தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகன விபரங்களை எஸ்எம்எஸ் மூலம்
தெரிந்துகொள்ளும் வசதியை மத்திய அரசு கட்டுப்பாடுகளுடன் மீண்டும் அறிமுகம்
செய்துள்ளது.
திருட்டு மற்றும் விபத்துக்களில் சிக்கும் வாகனங்கள் குறித்து தகவல்களை
எளிதாக தெரிந்துகொள்ளும் வகையில், புதிய எஸ்எம்எஸ் சேவையை மத்திய அரசு
சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.
9212357123 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி தகவல்களை பெறும் வகையில் இந்த
சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சேவைக்கு பல்வேறு தரப்பிலிருந்தும்
வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், இந்த சேவையின் மூலம் வாகனத்தின் மீதான
கடன் உள்ளிட்ட விபரங்களையும் பெறும் வகையில் இருந்தது.
இது வாகன உரிமையாள் மத்தியில் எதிர்ப்பை கிளப்பியது. மேலும், இந்த
எஸ்எம்எஸ் சேவையை தவறாக பயன்படுத்துவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, இந்த
எஸ்எம்எஸ் சேவையை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தியது.
ஆனால், நாடு முழுவதும் உள்ள ஆர்டிஓ அலுவலகங்கள் மற்றும் போக்குவரத்து
துறையினர் இந்த எஸ்எம்எஸ் மூலம் வாகன விபரங்களை தெரிந்துகொள்ளும் வசதி
ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.இந்த நிலையில், எஸ்எம்எஸ் சேவையை மீண்டும்
கொண்டு வர கோரிக்கைகள் எழுந்தன.
எனவே, புதிய கட்டுப்பாடுகளுடன் எஸ்எம்எஸ் சேவையை மீண்டும்
அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. தற்போது வாகன உரிமையாளரின் பெயர் உள்ளிட்ட
தனிப்பட்ட விபரங்கள் இந்த எஸ்எம்எஸ் மூலம் கிடைக்காது. வாகனத்தின் சாலைவரி
காலாவாதியாகும் விபரம் மட்டும் தற்போது கிடைக்கிறது.இந்த எஸ்எம்எஸ் சேவையை
மத்திய போக்குவரத்து அமைச்சகத்துக்காக தேசிய தகவல் மையம்(என்ஐசி)
வடிவமைத்து கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment