Digital Time and Date

Welcome Note

Wednesday, April 4, 2012

திருமணத்தைப்பற்றிய ஆய்வு ஒன்றில் சுவாரஸ்யமான தகவல்களும், எதிர்பாராத உண்மைகளும்

உலகில் எல்லாமே மாறிக் கொண்டிருப்பதை போல திருமணங்களும், திருமண வாழ்க்கை முறைகளும் மாறிக் கொடிருக்கின்றன. அத னால் இன்றைய திருமணங்கள் எப்படி இரு க்கின்றன என்பது பற்றி ஜெர்மனியி ல் ஒரு விரிவான ஆராய்ச்சியே நடந் திருக்கிறது. 1980-ம் ஆண்டு முதல் 2000 ஆண்டு வரை நடத்தபட்ட அந்த நீண்ட கால ஆய்வு பல சுவாரசியமா ன, எதிர்பாராத உண்மைகளை வெளிபடுத்தி யிருக்கிறது.
அவற்றில் சில…
திருமணம் ஒரு `கால் கட்டு’ அல்லது `கை விலங்கு’ என்று வேடிக்கையாகவோ, சீரியசாகவோ கூறினாலும், மற்ற வர்களை விட திருமணமானவர்கள் அதிக மகிழ் ச்சியாக இருக்கிறார்களாம்.
மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு அடிப் படையாக `கொடுத்தல்’ என்பதுதான் உள்ளது என்கிறது அந்த ஆய்வு. `சட்டதிட்டமான’ திருமண வாழ்வு (`சனிக் கிழமையன்று குழந்தைகளை, கணவர் கவனித்துக் கொண்டால், ஞாயிற்றுக்கிழமை காலை அவர் நண்பர்களோ டு வெளியே செல்ல லாம்’ என மனைவி அனுமதி வழங்குவது போன்றவை) சலிப்பை ஏற்படுத்துவதாகவு ம், அதிக திருப்தி தராததாக வும் உள்ளதாக ஆய்வு கூறுகி றது. அதற்கு மாறாக தம்பதி ஒருவருக்கொருவர் ஆர்வத் தோடு வேலையை பங்கிட் டுக் கொள்வது திருப்தியை யும், சந்தோஷத்தையும் தரு கிறது என்கிறார்கள்.
வீட்டு வேலையை பகிர்ந்து கொள்ளும் கணவரை மனைவிக்கு பிடி க்கிறது என்று இதுநாள் வரை கூறிவந்தார்கள். ஆனால் அதனால் மட்டும் கணவன் மீது மனைவிக்கு அன்பு பொங்கி விடுவதில்லை, அவள் மனநிறைவு பெற்று விடுவதும் இல்லை என்கிறது புதுஆய்வு.
க‌ணவனும் மனைவியும் சம்பா திக்கும் குடும்பம் பற்றிய ஆய் வில் தெரிய வந்திருக்கும் விஷ யங்கள் என்ன தெரியுமா?
மொத்த வருமானத்தில் முன்றி ல் இரண்டு பங்கு வருவாயை க ணவர் ஈட்டும் குடும்பத்தில் மனைவி மகிழ்ச்சியாக இருக்கி றாராம். அதற்கு பல காரணங் களை அடுக்குகிறார்கள். கணவரை விட மனைவி குறைவாக வரு மானம் ஈட்டும்போது அவரால் நிதி பொறுப்புகளிலிருந்து விலகியி ருக்க முடிகிறது, குடும்பத்தைக் கவனித்துக் கொள்ளவும் முடிகிறது என்கிறார்கள். அதிகமாகச் சம்பளம் பெறும் மனைவிகள் அலுவ லகத்தில் கடுமையாக உழைக்க வேண்டியிரு க்கிறது. அதேநேரம் கசப்போடு வீட்டிலும் நிறைய வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. மனைவிக்குச் சம்பளம் கு றைவாக இருக்கும் நிலையில் தம்பதிக ளின் பொறுப்புகள் தெளிவாக வரையறு க்கபட்டிருக்கின்றன. பள்ளிக்கு குழந்தை யை யார் அழைத்துச் செல்லும் முறை அல்லது `ஷாப்பிங்’குக்கு யார் செல்வது என்பது போன்ற அன்றாட வேலை அழுத் தங்கள் குறைகின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
திருமண உறவில் எப்போதும் மகிழ்ச்சி நிலவ வேண்டும் என்பது அவசியமில் லை என்பது பொதுவான கருத்து. இது தொடர்பாக `மகிழ்ச்சி: புதிய அறிவியல் பாடங்கள்’ என்ற நுலில் விவரித்துள்ள பொருளாதார நிபுணர் ரிச்ச ர்ட் லேயார்டு, `திருமண வாழ்க்கைத் துணையின் மீது அதிக அக்க றை கொண்டவர்களை விட, தமது சொந்த விஷயத்திலேயே அதிக கவனம் செலுத்துபவர்கள் அதிக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்’ என்கிறார்.
