-------------------------------------------
'இனி உன் பேரு மலர்விழி இல்லே! கூகுள்'
'என் பேரை எதுக்கு மாத்துரீங்க!'
'நான் எங்கே போனாலும் கண்டுபிடிச்சுடுரியே! அதான்.'
------------------------------------------
கணவன்:- என்னடி இது பெட்ஷீட் கனத்துல புடவை எடுத்து இருக்கே
மனைவி:- கட்டிக்க போறது நாந்தானே
கணவன்:- அதை துவைக்கிறது நான்தானே! எனக்குல்லே வலி தெரியும?
------------------------------------------
முதல் இடம் ரஷ்யா:
லெனினும் ஸ்டாலின் தங்களின் கனவு தேசமாக உருவாக்கிய ரஷ்யாதான் இன்று குடும்பங்களில் நடக்கும் விவாகரத்தில் உலகின் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. 5.30 சதவீத மக்கள் ரஷ்யாவில் விவாகரத்துப் பெற்றுக் கொள்கின்றனர். மேற்கத்திய கலாசாரமும் நாத்திகமும் இதற்கான முக்கிய காரணங்களாக விளங்குகின்றன. ஊழலால் விளைந்த பொருளாதார தேக்க நிலையும் மக்களை தனியாக பிரிந்து செல்ல தூண்டுகிறது.
இரண்டாவது இடம் அருபா:
கரிபியன் பகுதியைச் சேர்ந்த அரூபா என்ற இந்த தீவு விவாகரத்தில் உலகின் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. 5.27 சதவீத மக்கள் இங்கு விவாகரத்தைப் பெற்றுக் கொள்கிறார்களாம். வறுமை இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
மூன்றாம் இடம் அமெரிக்கா:
நம்ம பெரியண்ணன் அமெரிக்கா விவாகரத்தில் மூன்றாவது இடத்தில் இருக்காக! :-) அண்ணாச்சி 4.19 சதவீதம் பெற்று சிறந்த இடத்தை பிடித்துள்ளார். இன்னும் சில ஆண்டுகளில் முதல் இடத்தை பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தனது மக்களுக்கு நிம்மதியான வாழ்வை தர லாயக்கற்ற அரசு உலகைக் கட்டுப்படுத்தப் போகிறதாம். மக்களின் மன நிம்மதியின்மையே விவாகரத்துக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
நான்காவது இடம் பனாமாவுக்கு:
நான்காவது இடத்தை பெற்றுள்ள பனாமா பெற்ற புள்ளி விபரம் 3.80. கிட்டத்தட்ட அமெரிக்காவை நெருங்கி வருகிறது. முன்பெல்லாம் இது போன்ற விவாகரத்துக்கெல்லாம் சர்ச் அனுமதி கொடுப்பதில்லை. கலாசார மாற்றங்களின் விளைவாக இன்று மிகப்பெறும் அச்சுறுத்தலாக விவாகரத்து இந்நாட்டை உலுக்கி எடுக்கிறது.
ஐந்தாவது இடம் உக்ரைனுக்கு:
ஐந்தாவது இடத்தில் உள்ள உக்ரைன் பெற்ற புள்ளி விபரங்கள் 3.79. ரஷ்யாவோடு ஒன்றாக இருந்த போது குடும்பங்களும் ஓரளவு ஒன்றாக இருந்தன. ரஷ்ய குடியரசிலிருந்து பிரிந்தவுடன் மேற்கத்திய கலாசாரம் இங்கும் குடும்பங்களை பிரித்து விட காரணமாகிறது. பல பெற்றோர்கள் குழந்தை பெறுவதையே தவிர்க்கின்றனர். அதற்கு காரணமாக நாட்டின் பொருளாதாரத்தைச் சுட்டிக் காட்டுகின்றனர். குழந்தை பிறக்காததும் விவாகரத்துக்கு முக்கிய காரணமாக அமைகிறது.
ஆறாவது இடத்தில் இருப்பது பெலாருஸ்:
ரஷ்ய குடியரசுக்கு உட்பட்ட பெலாருஸ் நாடு ஆறாவது இடத்தைப் பெற்றுள்ளது. பொருளாதார தேக்கமும் மேற்கத்திய கலாசாரம் இந்நாட்டில் புகுந்ததும் இதற்கு முக்கிய காரணமாகிறது.
ஏழாவது இடத்தில் இருப்பது மால்டோவா:
பொருளாதார தேக்க நிலையும் மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டதும் காரணமாக சொல்லப்படுகிறது.
எட்டாவது இடம் கியூபாவுக்கு:
கியூபாவில் நடக்கும் விவாகரத்தின் சதவீதம் 3.16 ஆக உள்ளது. இங்கு திருமணத்தை தங்களின் பொரளாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் ஒரு மார்க்கமாகப் பார்க்கின்றனர். பல மொழிகள் கலந்திருப்பதும் இது போன்ற விவாகரத்துகள் அதிகரிக்க காரணமாகின்றன.
ஒன்பதாவது இடம் செக்கோஸ்லோவாகியா:
விவாகரத்துகள் 3.11 சதவீதம் நடந்து உலகின் ஒன்பதாவது இடத்தைப் பெற்றுள்ளது.
