தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடித்தாலே உடலை ஸ்லிம்மாக வைத்திருக்கலாம் என்று
ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பயன்கள்
மற்றும் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
அதன் விவரம்: குறைந்த அளவு தண்ணீர் குடிப்பவர்களைவிட, அதிக தண்ணீர்
குடிப்பவர்களின் உடலில் தேவையில்லாத கொழுப்பு சேர்வது குறையும். மாறாக
குறைவாக தண்ணீர் குடித்தால் அதிக கொழுப்பு தேங்கி உடல் எடை அதிகரிக்கும்.
உடலில் போதுமான தண்ணீர் இல்லை என்றால் சிறுநீரகம் (கிட்னி) சீராக
செயல்படாது. சிறுநீரகம் சரியாக செயல்படாத பட்சத்தில் கல்லீரலின்
செயல்பாடும் தடைபடும். நாம் சாப்பிடும் உணவில் இருந்து உடல் இயக்கத்திற்கு
தேவையான புரதத்தை சேமிப்பதே கல்லீரலின் முக்கிய பணி. ஆனால், சிறுநீரக இயக்க
குறைபாடால் கல்லீரலின் செயல்பாடும் பாதித்து தேவையற்ற கொழுப்பு உடலில்
தங்கி உடல் எடை அதிகரிக்கும்.
மேலும், உடலில் உப்பு சேர்வதை குறைக்க, மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்க,அதிக
தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால், உடலுக்கு தேவையான அத்தியாவசிய
புரதத்துடன் தண்ணீர் சேரும்போது அதில் உள்ள கழிவுகள் வெளியேறும்.
இதன் பயனாக தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் ஸ்லிம்மாக இருக்கும்.
எனவே,தினமும் சராசரியாக 8 டம்ளர் தண்ணீர் குடித்தால் போதும். உடலை
ஸ்லிம்மாக வைத்திருக்கலாம். இவ்வாறு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
No comments:
Post a Comment