Digital Time and Date

Welcome Note

Tuesday, April 3, 2012

இத.. இத...இதத்தானே எதிர்பாத்தீங்க ???????????????

நல்ல‌ நோட்டு குறிப்புகள்
கள்ள ரூபாய் நோட்டுக்களை இனங்கண்டு கொள்ள இந்திய ரிசர்வ் வங்கி சில முக்கிய‌க்குறிப்புகளை பொது மக்கள் நலங்கருதி வெளியிட்டுள்ளது. அவற்றை இங்கே பகிர்ந்திருக்கிறேன். முக்கியமாய் 1000, 500 ஆகிய ரூபாய் நோட்டுக்களிலேயே கள்ளப்பணப்புழக்கம் அதிகமிருக்கும் என்பதால் அவற்றை வாங்கும் போது கூடுதல் கவனத்துடன் இக்குறிப்புகளைப் பின்பற்றுவது நல்லது.
இது தவிர எளிய முறையில் பல பயனுள்ள தகவல்களை இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த வலைப்பக்கம் வழங்குகிறது: http://www.rbi.org.in/commonman/Tamil/scripts/home.aspx
"மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக ஆன்லைனில் புகார் அளிக்கலாம் வாங்க "
நம்மை சுற்றிலும் தினம் தினம் ஆயிரம் பிரச்சனைகள் உள்ளன.குடிநீர்,சாலை வசதி,மின்சாரம் இன்னும் ஏராளமாக சொல்லி கொண்டே போகலாம்.நம் ஊரில் உள்ள கவுன்சிலர் மற்றும் அதிகரிகளிடம் சொல்லி சொல்லி அலுத்து போய் இருக்கும்.செல்வாக்கு உள்ளவர்கள் பிரச்சனைகளை உயர் அதிகரிகளிடம் பணம் கொடுத்து வேலையை சுலபமாக முடித்து கொள்வார்கள்.ஆனால் அனைவராலும் இதை செய்ய முடியாது.ஒவ்வொரு மாவட்டத்திற்க்கும் கலெக்டர் தான்.ஆனால் நாம் அவரை நேரடியாக சந்தித்து புகார் அளிக்க வேண்டுமானால் படாத பாடு பட வேண்டும்.இதனால் பெரும்பாலானவர்கள் பிரச்சனைகளை கண்டுகொள்வதில்லை.

