சகோதர !! சகோதிரிகளே..
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு
நபி(ஸல்) வரலாறு வினா விடைகள்.
இறைத்தூதர்களில் இறுதியானவராகவும் இஸ்லாத்தின் வழிகாட்டியாகவும் வந்த
முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை பற்றித் தெரிந்து கொள்வது
முஸ்லிம்களின் மீது முக்கிய கடமையாகும். அவர்களின் வரலாறுகள் தொடர்பாக
ஏராளமான நூல்கள் வந்திருந்தாலும் அவற்றில் பெரும்பாலும் ஆதாரமில்லாத
கற்பனைச் செய்திகளே நிறைந்துள்ளன.
இந்தக் குறையை நிறைவு செய்யும்
வண்ணமும் நமது குழந்தைகளுக்குக் கேள்வி பதில் வடிவத்தில் எளிமையாகக்
கற்றுக் கொடுப்பதற்கும் இந்தத் தொடரை நாம் ஏற்படுத்தியுள்ளோம். இத்தொடரைப்
படிக்கும் சிறுவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் நபி (ஸல்) அவர்களின்
வாழ்க்கையை முழுமையாக அறிந்த திருப்தி ஓரளவு கிடைக்கும் என்று நம்புகிறோம்.
இத் தொடரை உங்கள் குழந்தைகளை படிக்கச் சொல்லுங்கள். அல்லது நீங்கள் படித்து நபிகளாரின் வரலாறை சொல்லிக் கொடுங்கள்.
கேள்வி: கதீஜா (ரலி) அவர்கள் உலகத்தில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்?
பதில்: 65 ஆண்டுகள் (ஆதாரம்: பத்ஹுல் பாரீ)
கேள்வி: நபி (ஸல்) அவர்கள் கதீஜா (ரலி) அவர்களைத் திருமணம் முடித்த போது அவர்கள் கன்னிப் பெண்ணா? விதவையா?
பதில்: இரண்டு திருமணங்கள் முடித்த பின்னர் விதவையாக இருந்தார்கள் (ஆதாரம்: பத்ஹுல் பாரீ)
கேள்வி: கதீஜா (ரலி) அவர்களின் முந்தைய கணவர்களின் பெயர்கள் என்ன?
பதில்: 1. அபூ ஹாலா பின் ஸுராரா, 2. அதீக் பின் ஆயித் (ஆதாரம்: பத்ஹுல் பாரீ)
கேள்வி: கதீஜா (ரலி) அவர்களுக்கு அன்றைய காலத்தில் இருந்த பட்டப் பெயர் என்ன?
பதில்: தாஹிரா – பரிசுத்தமானவள் (ஆதாரம்: தாரிக் திமிக்ஸ், பக்கம் 109)
கேள்வி: நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியர்களில் அதிகம் நேசித்த மனைவி யார்?
பதில்: கதீஜா (ரலி) (ஆதாரம் புகாரீ 3818)
கேள்வி: நபி (ஸல்) அவர்களுக்கு யார், யார் மூலம் குழந்தை பிறந்தது?
பதில்: அன்னை கதீஜா (ரலி), மாரியத்துல் கிப்திய்யா (ரலி) (ஆதாரம்: புகாரீ 3818, 1303, தாரகுத்னீ பாகம்: 4, பக்கம்: 132)
கேள்வி: மாரியத்துல் கிப்திய்யா (ரலி) அவர்கள் மூலம் நபி (ஸல்) அவர்களுக்கு பிறந்த குழந்தையின் பெயர் என்ன?
பதில்: இப்ராஹீம் (ஆதாரம்: புகாரீ 1303)
கேள்வி: நபி (ஸல்) அவர்களது குழந்தை எத்தனை வயதில் இறந்தது?
பதில்: 16 மாதம் (ஆதாரம்: அபூதாவூத் 2772)
கேள்வி: நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் அவர்கள் இறந்த போது நடந்த முக்கிய நிகழ்ச்சி என்ன?
பதில்: சூரிய கிரகணம் ஏற்பட்டது (ஆதாரம்: புகாரீ 1043)
கேள்வி: நபி (ஸல்) அவர்களின் பெண் குழந்தைகள் பெயர்கள் என்ன?
பதில்: ஜைனப் (ரலி), ருகைய்யா (ரலி), உம்மு குல்ஸþம் (ரலி), ஃபாத்திமா (ரலி) (ஆதாரம் புகாரீ 516, 5842, 357 அஹ்மத் 525)
கேள்வி: ஜைனப் (ரலி) அவர்களின் கணவர் பெயர் என்ன?
பதில்: அபுல் ஆஸ் பின் ரபீவு (ஆதாரம்: திர்மிதீ 1062)
கேள்வி: ஃபாத்திமா (ரலி) அவர்களின் கணவர் பெயர் என்ன?
பதில்: அலீ (ரலி) (ஆதாரம்: புகாரீ 441)
கேள்வி: அலீ (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்கு என்ன
உறவு?
பதில்: நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அபூதாலிப் அவர்களின் மகன் அலீ (ரலி) அவர்கள் (ஆதாரம்: புகாரீ 441)
கேள்வி: நபி (ஸல்) அவர்களின் குழந்தைகளில் இறுதியாக இறந்தவர் யார்?
பதில்: பாத்திமா (ரலி), நபி (ஸல்) அவர்கள் இறந்து ஆறு மாதம் கழித்து இறந்தார்கள் (ஆதாரம்: புகாரீ 3093)
jazakallah..Dr. Ahmad Baqavi Ph.D.
வளரும் (இன்ஷா அல்லாஹ்)..See More
No comments:
Post a Comment