா முழுவதும்
தொடர்ந்து பதட்டம் காணப்படுகிறது. பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட
இடங்களில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மத்திய
படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆந்திர டி.ஜி.பி., அரவிந்தா
ராவ் கூறுகையில், "எந்த வகையான சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில்,
போலீசார் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்' என்றார்.
No comments:
Post a Comment