இன்றைய திருமண வாழ்க்கையில் குழந்தைகளின் நிலையும் அலச பட்டிருக்கிறது. சமுகமானது நீதி, நெறி, கலாச்சார மாற்றத்துக்குஉட்பட்டு வருகிறது. குழந்தை பருவம் முதலே பெண் குழந் தைகளும், ஆண் குழந்தைக ளும் முற்றிலும் வேறுபட்ட சூழலில் வளர்க் கபடுகிறார்க ள். கணவன்- மனைவி- குழந் தைகள் மட்டும் உள்ள குடும் பங்களும், கணவன்- மனை வி இருவருமே பணிபுரிவதும் அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில், குழந்தைகள் உணர்வு ரீதியான பாதுகாப்புக் குடையி ன்றியே வளர்கிறார்கள் என்கின்றனர் நிபுணர்கள். அவர்கள் தங்க ளைத் தாங்களே உணர்ந்துதான் வாழ்க் கையை கற்றுக்கொள்ள வே ண்டியிருக்கிறது.
பெரியவர்கள் பல்லாண்டுகளாக உருவாக்கிய நியதி மற்றும் கலாச் சார கட்டமைப்பை குழந்தைகள் ஒரே நாளில் உடைக்க விரும்புகி றார்கள். இளந்தம்பதிகளை பொறுத்தவரையில், அவர்களுக்காக நேரம் ஒதுக்கவே அவர்களுக்கு நேரமில்லை. தனக்குத் தலைவலித் தால் டீ போட்டுக் கொடுத்து கணவன் ஆறுதலாக இரண்டு வார்த்தை கள் பேச வேண்டும் என்று மனைவி எதிர்பார்க்கிறாள். ஆனால் கண வனோ வீட்டிலும் அலுவலக வேலையில் முழ்க வேண்டிய வனாக இருக்கிறான்.
கணவன், மனைவிக்கிடையி லான உறவும் ஆரோக்கியமா க வளர்வதற்கு கால அவகா சம் தேவைபடுகிறது, ஒருவரு டன் இன்னொருவர் நிஜமாக வே அதிக நேரத்தைக் கழிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் இன்றைய தம்பதிகள் தமது தனிபட்ட விருப்பங்கள், ஆசைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கபட வேண்டும், சுதந்திரம் வேண்டும் என்று நினைக்கிறார்கள். கணவன் அல்லது மனைவியாகவே இருந்தாலும் ஓரளவுக்கு மேல் தலையிடுவதை விரும்புவதில்லை என்கி றார்கள் வல்லுநர்கள்.
டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞரான பார்கவா, `இந்தியாவில் குடு ம்ப அமைப்பு உடைந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் உள்ளமனைவிகளின் முயற்சி யால்தான் அது இன்னும் கொஞ்சம் இருந்து கொ ண்டிருக்கிறது. ஆனால் இப்போது அவளும் சுதந் திரத்தை விரும்பினால், நம்மால் நமது சமுக விதிகள், நம்முடைய கு டும்ப அமைப்பு போன்ற வற்றை அதிக காலத்துக்குக் கட்டிக்காக்க முடியாது’ என்று குண் டைத் தூக்கி போடுகிறார்.
