நாகூர் சந்தனக்கூடு ஊர்வலத்தில், மின்கம்பியில் ரதம் மோதி 2 வாலிபர்கள் பரிதாப சாவு...
நாகை :நாகூர் சந்தனக்கூடு ஊர்வலத்தின் மின்கம்பியில் ரதம் மோதி, 2
வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும் 2 பேர் உடல் கருகினர். நாகூர்
சந்தனக்கூடு ஊர்வலம் நேற்றிரவு 11 மணியளவில் நாகை அபிராமி அம்மன்
திருவாசலிலிருந்து புறப்பட்டது. சந்தனக்கூடு முன்னே செல்ல, நாகை, நாகூர்
உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறு, சிறு அலங்கார ரதங்கள்
பின்தொடர்ந்து செல்வது வழக்கம். அதன்படி நாகை புதுத்தெருவை சேர்ந்த தமீம்
அன்சாரி(23), நாகை கீரைக்கொல்லைத் தெரு உடையார் தோப்பை சேர்ந்த சபீர்
என்கிற அப்துல் ஹமீது(20) ஆகியோர் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு
ரதத்தில் உட்கார்ந்து சென்றனர். அந்த ரதத்தை கும்பகோணம் பந்தநல்லூர் பள்ளி
வாசல் தெருவை சேர்ந்த ஆசிக்(21),
திருவாரூர் மாவட்டம்
அடியக்கமங்கலம் புதுமனைத்தெருவை சேர்ந்த விஸ்வான் அலி(25) உள்ளிட்ட சிலர்
தள்ளிக் கொண்டு சென்றனர். இன்று அதிகாலை 5 மணிக்கு நாகூர் குஞ்சாலி
மரைக்காயர் தெருவில் இந்த ரதம் சென்று கொண்டிருந்தபோது, மேலே சென்ற
மின்கம்பி மீது ரதம் மோதியது. அப்போது ரதத்தில் மின்சாரம் பாய்ந்ததில்,
அதில் இருந்த தமீம் அன்சாரி, சபீர் ஆகியோர் அதே இடத்தில் இறந்தனர். ரதத்தை
தள்ளிக் கொண்டு சென்ற ஆசிக், விஸ்வான் அலி ஆகியோர் உடல் கருகினர். அவர்கள்
இருவரும் நாகை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=25796
No comments:
Post a Comment