__________________________
குர் ஆன் கூறும் அறிவியல்....
... வலியை உணர்த்தும் நரம்பு தோலில் தான் முடிகிறது
தோலில் முடியும் வலி உணரும் நரம்பின் முக்கியத்துவம் பற்றி 1400 ஆண்டுகளுக்கு
முன்பே குர் ஆன் கூறுகிறது.
எவரேனும் குற்றம் செய்தால் அவர் தோலை எரிப்பதன் மூலம் தண்டிக்கப்படுகின்றார்: அவர் வேதனையை மீண்டும் உணரும் பொருட்டு அல்லாஹ் அவருக்கு புதிய தோலை உண்டாக்குகின்றான். வலி உணர்ச்சி உள்வாங்கி தோலில்தான் இருக்கின்றது என்பது முன்பேயே தெரிந்திருக்கின்றது. அதனால்தான் புதிய தோல் மாற்றப்படுகின்றது.
காயங்களை உணரும் மையமாக தோல் செயல்படுகின்றது. அதை தான் படங்கள் உணர்த்துகின்றன.
அது முழுமையாக எரிக்கப்பட்டு விட்டால் அந்த உணரும் தன்மையை அது இழந்து விடுகின்றது. இதன் காரணமாகத்தான் அல்லாஹ் தோலை ஒவ்வொரு முறையும் மாற்றி மாற்றி நிராகரிப்பவர்களை தண்டிப்பேன் என கூறுகிறான்.
உயர்ந்தோனும் புகழ்மிக்கோனுமாகிய அல்லாஹ் இதை தன் திருமறையில் பின்வருமாறு கூறுகின்றான்:
யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்; அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.4:56.See More
No comments:
Post a Comment