Digital Time and Date

Welcome Note

Wednesday, May 2, 2012

''கர்ப்பம்'' இஸ்லாமின் பார்வை

அஸ்ஸலாம் அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு''


இறைவன் முதல் மனிதனை மண்ணால் படைத்து அவற்றிலிருந்தே அவருக்கு துனையையும் படைத்தான். அதன் பிறகு இருவரின் மூலமாக மனிதவர்க் கத்தைப் இந்தியதைக் கொண்டு படைத்ததாக அல்லாஹ் கூறுகிறான்.
...
(கர்ப்ப கோளறையில்) செலுத்தப்படும் போதுள்ள இந்துரியத் துளியைக் கொண்டு. (உங்களைப் படைக்கிறான்). அல்குர்ஆன்:53;46

(கர்ப்ப கோளறையிள்) சொட்டு சொட்டாய் ஊற்றப் படும்
இந்துரியத்துளியாகத் அவன் இருக்க வில்லையா (அல்குர்ஆன்:75:37)

அன்றியும் அல்லாஹ்தான் உங்களை (முதலில்) மண்ணால் படைத்தான்; பின்னர் ஒரு துளி இந்துரியத்திலிருந்து - பின் உங்களை (ஆண் பெண்)
ஜோடியாக அவன் ஆக்கினான் அவன் அரியாமல் எந்த பெண்ணும் கர்ப்பம் தரிப்பதுமில்லை பிரசவிப்பதுமில்லை. இவ்வாறே ஒருவருடைய வயது
அதிகரிமாக்கப்படுவதும் அவருடை வயதிலிருந்து குறைப்பதும் (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) ஏட்டில்
இல்லாமிலில்லை; நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு
எளிதானதேயாகும். (அல்குர்ஆன்;35:11)

இந்துரியத்துளி மூலமாக மனிதனை உருவாக்குவதற்காக இறைவன் தேர்வு செய்த இடம்தான் 1 தந்தையின் முதுகந்தண்டு. (இங்கு இந்திரியமாக மனிதக் கருவை சேமித்து வைத்தல்) 2 தாயின் கர்ப்பப்பை (இங்கு மாறுப்பட்ட நிலைகள் ஏற்பட்டு மனிதன் உருவாக்குதல்) கர்ப்ப கோளறை.

இதைதான் இறைவன் அல்குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான்:

உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உண்டாக்கிப் பின்னர் (உங்கள் தந்தையிடம்) தங்க வைத்து (பின்னர் கர்ப்பத்தில் ஒப்படைப்பனும் அவனே.
சிந்தித்து விளங்கக் கூடிய மக்களுக்கு நிச்சயமாக நம்
வசனங்களை தெளிவாக் விரித்துள்ளோம். (அல்குர்ஆன்:6:98)

மனிதன் தனது தந்தையின் முதுகந்தண்டில் இருந்த இடத்தை குறிப்பதற்கு ('தங்கவைக்கப் படுபவர்')
'முஸ்தாகர்ரு என்றும்

தாயின் கருவறையில் மறைத்து வைக்கப்பட்டதை ('மறைத்து வைக்கப்படுபவர்') முஸ்தவ்தா என்றும் (6:98)
இந்த வசனத்திற்கு இப்னு அப்பாஸ் (ரலி) விளக்கம் சொன்னதாக இமாம் இப்னுகதீர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.

அடுத்ததாக பல மாறுப்பட்ட நிலைகள் ஏற்பட்டு மனிதனாக உருவாக்குதல் பலவிதமான மாறுப்பட்ட
நிலைகள் ஏற்ப்பட்டு மனிதனாக உருவாக்கி அவனது விதியையும் நிர்ணயிக்கும் இடம்தான் கர்ப்ப கோளறை
இதைதான் இஸ்லாம் அா்ரஹ்ம்

மறைவானவற்றின் திறவு கோள்கல் ஜந்தாகும். அவற்றை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறிய மாட்டார்கள். பெண்களின் கருவறையில் ஏற்படும் குறைவை(யும் கூடுதலையும்) .நாளை நடக்கும் என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள் மழை எப்போது வரும் (உறுதியாக அறியமாட்டார்கள். எந்த உயிர்தான் எந்த இடத்தில் இறக்கும் என்பதை அறியாது; அல்லாஹ்தான் அதை அறிவான் மறுமை நாள் எப்போது வரும் என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் தெரியாது என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புஹாரி முஸ்லிம் 7379)
See More

No comments:

Post a Comment