அண்டை வீட்டாரை அன்புடன் உபசரிப்பது ஒரு முஸ்லிமின் கடமை!
அல்லாஹ் கூறுகிறான்: -
மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. (அல்-குர்ஆன் 4:36)
அண்டை வீட்டார் பசியோடிருக்க நாம் வயிறார உண்ணலாகாது: -
“அண்டை வீட்டான் பசித்திருக்கும் போது வயிறார உண்பவன் முஃமின் அல்லன்” (ஆதாரம் : ஹாகிம், பைஹகி)
முஸ்லிம்கள் அண்டை வீட்டாருடன் உணவுப் பொருட்களை பரிமாறிக்கொள்ள வேண்டியதன் அவசியம்: -
முஸ்லிம் பெண்களே ஓர் அண்டை வீட்டுக்காரி, மற்றோர் அண்டை வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் குளம்பை (அன்பளிப்பாகக்) கொடுத்தாலும் அதை(க் கொடுப்பதையும் பெறுவதையும் அவர்கள்) இழிவாகக் கருத வேண்டாம். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம் : புகாரி)
“முஸ்லிம் பெண்களே! அண்டை வீட்டாருக்கு கொடுக்கும் பொருள் அற்பமாக இருப்பதாக நினைத்துக் கொடுக்காமல் இருக்க வேண்டாம். சிறதளவு இறைச்சி ஒட்டிக்கொண்டிருக்கும் எலும்புத்துண்டாயினும் சரியே!” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)
அபூதரே! நீ குழம்பு சமைத்தால் அதில் தண்ணீரை அதிகப்படுத்தி உண் அண்டை வீட்டாரையும் கவணித்துக் கொள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (ஆதாரம் :முஸ்லிம்)
அண்டை வீட்ாருக்குத் தொல்லை தருபவன் ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டவனாக மாட்டான்!
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’: அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டிருப்பவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம். என அபூஹுரைரா(ரலி) அறிவித்தார். (ஆதாரம் : புகாரி)
அபூ ஷுரைஹ் (ரலி) அறிவித்தார் : ‘அல்லாஹ்வீன் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீதாணையாக அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்’ என்று (மூன்று முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘அவன் யார்? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘எவனுடைய நாசவேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன்தான்’ என்று பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் இன்னும் பல அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. (ஆதாரம் : புகாரி)
அண்டை வீட்டாரை கண்ணியப்படுத்துவதன் முக்கியத்துவம்: -
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அண்டை வீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் அறிவுறுத்திக்கொண்டேயிருந்த
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (ஆதாரம் : புகாரி)
எந்த அண்டை வீட்டாருக்கு அன்பளிப்பு அளிப்பது?
ஆயிஷா(ரலி) அறிவித்தார் : நான், ‘இறைத்தூதர் அவர்களே! எனக்கு இரண்டு அண்டை வீட்டார் உள்ளனர். அவர்களில் யாருக்கு நான் அன்பளிப்புச் செய்வது?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இருவரில் யாருடைய வீட்டு வாசல் உனக்கு நெருக்கமாக இருக்கிறதோ அவருக்கு’ என்று பதிலளித்தார்கள் (ஆதாரம் : புகாரி)
பாவங்களிலே மிக் கொடியது அண்டை வீட்டுப் பெண்களிடம் தகாத முறையில் நடந்துக் கொள்வது: -
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார் : இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நான், ‘அல்லாஹ்விடம் மிகப்பெரிய பாவம் எது?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, நீ அவனுக்கு இணைவைப்பதாகும்’ என்று பதிலளித்தார்கள். நான், ‘நிச்சயமாக அது பெரும்பாவம்தான்’ என்று சொல்லிவிட்டுப் ‘பின்னர் எது?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘உன் குழந்தை உன்னுடன் உணவு உண்ணும் என்றஞ்சி அதை நீ கொன்றுவிடுவதாகும்’ என்றார்கள். நான், ‘பிறகு எது?’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘பிறகு உன் அண்டை வீட்டாரின் மனைவியுடன் நீ விபசாரம் புரிவதாகும்’ என்று பதிலளித்தார்கள். (ஆதாரம் : புகாரி)
அண்டை வீட்டாருக்குத் தொல்லை தருபவன் சுவனம் செல்ல முடியாது!
எவருடைய அண்டை வீட்டான் அவருடைய தீங்கை விட்டும் அமைதி பெறவில்லையோ அவர் சுவனம் செல்லமாட்டார் (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)
தன் வீட்டுச் சுவரில் அண்டை வீட்டாருக்கு உள்ள உரிமை!
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘ஒருவர், தன் (வீட்டுச்) சுவரில், தன் அண்டை வீட்டுக்காரர் மரக்கட்டை (அல்லது உத்திரம், கர்டர், பரண் போன்ற எதையும்) பதிப்பதைத் தடுக்க வேண்டாம்” என்று கூறினார்கள்
சொத்துக்களை விற்கும் போது கூட அண்டை வீட்டாரை கலந்தாலோசிக்க வேண்டும்: -
ஒருவரின் தோட்டத்திற்கு பங்கு தாரரோ அல்லது அண்டை வீட்டாரோ இருந்ததால் அவரிடம் தெரிவிக்காமல் அவர் அதை விற்க வேண்டாம். (ஹாகிம்)
No comments:
Post a Comment