ஆனால் நம் தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டதிலும் உள்ள கலெக்டரிடம் நேரடியாக ஆன்லைன் மூலம் புகார் அளிக்கும் வசதியை உருவாக்கி வைத்துள்ளது.ஆனால் இந்த வசதி இருப்பதை பல பேர் இன்னும் அறியாமல் உள்ளனர்.அவர்களுக்காக.ஆன்லைனில் புகார் அளிக்கும் முறை:
இதற்க்கு முதலில்http://www.tn.gov.in/services/GDP/index.asp என்ற தளத்திற்கு செல்லுங்கள்.ஒருவிண்டோ வரும்.அதில் வலது பக்க சைடு பாரில் Select என்ற சிறிய கட்டம் இருக்கும்.அதில் கிளிக் செய்து உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.அந்த லிஸ்டில் உள்ள மாவட்டங்களுக்கு மட்டுமே இந்த வசதி தற்பொழுது உருவாக்கபட்டுள்ளது.மற்ற மாவட்டங்கள் விரைவில் எதிர்பார்க்கலாம்.
உங்கள் மாவட்டதிற்கு தேர்வு செய்தவுடன் உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும்.அந்த விண்டோவில் குறிப்பிட்டிருக்கும் இடத்தில் உங்கள் மாவட்ட ஆட்சியாரை தொடர்பு கொள்ள இமெயில் முகவரி கொடுக்கப்பட்டிருக்கும்.அதை குறித்துக் கொண்டும் இமெயில் அனுப்பலாம்.அல்லது அதில் உள்ள கோரிக்கை பதிவு என்ற லிங்கை கிளிக் செய்து வரும் விண்டோவில் உங்கள் கோரிக்கையை அனுப்பலாம்.
இதில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்து அனுப்பினால் உங்கள் கோரிக்கைக்கான ஒரு எண் கொடுப்பார்கள்.அதை குறித்துக் கொண்டு கோரிக்கை நிலவரம் என்ற பகுதியில் இந்த எண்ணை கொடுத்து சோதிப்பதன் மூலம் உங்களின் கோரிக்கை எந்த நிலையில் உங்களின் அறியலாம்.
கோரிக்கையின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கபடாவிட்டால்,அந்த கோரிக்கை எண் வைத்து நீதி மன்றங்களில் மேல் முறையீடும் செய்யலாம்.
என்னங்க புகார் கொடுக்க தயாரா இருக்கீங்களா?
ரேஷன் கார்டை ஆன்-லைனில் புதுப்பிக்க
ரேஷன் கார்டை புதுப்பிக்க மேலும் ஒருமாத காலம் அவகாசம் அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.ரேஷன் கடைக்கு வர இயலாதவர்கள் வீடுகளில் இருந்தபடியே ஆன்-லைனில் புதுப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மேலும் ஒருமாதம் கால அவகாசம்
ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலத்தை இந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதியில் இருந்து வரும் டிசம்பர் 31-ந் தேதி வரை ஓராண்டிற்கு நீட்டிக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.மேற்படி உத்தரவின்படி புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளில் வருடம் குறிப்பிடாமல் உள்ள கூடுதல் தாளின் மேற்பகுதியில் 2012 என்று முத்திரையிட்டு செல்லத்தக்கதாக அறிவிக்கப்பட்டது.
புதுப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்று வரை அளிக்கப்பட்டது. மொத்தம் உள்ள ஒரு கோடியே 97 லட்சத்து 70 ஆயிரத்து 682 ரேஷன் கார்டுகளில் இதுவரை ஒரு கோடியே 86 லட்சத்து 58 ஆயிரத்து 768 ரேஷன் கார்டுகள் புதுப்பிக்கப்பட்டு உள்ளன. ரேஷன் கார்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இதனை கனிவுடன் பரிசீலித்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ரேஷன் கார்டை புதுப்பிக்க மேலும் ஒரு மாத காலத்திற்கு அதாவது மார்ச் 31-ந் தேதி வரை அவகாசம் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
ஆன்-லைனில் புதுப்பிக்கலாம்
இதன்படி இருப்பிட ஆதாரமாக வழங்கப்பட்டுள்ள வெள்ளை மற்றும் மஞ்சள் நிற தட்கல் ரேஷன் கார்டு வைத்திருப்போர் மற்றும் அரிசி,சர்க்கரை விருப்ப ரேஷன் கார்டுகள் வைத்துள்ள உடல்நல குறைவு காரணமாக நடக்க இயலாதோர், வயது முதிர்வு காரணமாக ரேஷன் கடைக்கு வர இயலாத குடும்ப அட்டைதாரர்கள்,புனிதப்பயணம் மற்றும் மதம் சார்ந்த உள்ளிருப்பு விரதம் மேற்கொண்டுள்ளோர் மற்றும் புதுப்பித்தல் நடைபெற்ற காலத்தில் தற்காலிகமாக வெளிïர் சென்றவர்கள் ஆகியோர் பயனடையும் வகையில் அவர்களது ரேஷன் கார்டுகளை ஆன்-லைன் முறையில் புதுப்பித்துக் கொள்ள இணையதள வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.
இணையதள முகவரி
அதன்படி http://210.212.62.90:8080/newfcp/cardvalidity.do என்ற இணையதள முகவரிக்கு சென்று புதுப்பித்து கொள்ளலாம்.இதில் ரேஷன் பொருள் வேண்டுவோர் 2012-ம் ஆண்டிற்கான கால நீட்டிப்பு தாளின் இரண்டு நகல்களை எடுத்துக்கொண்டு ஒரு நகலை குடும்ப அட்டையில் ஒட்டிக் கொண்டும்,மற்றொரு நகலை உரிய கடைக்காரரிடம் அளித்து ரேஷன் பொருட்களை தொடர்ந்து பெற்றுக் கொள்ளலாம்.
ரேஷன் பொருள் வேண்டாதவர்கள் மற்றும் இருப்பிட சான்றாக மட்டுமே வைத்துக் கொண்டுள்ளவர்கள் இணையதளத்தில் உள்ள 2012-ம் ஆண்டுக்கான கால நீட்டிப்பு தாளின் ஒரு நகலை அவர்களுடைய குடும்ப அட்டையில் ஒட்டிக் கொண்டால் மட்டும் போதுமானது.
இந்த வசதி 31-ந் தேதி வரை மட்டுமே இந்த இணையதள வசதி நாளை (மார்ச் 1) முதல் 31-ந் தேதி வரையில் நடைமுறையில் இருக்கும்.மேற்படி இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment