Digital Time and Date

Welcome Note

Sunday, April 29, 2012

கேள்வி: இசை மற்றும் பாடல்களை கேட்பது, பெண்கள் நடித்துள்ள படங்களைப் பார்ப்பது பற்றி மார்க்கச் சட்டம் என்ன?



... தீர்ப்பு: இசை மற்றும் பாடல்களைக் கேட்பது ஹராமாகும். இது ஹராம் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. நிச்சயமாக பாடல்கள் உள்ளத்தில் நயவஞ்சகத்தை முளைக்கச் செய்கின்றன என்று நபித்தோழர்களும் தாபியீன்களும் கூறியுள்ளனர். நிச்சயமாக பாடல்களைக் கேட்பது வீணான செயலேயாகும்.

மனிதர்களில் சிலர் இருக்கின்றார்கள் – அவர்கள் அறிவில்லாமல் வீணான பேச்சுக்களை விலைக்கு வாங்கி, (அவற்றால் மக்களை) அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுக்கவும், அல்லாஹ்வின் பாதையைப் பரிகாசமாக்கிக் கொள்ளவும் (முயல்கிறார்கள்) இத்தகையோருக்கு இழிவுதரும் வேதனையுண்டு.(அல்குர்ஆன் 31:6)

வணக்கத்திற்குரிய ஏக இறைவனான அல்லாஹ்வின் மீது சத்தியமாக இவ்வசனத்தில் கூறப்பட்டிருப்பது நிச்சயமாக பாடல்கள் பற்றியதுதான் என நபித்தோழர் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களி கூறுகின்றார்கள்.

அல்குர்ஆனுக்கு மூன்று படித்தரங்களில் விரிவுரைகள் உள்ளன. அதில் நபித்தோழர்கலின் விரிவுரை மூன்றாம் இடத்தைப் பெறுகிறது.

¨ ஒரு வசனத்திற்கு மற்றொரு வசனம் விரிவுரையாக அமைவது.

¨ திருமறைக்கு ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ள விரிவுரை.

¨ திருமறைக்கு நபித்தோழர்களால் கூறப்பட்டுள்ள விரவுரை.

எனவே அறிஞர்கள் நபித்தோழர்களின் விரிவுரையை ஹதீஸின் விரிவுரையின் அந்தஸ்திற்கு உயர்த்துகின்றார்கள். அது தவறான கருத்தாகும். எனினும் நபித்தோழர்களின் விரிவுரை உண்மையான கருத்திற்கு மிகவும் நெருக்கமானது என்பதில் சந்தேகமில்லை.

நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:

விபச்சாரம், பட்டு – (ஆண்களுக்கு) – சாரயம், வீண்விளையாட்டுக் கருவி ஆகியவற்றை ஹலாலாக்கும் சில கூட்டத்தினர் என்னுடைய சமுதாயத்தில் தோன்றுவார்கள். (ஆதார நூல்: புகாரீ)

இந்த நபிமொழியின் அடிப்படையில் நாம் இசை மற்றும் பாடல்களைக் கேட்பது நபி (ஸல்) அவர்கள் நம்மை எச்சரித்துத் தடுத்த செயல்களைச் செய்வதாகும்.

எனவே இசை மற்றும் பாடல்களைக் கேட்பதை விட்டும் நான் உங்களை எச்சரிக்கை செய்கின்றேன். இசை மற்றும் பாடல்களைக் கேட்பது தவறில்லை என்ற சிலரின்கூற்று உங்களை ஏமாற்றிவிட வேண்டாம். ஏனெனில் இவைகள் ஹராம் என்பதற்கு – மேற்கண்ட நபிமொழி, நபித்தோழரின் விரிவுரை போன்ற – தெளிவான விளக்கமான ஆதாரங்கள் உள்ளன.

திரைப்படம்: திரைப்படங்களைப் பார்ப்பது ஹராமான செயலாகும். ஏனெனில் அவை சமுதாயச் சீர்கேட்டிற்கும் குழப்பத்திற்கும் காரணமாக இருக்கின்றன. மேலும் பெண்களை தொடர்பு படுத்தியே தயாரிக்கப்படுகின்றன. பெரும்பாலான படங்கள் தீமையையே ஏற்படுத்துகின்றன. அதில் பெண்கள் நடிக்கவில்லை என்றாலும் சரியே! (அல்லது பெண்கள் பார்க்கும் படத்தில் ஆண்கள் நடிக்கவில்லை என்றாலும் சரியே!) ஏனெனில் சமுதாயத்தில் தீமையையும் ஒழுக்கக் கேட்டையும் ஏற்படுத்தும் நோக்கத்தில்தான் பெரும்பாலான திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன.

திரைப்படம் எனும் தீமையிலிருந்து முஸ்லிம்களை பாதுகாக்குமாறும் முஸ்லிம்களை சீர்படுத்தும் விஷயங்களில் முஸிலிம்களின் பொறுப்பாளர்களை சீர்படுத்துமாறும் நான் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றேன்.

No comments:

Post a Comment