இராமேஸ்வரத்திற்கும் இலங்கைக்கும்
இடைப்பட்ட கடல் பகுதியில் வண்டல் மண்ணுடன் கூடிய மணல் திட்டுக்கள் சில
இடங்களில் உள்ளன. இந்த மணல் திட்டை காட்டி சேது சமுத்திரத் திட்டத்தை
முடக்கி, இந்த மணல் திட்டு இராமரால் கட்டப்பட்ட பாலம் எனவும், ஆகவே இந்த
மணல் திட்டை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றும் வரலாற்று
புரட்டில் ஈடுபட்டு வருகின்றன பாஜக மற்றும் சங்பரிவாரங்கள்.
இந்த மணல் திட்டை இராமர் பாலம் எனவும்
இராமரே முன் நின்று இந்த பாலத்தைக் கட்டி யதாகவும், அமெரிக்காவின் விண்வெளி
ஆராய்ச்சி நிலையமான நாசா, இந்த பாலம் இருப்பதை படமெடுத்து ஆதாரப்பூர்வமாக
நிரூ பித்துள்ளதாகவும் கற்பனை நாடகத்தை அரங் கேற்றுகிறது பாஜக.
ஆனால், இராமேஸ்வரத்திற்கும், இலங்கைக்
கும் இடைப்பட்ட கடல் பகுதியில் சில இடங்க ளில் மணல் திட்டுகள் இருப்பதையும்
அதை செயற்கைகோளின் வழியாக படமெடுத்ததையும் வெளியிட்ட அமெரிக்க விண்வெளி
ஆய்வு நிறுவ னமான நாசா, இந்த மணல் திட்டை பாலம் என்று சொல்லவுமில்லை.
இதற்கு இராமர் பாலம் என்ற பெயரை வைக்கவுமில்லை என்று கூறி பாஜகவின் போலி
நாடகத்தை தோலுரித்துக் காட்டியுள்ளது.
இதன் பிறகு மத்திய அரசால் ஒரு குழு
அமைக்கப்பட்டு உண்மை நிலை கண்டெறியப் பட்டது! இந்திய தொல்லியல் துறையைச்
சேர்ந்த நிபுணர்களால் அமைக்கப்பட்ட இக் குழு அந்தப் பகுதியில் பாலமோ
கட்டுமான வேலைகளோ எதுவும் நடைபெறவில்லை. இராமர் பாலம் கட்டி னார் என்பது
ஆதாரமற்ற புராணக் கதையே என் பதை உறுதிப்படுத்தியது.
இதன் பின்பும் விடாத பாஜக இராமர் பால
மென்று இப்பகுதியின் மணல் திட்டு அரசு ஆவ ணங்களில்
அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என்று ஒரு பச்சைப் பொய்யை கூற முயற்சித்தது.
உண்மை நிலை என்னவென்றால் இந்த மணல் திட்டுக்கள் "ஆதம் பாலம் என்கிற சேது
பாலம்' என்றுதான் அரசு ஆவணங்களில் குறிப்பிட்டுள் ளது என்றஉண்மையை உலகுக்கு
வெளிச்சம் போட்டுக் காட்டினர் சமூக ஆர்வலர்கள்.
இந்நிலையில் சேது சமுத்திர திட்டத்தை
செயல்படுத்தக் கூடாது என்று பாராளுமன்றத்தி லும் அமளியில் ஈடுபட்டு
சன்னியாசிகளையும், சாமியார்களையும் வைத்து இந்தப் பிரச்சி னையை மதப்
பிரச்சினையாக மாற்றமுயற்சித்தது பாஜக. ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைந்
தது.
இதன் அடுத்த கட்டமாக பாஜகவின் ஊது குழலாக
செயல்படும் சுப்பிரமணிய சுவாமியைக் கொண்டு சேது சமுத்திர திட்டத்தை
செயல்படுத் தக் கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தது
சங்பரிவாரம். இதைக் காரணம் காட்டி மத்திய அரசு சேது சமுத்திர திட்டத்தை
நடைமுறைப்படுத்தாமல் முடக்கிப் போட்டுள் ளது.
இல்லாத இராமர் பாலத்தை இருப்பதுபோல்
காட்டி, இந்த மணல் திட்டை இராமர் பால மென்று அங்கீகரித்து தேசிய நினைவுச்
சின்ன மாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசிற்கு கடிதம் எழுதி தனது
பாசிச முகத்தை நிரூபித்துள் ளது தமிழக அரசு.
மேலும் சேது சமுத்திர திட்டத்தை நிறுத்தக்
கோரி தனிப்பட்ட முறையில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதை
சுட்டிக்காட்டி, சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று மத்திய
அரசை நிர்ப்பந்தித்து வருகிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
திராவிட கட்சி என்று மூச்சுக்கு முன்னூறு
தடவை சொல்லி கொள்ளும் திமுக தலைவர் கரு ணாநிதியோ இராமர் பாலம் என்பது புராண
கற்பனை கதையே என்பதை அறிந்திருந்தும் இந்த விஷயத்தில் தெளிவான உண்மையைப்
பேசாமல் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற் றுங்கள் என்று பார்மாலிட்டியாக்
சொல்லி வருகி றார்.
கம்யூனிஸ்டுகளோ பட்டும் படாமல், கடலில்
இருப்பது மணல் திட்டே என்று சொல்லாமலும் இது தொடர்பாக
பாராளுமன்றவாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமலும் அதே சமயம் சேது சமுத்திர
திட்டத்தை நிறைவேற்றினால் நல்லது என்றும் இரட்டை வேடம் போட்டு மக்களை
ஏமாற்றுகின்றனர்.
நாட்டை ஆளும் காங்கிரஸ் அரசோ மனித
குலத்திற்கு தீங்கான கூடங்குளம் அணுமின் நிலை யத்தை திறப்பதில் காட்டும்
ஆர்வத்தில் நூறில் ஒரு பங்கைக் கூட சேது சமுத்திரத் திட்டத்தை
நிறைவேற்றுவதில் காட்டவில்லை. மாறாக இந்த மணல் திட்டை தேசிய நினைவுச்
சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று சொல்லப்படும் விஷ யத்தில் தனது கருத்தை
தெளிவாக சொல்லாமல் அரசுக்கு கால நீடிப்பு செய்து தர வேண்டும் என்று மட்டும்
நீதிமன்றத்திடம் கேட்டு இந்திய ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக ஆக்கியுள்ளது.
சேது சமுத்திரத் திட்டம்
நடைமுறைப்படுத்தப் பட்டால் தமிழகத்தில் தொழில் வளம் பெருகும் தமிழகத்திற்கு
நேரடியாகவும், மறைமுகமாகவும் பல வழிகளில் லாபங்கள் பெருகும் அது மட்டு
மல்லாமல் பல்லாயிரம் பேருக்கு தொழில் செய்ய இத்திட்டத்தின் மூலம்
வாய்ப்புகள் கிடைக்கும் தமிழகம் முன்னேறுவதற்கு இந்த திட்டம் ஒரு மைல்
கல்லாக அமையும்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த
திட்டத்தை முடக்க நினைக்கும் பாஜகவின் சதி களை முறியடித்து பயனுள்ள இந்த
திட்டத்தை மத்திய அரசு உடனே நிறைவேற்றவேண்டும் என் பதே மக்களின்
எதிர்பார்ப்பு.
No comments:
Post a Comment