கருக்கலைப்பு பற்றிய தகவல்கள் !!!!
இந்தியாவில் கருக்கலைப்பு செய்வதால் ஆண்டுதோறும் 80 ஆயிரம் பெண்கள் உயிரிழப்பதாகவும், இவர்களில் பெரும்பாலானோர் தவறான சிகிச்சையால் மரணம் அடைவதாகவும் இந்திய மகப்பேறு மருத்துவர் சங்க தலைவர் டாக்டர் ஹேமா திவாகர் தெரிவித்துள்ளார்.
தேவையற்ற கரு உருவாவதைத் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் கருவுறும் பெண்களில் 78 சதவீதம் பேர் திட்டமிடுவதில்லை என்றும், அதிலும் 25 சதவீதம் பேர் குழந்தை பெறுவதை விரும்புவதில்லை என்றும் இதனால் ஆண்டுதோறும் 1 கோடியே 10 லட்சம் பெண்கள் கருக்கலைப்பு செய்து கொள்வதாகவும் ஹேமா கூறினார்.
போதிய அனுபவம் இல்லாதவர்கள் டாக்டர்கள் அளிக்கும் கருக்கலைப்பு சிகிச்சையால் ஆண்டுக்கு 80 ஆயிரம் பெண்கள் உயிரிழப்பதாக தெரிய வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
தற்போது வெளிவந்துள்ள அவசரகால கருத்தடை மாத்திரைகள் குறித்து ஒரு சதவீதம் பெண்களே தெரிந்து வைத்திருப்பதாக கூறிய அவர், அவசரகால கருத்தடை மாத்திரையை 72 மணி நேரத்திற்குள் சாப்பிட்டால், தேவையற்ற கருவைத் தவிர்க்க முடியும் என்றார்.
இத்தகைய மாத்திரைகளை எப்போதாவது ஒரு முறையோ அல்லது இரு முறையோ மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதையே தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment