வீட்டு விசேஷங்களிலும், சுற்றுலா செல்லும் போதும் நாம் படம் எடுத்து
கொள்வது வாடிக்கையாகி விட்டது. போட்டோக்கள் எடுத்து கொள்வதன் மூலம் நாம்
அந்த பழைய நினைவுகளை மறக்காமல் இருப்பதற்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. நாம்
சிறுவயது போட்டோக்கள் நம் பள்ளிவயது கல்லூரியில் எடுத்தது இப்படி பல
போட்டோக்கள் நம்மிடம் இருக்கும்.
இவை அனைத்தையும் நாம் ஒன்று சேர்த்து DVD ஆல்பமாக தயாரித்தால் பார்ப்பதற்கே அழகாக இருக்குமல்லவா. அதை சுலபமாக செய்யவே நமக்கு ஒரு சூப்பர் மென்பொருள் உள்ளது.
இந்த தளம் சென்றவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். இதில்
நீங்கள் உபயோக நிலையில் உள்ள ஏதேனும் ஈமெயில் ஐடி கொடுத்து அருகில் உள்ள
Download பட்டனை அழுத்தி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
ஏதேனும் அப்டேட் வெர்சன் வந்தால் தெரிவிக்கவே இந்த ஈமெயில் ஐடியை கேட்கின்றனர்.
உங்கள் பைலை டவுன்லோட் செய்தவுடன் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து முடித்ததும் மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
நீங்கள் DVD யாக மாற்ற விரும்பும் போட்டோக்களை ஒன்றாக ஒரு போல்டரில் போட்டு டெஸ்க்டாப்பில் சேமித்து வைத்து கொள்ளுங்கள்.
இதில் மேல் பகுதியில் உங்கள் போட்டோக்கள் உள்ள போல்டரை தேர்வு செய்தவுடன்
கீழே அந்த படங்கள் வரிசையாக வந்து விடும் இதில் ரைட் க்ளிக் செய்து Add all என்ற பட்டனை அழுத்துங்கள்.
உங்கள் போட்டோக்கள் பக்கத்தில் மேலே உள்ள காலி கட்டத்தில் வரிசையாக வந்திருக்கும்.
இதில் ஏதாவது படம் தலைகீழாக இருந்தால் அதை நேராக திருப்பி கொள்ளுங்கள்
அடுத்து நீங்கள் அருகில் உள்ள AUDIOS என்பதை க்ளிக் செய்யவும்.
அடுத்து Audios என்பதை தேர்வு செய்து போட்டோக்களை தேர்வு செய்த முறையில் ஆடியோவையும் தேர்வு செய்து கொள்ளவும்.
அடுத்து உங்கள் விண்டோவில் கீழே பார்க்கவும்.
கீழே உற்று நோக்கினால் உங்கள் போட்டோக்கள் வரும் நேரமும் ஆடியோ பாடும்
நேரமும் தெரியும் இவை இரண்டும் முன்னுக்கு பின் முரணாக இருந்தால் மேலே உள்ள
LOOP என்ற பட்டனை க்ளிக் செய்து கொள்ளவும். இது இரண்டையும் சரி செய்து
கொள்ளும்.
மேலே படத்தில் கூறியுள்ளதை போல வரிசையாக தேர்வு செய்து கொள்ளுங்கள்.
அடுத்து முடிவில் Output என்ற கடைசி படியை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
இதில் உங்கள் DVD ஆல்பம் சேமிக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்து கொண்டு
Output என்ற பட்டனை அழுத்தினால் உங்கள் DVD ஆல்பம் தயாராக ஆரம்பிக்கும்.
பொறுமையாக இருக்கவும் உங்கள் போட்டோக்களின் எண்ணிக்கையை பொறுத்து நேரம் பிடிக்கும்.
முடிவில் உங்களுக்கு Congratulations your DVD Album ready என்ற செய்தி வரும் வரை பொறுமையாக இருக்கவும்.
No comments:
Post a Comment