பத்தாவது இடத்தில் இருப்பது தென் கொரியா:
சுனு என்ற தென் கொரியாவின் திருமண வரன் தேடும் ஏஜன்சியின் தலைவர் நியூயார்க் டைம்ஸூக்கு பேட்டி கொடுக்கும் போது சொன்னதாவது: 'இதற்கு முன்பு இவ்வாறான மோசமான நிலை ஏற்பட்டதில்லை. வருடா வருடம் விவாகரத்துகள் அதிகமாகிக் கொண்டே வருகின்றன. எங்களுக்கென்று தனி பாரம்பரிய பெருமை உண்டு. அதை நாங்கள் இழந்து வருகிறோம்' என்கிறார்.
நம் பாரத நாட்டிற்கென்று தனிப் பாரம்பரியம் பெருமை உண்டு. ஆனால் மேற்கத்திய மோகத்தால் அதனை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறோம். ஆங்கில மொழி மோகமும் ஆங்கில கலாசாரத்தை சுவீகரித்துக் கொள்வதிலும் மேற்கண்ட நாடுகளோடு போட்டி போடுகிறோம். நமது நாட்டிலும் விவாகரத்து தினம் தினம் அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயம்.
இதில் மற்றொரு ஆச்சரியமான விஷயம் இஸ்லாமியர்கள் தலாக் தலாக் தலாக் என்று அநியாயத்துக்கு பெண்களை விவாகரத்து பண்ணி கொடுமைபடுத்துகிறார்கள் என்று கூறுவோர் உண்டு. அதிசயமாக இந்த பட்டியலில் ஒரு முஸ்லிம் நாடு கூட வராததை பார்த்து ஆச்சரியப்பட்டேன். விவாகரத்தை சிரமாக்கிய ஒரு சமூகம் சதவீதத்தில் அதிகமாக இருக்கிறது. விவாகரத்தை மிக இலகுவாக்கிய இஸ்லாமியர்களிடம் விவாகரத்து குறைந்துள்ளதை இந்த நேரத்தில் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
http://www.siliconindia.com/news/general/10-Countries-With-the-Highest-Divorce-Rates-nid-117138-cid-1.html
--------------------------------------------------------------------------
(இத்தகைய) தலாக் இரண்டு முறைகள் தாம் பின் (தவணைக்குள்)முறைப்படி கணவன், மனைவியாகச் சேர்ந்து வாழலாம் அல்லது நேர்மையான முறையில் பிரிந்து போக விட்டுவிடலாம் அவ்விருவரும் இறைவனின் வரம்புகளை நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சும் போது தவிர. நீங்கள் மனைவியருக்கு கொடுத்தவற்றிலிருந்து யாதொன்றையும் திருப்பி எடுத்துக் கொள்ளுதல் கூடாது - இன்னும் நீங்கள் இறைவனின் வரம்புகளை அவர்களால் நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சினால், அவள் (கணவனுக்கு) ஏதேனும் ஈடாகக் கொடுத்து(ப் பிரிந்து) விடுவதில் குற்றமில்லை. இவை இறைவன் ஏற்படுத்தியுள்ள வரையறைகளாகும். ஆகையால் அவற்றை மீறாதீர்கள். எவர் இறைவனின் வரையறைகளை மீறுகிறார்களோ, அவர்கள் அக்கிரமக்காரர்கள் ஆவார்கள்.
-குர்ஆன் (2:229)
மீட்ட முடியாதபடி (அதாவது இரண்டு தடவை தலாக் சொன்ன பின்னர் மூன்றாம்) தலாக் சொல்லிவிட்டால் கணவன் அப்பெண்ணை மறுமணம் செய்து கொள்ள முடியாது. ஆனால் அவள் வேறு ஒருவனை மணந்து அவனும் அவளை தலாக் சொன்னால் அதன் பின் (முதற்) கணவன் மனைவி சேர்ந்து வாழ நாடினால் - அதன் மூலம் இறைவனின் வரம்புகளை நிலைநிறுத்த முடியும் என்று எண்ணினால், அவர்கள் இருவரும் (மறுமணம் செய்து கொண்டு மணவாழ்வில்) மீள்வது குற்றமல்ல. இவை இறைவனின் வரையறைகளாகும்டி இவற்றை அல்லாஹ் புரிந்து கொள்ளக்கூடிய மக்களுக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறான்.
-குர்ஆன்(2:230)
இன்னும், பெண்களை நீங்கள் தலாக் செய்து, அவர்களும் தங்களுடைய இத்தா தவணையைப் பூர்த்தி செய்து விட்டால், அவர்கள் தாங்கள் விரும்பி ஏற்கும் கணவர்களை முறைப்படித் திருமணம் செய்து கொள்வதைத் தடுக்காதீர்கள். உங்களில் யார் இறைவனின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளார்களோ, அவர்களுக்கு இதைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறது. இ(தன்படி நடப்ப)து உங்களுக்கு நற்பண்பும், தூய்மையும் ஆகும் (இதன் நலன்களை) இறைவன் அறிவான் நீங்கள் அறிய மாட்டீர்கள்.
-குர்ஆன்(2:232)
ஆம் முஸ்லிம்களிடம் விவாகரத்தின் சதவீதம் குறைவாக இருக்க காரணம் அவர்களிடம் உள்ள இறைபக்தி என்றால் மிகையாகாது. அநியாயமாக ஒரு பெண்ணை தலாக் சொன்னால் அதன் பலனை மறுமையில் தண்டனையாக பெறுவான்: அதே போல் மனைவியும் பெறுவாள் என்று பெரும்பாலான முஸ்லிம்கள் மறுமையை நம்புவதும் மேற்கத்திய கலாசாரத்துக்கு அடிமையாகாமல் இருப்பதும் கூட காரணமாக இருக்கலாம்.
No comments:
Post a Comment