Digital Time and Date

Welcome Note

Monday, April 2, 2012

கேன்சர் நோய்க்கு பாப்கார்ன் சாப்பிடுங்க




சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் பாப்கார்ன், உடல் ஆரோக்கியத்தை காக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
சோள வகை உணவான பாப்கார்னில் உள்ள சத்துக்களும் பயன்களும் குறித்து அமெரிக்காவில் சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.

... பென்சில்வேனியாவில் உள்ள ஸ்க்ரான்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், பாப்கார்ன் உடல் ஆரோக்கியத்தை அதிகரிப்பது தெரிய வந்துள்ளது. பெரும்பாலும் தியேட்டர்களில் பாப்கார்ன் வாங்கி சாப்பிடுபவர்கள்தான் அதிகம். விரும்பி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை மிக குறைவு என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆய்வில் தெரிவித்துள்ள தகவல் வருமாறு -

ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஊட்டச் சத்துள்ள உணவை அன்றாடம் எடுத்துக் கொண்டால் நோயின்றி வாழ முடியும். அந்த வரிசையில் பாப்கார்ன் மிகச் சிறந்தது. இதில் கொழுப்பு சத்து மிகவும் குறைவு. நார்ச்சத்து அதிகம்.

காய்கறிகள், பழங்களில் உள்ளதை காட்டிலும் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் ஊட்டச் சத்துகள் மற்றும் அமினோ அமிலங்கள் இதில் ஏராளமாக உள்ளன. அமினோ அமிலங்கள் புற்றுநோயில் இருந்து பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

மறதி நோய்க்கு மருந்தாகவும், இதயத்துக்கு இதமளித்து மாரடைப்பு உள்ளிட்ட இதய சம்பந்தமான நோய்களில் இருந்தும் காக்கிறது. உடலுக்கு தீமை பயக்கும் மூலக்கூறுகளை அழித்து ஆரோக்கியமான செல் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ள பாலிபினால் என்ற அமினோ அமிலம் பாப்கார்னில் அதிகம்.

இவை ரத்த நாளங்களை வலுவாக்கி சீரான ரத்த ஓட்டத்துக்கு வகை செய்கிறது. பாப்கார்னை அன்றாடம் எடுத்து கொள்ளலாம். இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

No comments:

Post a Comment