இந்திய குடும்ப அமைப்பின் ஆதாரமாக உள்ள குடும்பத் தலைவிகள் பற்றிய புதிய ஆய்வு, இன்னும் சில வியப்பூட்டும் விஷயங்களைத் தெரிவிக்கிறது.
இந்திய பெண் நீண்ட தூரத்தைக் கட ந்து வந்திருக்கிறாள். `நேற்றைய’ இந்திய பெண்ணுக்கும், `இன்றைய’ இந்திய பெண்ணுக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள். தனது குடு ம்பம், குழந்தைகள், சமுகத்துக்காக இன்றைய இந்திய குடும்ப பெண் தனது அடையாளத் தை இழக்கவோ, அமைதியாகக் கஷ்டத்தைச் சுமக்க வோ தயாராக இல்லை என்கிறார் கள்.
திருமண வாழ்வின் மகிழ்ச்சிக்கான அடிபடையில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இந்திய குடும்பத் தலைவியானவள் தீவிரமாக, எந்தக் குற்ற உணர்ச்சிமின்றி மகிழ்ச்சியைத் தேட ஆரம்பித்திருக்கி றாள். அதற்காகத் தனது திருமண வாழ்க்கையையே கூட விட்டுக் கொடுக்க அதிகம் தயங்குவதில்லை, என்கிறது ஆய்வுத் தகவல்.
பெண்ணானவள், குடும்பத்தில் மிதியடியாய் உழைத்த காலம் போய் விட்டது. சுயஅதிகாரம் பெற்ற இன்றைய மனைவிகள் கணவன்மா ரை கேள்வி கேட்கத் தயங்குவதில்லை.
-”ஏன் நான்தான் சமைக்க வேண்டும் என்கிறீர் கள்? உங்களை போல நானும்தான் களைத்து போகிறேன். நீங்கள் ஏன் பள்ளியில் குழந்தை களை விட்டுவிட்டு, அழைத்து வரக் கூடாது? நானும் அலுவலக பணியில் பிசியாக கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.
-உங்களுக்காக நான் ஏன் எனது உணவு பழக்க த்தை மாற்றிக் கொள் ள வேண்டும்? எனது விருப்பங்களை நீங்கள் ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது”
… இப்படி போகின்றன கேள்விகள்.
இவையெல்லாம் வீட்டுக்குள் முடங்கி போகும் விஷயங்கள் இல் லை. பிரச்சினைகள் தீர்க்கபட வில்லை, சரிபட்டு வரவில்லை என்றால் திருமண பந்தத்திலிரு ந்து விலகி நடக்கவும் பெண்கள் தயாராக இருக்கிறார்கள். அதி லும் பெண்கள் அடிபடையான விஷயங்களில் விட்டுக்கொடுக் க முன் வருவதில்லை.
மும்பையைச் சேர்ந்த மித்தாலிக் கும், இங்கிலாந்துவாழ் இந்திய மருத்துவ மாப்பிள்ளைக்கும் திருமணம் நிச்சயிக்கபட்டது. திருமண த்துக்கு முன்பு மாப்பிள்ளை அடிக்கடி இந்தியா பறந்துவர, நெருக்க மாக பழகினர். பரிசுகளை பரிமாறிக் கொண்டனர். ஆனால் முதலிர விலேயே, கணவனால் தன்னை தாம்பத்ய ரீதியாக திருப்திபடுத்த முடியா து என்பதை புரிந்துகொண்டார் மித்தாலி. நான்காவது நாளே திரு மணத்தை முறித்துக்கொள்ளும் முடிவுக்கு அவர் வந்து விட்டார்.
“மற்றபடி அவர் நல்ல கணவர்தான். ஆனால் இந்தத் திருமணத்தில் எதிர்காலமில்லை. ஏன் நான் சமரசம் செய்துகொண்டு போக வேண் டும்? நான் அடுத்து நகர விரும்புகிறேன்” என்கிறார் மித்தாலி.
நவீன இந்திய பெண்ணின் முகம்தான் இந்த மித்தாலி. இப்படி நிறை ய மித்தாலிகள் உருவாகிக் கொடிருக்கிறார்கள். `திருமண வாழ்க் கை என்பது வாழத்தான்’ என்பது இவர்கள் வாதம்!